வாண்மைத்துவமிக்க ஆசிரியத் தொழிலுக்காக ஆசிரியப் பயிலுனர்களை தயார்ப்படுத்தும் தேசிய கல்வியற் கல்லூரி என்றும் சிறந்தது.!

வாண்மைத்துவமிக்க ஆசிரியத் தொழிலுக்காக ஆசிரியப் பயிலுனர்களை தயார்ப்படுத்தும் தேசிய கல்வியற் கல்லூரி என்றும் சிறந்தது.!

ஒரு ஊரில் மிருகக்காட்சிச்சாலை நடத்துபவர் ஒருவர் இருந்தார். அவருடைய மிருகக்காட்சிச்சாலையிலுள்ள இரண்டு சிங்கத்தையும் பார்வையிடுவதற்கே தினமும் வருகைத் தருபவர்களுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. ஒரு நாள் பெண் சிங்கம் இறந்து போய் விட்டது. அத்துடன் அவருடைய மிருகக்காட்சிச் சாலைக்கு வருபவர்கள் நன்றாகவே குறைவடைந்தன.

அந்த சமயம் பாத்திமா' என்ற பெண் பல்கழைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேல் வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்தாள். எவ்வளவு வேலை தேடியும் அவளுக்கு ஒன்றுமே சரிவரவில்லை. கடைசியில் அந்த மிருகக்காட்சிசாலை நடாத்துபவர் 'வேலைக்கு ஆள் தேவை' என்று முகப்புகத்தில் போட்டிருந்த பதிவை பார்த்தாள். அவருடைய மிருகக்காட்சிச்சாலைக்கு பெண் சிங்கம் போல் நடிக்க ஆள் தேவை என்றும் மாதம் சம்பளம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. கடைசியில் அவளும் அந்த வேலைக்கு சென்றாள். அங்கு போய் கூட்டினுள் அடைக்கப்பட்டு பெண் சிங்கம் போன்று வேடமிட்டாள்.

அதற்கு பிறகு மிருகக்காட்சிச் சாலைக்கு வருபவர்களுடைய எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்தது. மேலும் அவளுக்கு மாதம் சம்பளமும் கிடைக்கப் பெற்றது. ஒரு நாள் மிருகக்காட்சிச்சாலை நடாத்துபவர் பெண் சிங்கத்திற்கு அருகிலுள்ள ஆண் சிங்கத்தின் கூட்டினை மூட தவறி விட்டார். அந்த ஆண் சிங்கமும் அதன் கூட்டிலிருந்து பெண் சிங்கத்தினுடைய கூட்டை நோக்கி மெதுவாக வந்தது. இதை கண்ட, பெண் சிங்கம் போல் வேடமிட்ட பாத்திமா திகைத்து போனாள். நன்றாக பயந்து என்ன செய்வதே என்று அவளுக்கு தெரியவில்லை. என்னுடைய கதி அவ்வளவு தான்,அதற்கு நான் இறையாக போறேன் என்று நினைத்தாள்.


இக்கதையை வாசித்து கொண்டிருப்பவர்களுடைய மனம் திக் திக் என்று இருக்கும். என்ன நடக்க போகுது என்று யோசிப்பீர்கள்?

அந்த ஆண் சிங்கம் பெண் சிங்கத்தின் காதிற்கு அருகில் வந்து 'பயப்படாதே நான் தான் ஹஸன் கலைமானி பட்டம் முடித்தவன்' என்று கூறினான்.

இந்த கதையின் மூலம் என்ன விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இன்றைய காலத்தில் மாணவர்கள் எவ்வளவோ பட்டப்படிப்பை முடித்து படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் இருக்கின்றனர். மேலும் கூறப் போனால், தான் படித்த படிப்புக்கு தகுதியான வேலையை செய்வதை விட்டு வேறு என்னமோ செய்து கொண்டிருக்கின்றார்கள். படித்து சம்பாதிப்பதை விட நடித்து சம்பாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் தேசிய கல்வியற் கல்லூரிக்கு தெரிவாகியிருப்பவர்களுக்கு அவ்வாறு இல்லை. அங்கிருந்து வெளியேறும் போது கௌரவமிக்க அரசாங்க தொழிலான ஆசிரியத் தொழிலுடனே வெளியேருவார்கள். நமக்கு கிடைக்கும் கல்லூரி வாய்ப்பு அதை வாய்ப்பு என்று சொல்லுவதை விட வரம் என்று சொல்லலாம். இந்த வரம் கிடைத்த அனைவரும் பாக்கியஷாலிகள்.

கல்வியற் கல்லூரி பல கட்டுப்பாடுகளுடன் நம்மை சீர் செய்து பயிற்சியுடனான ஆசிரியத் தொழிலை நமக்கு வழங்குகிறது. ஆசிரியத் தொழிலை எடுத்து கொண்டால் இவ்வுலகில் சிறந்த தொழில் என்று அதை கூறலாம். நிறைய பேர் யோசிப்பீர்கள் அதை விடவும் வைத்தியர், சட்டத்தரணி, பொறியியளாரர், கணக்காளர் போன்ற தொழில் இருக்கின்றதே என்று. ஆனால் அவர்களை உருவாக்குவதே இந்த ஆசிரயர் தான். எனவே ஆசிரியத் தொழிலே என்றும் சிறந்தது. அந்த ஆசிரியத்தொழிலை தரும் தேசிய கல்வியற் கல்லூரிக்கே புகழனைத்தும்.

மேலும் தேசிய கல்வியற் கல்லூரி என்றும் சிறந்தது. எனவே இந்த கல்லூரி வாய்ப்பு கிடைத்திருக்கும் அனைவரும் அதை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தில் வாண்மைத்துவமிக்க ஆசிரியராக வர வேண்டும்.

Written by  

M.N. Nasir Hasan

Post a Comment

Previous Post Next Post