NASIR HASAN 100% REAL LIFE STORY CHAPTER 1
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் கடற் போக்குவரத்து தோணியின் மூலம் காணப்பட்டது. நினைத்த படி இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்ல முடியும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தர முடியும். அப்படிப்பட்ட காலப்பகுதியில், இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 'பாவா மொஹிதீன்' எனபவர் தோணியின் மூலம் இலங்கைக்கு வருகை தந்தார். அவர் இலங்கை நாட்டு யட்டியாந்தோட்டை நகரைச் சேர்ந்த 'பல்கீஸ்' என்ற பெண்மணியை மணமுடித்தார். பாவா மொஹிதீன், பல்கீஸ் ஆகிய தம்பதியினர், இலங்கையில் கேகாலை மாவட்டத்தில், யட்டியந்தோட்டை நகரில், கல்லுமலைப் பகுதியில் குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தனர்.
அக் காலத்தில் யட்டியாந்தோட்டை நகரம் 'யடவனதொட' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அந்நகர் வெள்ள அனர்த்தத்தினால் சம்பூர்ணமாக பாதிப்புக்குள்ளாவதனால் 'யடவன தொட' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'யட்டியாந்தோட்டை' என்று அழைக்கப்பட்டது. யட்டியாந்தோட்டை நகரம் அனைத்து வசதிகளையும் கொண்ட நகராக ஆரம்பத்திலிருந்து காணப்பட்டது. அக்காலத்தில் நீர் வசதிகளுக்காக ஆறேழு கிணறுகள் காணப்பட்டன. மேலும் புகையிரதங்களின் மூலம் போக்குவரத்துக்களும் இடம்பெற்றன. இப்பேற்பட்ட சிறப்புமிக்க ஊரில் பாவா மொஹிதீன், பல்கீஸ் ஆகிய தம்பதியினருக்கு மகனாக 1932 இல் முஹம்மத் கபீர் பிறந்தார்.
கபீர் யட்டியாந்தோட்டையிலிருந்து கொழும்பிற்கு தையல் வேலைக்கு செல்லும் சமயம், 'கரீம் பீபி' என்ற பெண்ணுடன் பழகி, அவளை திருமணம் முடித்தார். இருவருக்கும் 3 ஆண் குழந்தைகளும் 2 பெண் குழந்தைகளும் பிறந்தன. கபீர் இளமைக்காலத்திலிருந்து அனைத்திலும் நல்ல திறமையுடையவர். நன்றாக வாதிடும் திறமை அவரிடத்தில் மேலோங்கி காணப்பட்டது. பல அரசியல் வாதிகளுடன் அவர், தொடர்புகளை மேற்கொண்டவராக காணப்பட்டார். அவரது சிறந்த நண்பராக என்.எம் பெரேரா காணப்பட்டார். என்.எம். பெரேரா, இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான, இலங்கை சமசமாஜக் கட்சியை ஆரம்பித்து வைத்தவராவார்.
அக்காலத்தில் இலங்கையில் வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி இருக்கவில்லை. என்.எம். பெரேராவிற்கு எதிராக கிளர்ச்சிகளை மேற்கொண்ட அரசியல் வாதிகள், வெளிநாட்டுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். தேர்தலில் தனக்கு வாக்களித்து, தன்னை வெற்றி பெறச் செய்தால், வெளிநாட்டுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வர முயற்சிகளை செய்வதாக எதிர்கட்சிக்காரர் கூறினார். "வெளிநாட்டுப் பொருட்கள் இலங்கைக்கு வந்தால், பாரியளவு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்" என எம்.எம்.பெரேரா கூறினார். ஆனால் மக்கள் யாரும் அதை நம்பாமல், தேர்தலின் போது எதிர்கட்சிக்காரர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிப் பெறச் செய்தனர். இதனால் என்.எம் பேரேரா தேர்தலில் தோற்றது மட்டுமல்லாமல் "மக்கள் யாரும் தன்னை நம்பவில்லை" என்ற பெரும் கவலையில் மிகவும் நொந்து போய் காணப்பட்டார். அவருக்கு ஆறுதலாக, 'சிறந்த நண்பர்' என்ற வகையில் கபீர் கடைசி வரைக்கும் அவருடன் இருந்தார். சில காலங்களிற்கு பிறகு என்.எம். பெரேரா உயிரிழந்தார்.
கபீரது பிரதான தொழிலாக, தையல் தொழில் காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் விறகு பொழந்து, தோட்ட வேலைகளை செய்து குடும்பத்திற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். மேலும், தனது ஐந்து பிள்ளைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கினார். கபீருடைய மகனான நிதவ்ஸ் எனபவர், நன்றாக படித்து சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்து, விஞ்ஞானப் பிரிவில் உயர்தரப் பரீட்சை எழுதி, நன்றாக சித்தியடைந்து, கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான பாட ஆசிரியரானார். அக்காலத்தில் ஆசிரியர் ஒருவருக்கான மாத சம்பளம் ஆயிரம் ரூபாக காணப்பட்டது. "ஆயிரம் ரூபாய் தான் சம்பளம், சம்பளம் குறைவு" என்ற காரணத்தினால் அவர் குறுகிய காலத்திலே ஆசிரியத் தொழிலை கைவிட்டார். Medical Laboratory Technology Course ஐ செய்து, கொழும்பு பெரிய வைத்தியசாலை ஒன்றில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதிக்கும் வைத்தியராக பணிபுரிந்தார். பின்னர் யட்டியாந்தோட்டையில் வாடகைக்கு கடையொன்றை எடுத்து அவ் வைத்தியத் தொழிலை சிறப்பாக செய்து வந்தார். மேலும் அவர், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை உடைய, அனைத்து மக்களாலும் மதிக்கத்தக்க, கௌரவமான மனிதராக காணப்பட்டார்.
கபீர், தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த பிறகு, நிதவ்ஸ் இற்கு குருனாகொடையைச் சேர்ந்த 'இனாயா' என்ற பெண்ணை திருமணம் பேசினார். இனாயா, அழகான, நல்ல குணமுள்ள ஒரு பெண். சிங்கள பாடசாலையில் கல்வி கற்ற அவள், சாதாரண தரப்பரீட்சையிலும், உயர்தரப் பரீட்சையிலும் சித்தியடைந்தவள். இனாயாவை பற்றி மேலும் கூறப்போனால், படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையில் நன்கு தேர்ச்சிப் பெற்றவளாக காணப்பட்டாள். கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பாடசாலைகளிற்கிடையில் ஓட்டப்போட்டிகளில் அவள் பங்குபற்றி முதலிடம் பெற்ற பெண் என்பது சிறப்புக்குரிய விடயமாகும். விளையாட்டு போட்டிகள் பலவற்றில் பங்குபற்றி முதலிடம் பெற்று, பல சான்றிதழ்களை வென்றெடுத்தது மட்டுமல்லாமல் இலங்கையின் பிரபல ஓட்ட வீராங்கனை 'சுசந்திகா ஜயசிங்க' அவர்களுடனும் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றி, அதில் நான்காவது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிதவ்ஸிற்கும் இனாயாவிற்கும் 1998 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. பிறகு இனாயா, நிதவ்ஸின் கல்லுமலை வீட்டிற்கு வாழச் சென்றாள். அங்கு சென்றதிலிருந்து நிம்மதி இல்லாத சந்தோஷம் இல்லாத ஒரு வாழ்க்கையையே அவள் வாழ்ந்து வந்தாள். கணவருடைய குடும்பத்தவர்களினால் பல இன்னல்களுக்கு அவள் முகம் கொடுத்தாள். பல கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக் கொண்ட இனாயா, அனைத்திலும் பொறுமையை கடைபிடித்து வாழ்ந்து வந்தாள். மேலும் தன் வாழ்க்கையையே வெறுத்த நிலையில் அவள் காணப்பட்டாள். இருளடைந்து போன இனாயாவின் வாழ்க்கையை வெளிச்சமாக்க, 1999 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி அவளுக்கு 'நாஸிர் ஹஸன்' எனும் மகன் பிறந்தான்.
நாஸிர் ஹஸனை அவளது தாய், பல இன்னல்களுக்கு மத்தியில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தாள். ஒரு முறை அவள், கணவரின் குடும்பத்தவர்களினால் படும் வேதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமால், அனைவருடனும் கோபித்துக் கொண்டு, 7 மாத கைக்குழந்தையாக இருந்த ஹஸனை தூக்கிக் கொண்டு, அவளது சொந்த ஊர் குருணாகொடை வீட்டிற்கு சென்றாள். சில நாட்களிற்கு பிறகு, ஹஸனுடைய தந்தை குருணாகொடைக்கு சென்று, அவளை சமாதானப்படுத்தி, கல்லுமலை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
சில காலம் செல்ல, கணவரது குடும்பத்தவர்கள் மீண்டும் மீண்டும் அவளை நிம்மதியாக இருக்கவிடவில்லை. கடைசியில் இனாயா, "இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது" என்று நினைத்து, அவளுடைய அனைத்து தங்க நகைகளையும் தனது கணவருக்கு விற்குமாறு கொடுக்க, விற்று கிடைத்த பணத்திற்கு, அவர் வைத்திய தொழில் செய்த, அக்கடையை சொந்தமாக வாங்க, இனாயா ஹஸனை கூட்டிக் கொண்டு அங்கு வாழச் சென்றாள். அக் கடையின் பிற்பகுதியும் மேற் பகுதியும் வீடாக காணப்பட்டது. அங்கு சென்றதற்கு பிறகு, அவள் சற்று நிம்மதியடைந்தாள். ஹஸனுக்கு நான்கு வயதாக இருந்த போது, 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி அவனுக்கென்று 'ஸஹ்ரா ஜஹான்' என்ற ஒரு சகோதரி பிறந்தாள்.
ஐந்து வயதில் நாஸிர் ஹஸன், ஒரு வருட முன் பள்ளிக் கல்வியை கற்ற பிறகு, சொந்த ஊரில், கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலத்தில், முதலாம் வகுப்பிலிருந்து ஆரம்பக் கல்வியை தொடர்ந்தான். பாடசாலையில் ஆரம்பத்திலிருந்தே அவன் படிப்பில் கெட்டிக்காரனாக காணப்பட்டான். படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் நன்கு திறமையுடையவனாக காணப்பட்டான். சிறுவயதில் அவன், முன் வீட்டிலுள்ள ஜாசிம், ஜெஸ்லி ஆகியோருடன் நண்பர்களாக பழகினான். இருவருடனும் சேர்ந்து மல்யுத்ததில் சண்டை பிடிப்பது போல் உண்மையாகவே சண்டை பிடித்து விளையாடுவதும், அனைவருடனும் இணைந்து கிரிக்கட் விளையாடுவதுமே பொழுது போக்காக காணப்பட்டது.
நாஸிர் ஹஸன் இளம் வயதிலிருந்து கிரிக்கட் விளையாட்டை மிகவும் நேசித்தான். 'எதிர்காலத்தில் கிரிக்கட் வீரராக வர வேண்டும்' என்பது தான் அவனது இலட்சியமாக காணப்பட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் அருகிலுள்ள மைதானத்திலே தான், அவனுடைய காலநேரங்கள். பாடசாலைக்கு சென்றாலும் ஒரே விளையாட்டு தான். அது மட்டுமல்லாமல் வீட்டிலும் எந்நேரமும் இரவு பகல் என்றில்லை சுவரில் பந்தை எரிந்து, பந்து சுவரில் பட்டு வரும் போது, அதனை அவன் மட்டையினால் அடித்து, தனியாக விளையாடிக் கொண்டே இருப்பான்.
இந்தியா அணியின் பிரபல கிரிக்கட் வீரர் வீரேந்தர் சேஹ்வாக் அவர்களின் பெயரை சோக் கலரால் அவனுடைய ஜேர்சியின் பின்புறத்தில் எழுதி, ஜேர்சியை அணிந்து விளையாடச் செல்வான். பாடசாலை விடுமுறை நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை விடிய முன்பே மட்டையை எடுத்து கொண்டு, கிரிக்கட் விளையாட மைதானத்திற்கு செல்வான். பாடசாலை நாட்களிலும் நேரகாலத்துடன் பாடசாலைக்கு சென்று, பாடசாலை ஆரம்பிக்கப்பட முன்பு, அனைவரையும் அழைத்துச் சென்று கிரிக்கட் விளையாடுவான். "கிரிக்கட் வீரராக வர வேண்டுமென்றால் ப்ளாஸ்டிக் பந்தில் இல்லை. லெதர் பந்தில் தான் விளையாட வேண்டும்" என்று அவனுடைய தாய் கூற, சிறுவயதிலே அவன், லெதர் பந்தில் கிரிக்கட் விளையாடினான். யட்டியந்தோட்டையில் பெரிய மைதானத்திற்கு சென்று, அங்கு லெதர் விளையாடுபவர்களுடன் இணைந்து லெதர் விளையாடினான். அதிலும் கூட அவன் மேலும் சிறப்பாக செயற்பட்டான்.
“நீ நன்றாக படித்து, 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால், உன்னை கண்டியில் பெரிய பாடசாலையொன்றுக்கு போடுவேன், அங்கு சென்று உன் திறமையை வெளிக்காட்டினால், கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்ற உன்னுடைய இலட்சியத்தை உன்னால் அடைய முடியும்" என்று ஹஸனின் தந்தை ஹஸனிடம் கூறினார். ஹஸனுக்கு அது சந்தோஷமாக இருந்தாலும், அவனது தாயை விட்டு பிரிந்து செல்ல, அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. சில மாதங்களிற்கு பிறகு, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையையும் ஹஸன் எழுதி, அதன் பெறுபேறும் வந்தது. நன்றாக படித்த ஹஸன், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை. "பரீட்சையில் சித்தியடைந்தால், ஹஸனை அவனுடைய தந்தை, கண்டியில் பெரிய பாடசாலையொன்றுக்கு போடுவதாக சொன்னதால், போக விருப்பமில்லாததனால் வேணுமென்றே சித்தியடையவில்லை" என்று குடும்பத்தில் பலர் கூறினர்.
ஹஸனுடைய தந்தை, தன் கடையை இரண்டாக பிரித்து, ஒரு பகுதியை சில்லறைக் கடையாக்கினார். மற்றைய பகுதியில் அவர், வைத்தியத் தொழிலை மேற்கொண்டார். கடையில் வியாரபாரமும் நன்றாக வளர்ச்சியடைய, அவர் வைத்திய தொழிலை கைவிட்டு, கடையை மொத்தமாக பெரிய சில்லறைக் கடையாக மாற்றினார். அதில் அவர் பாரியதொரு முன்னேற்றம் கண்டார். ஹஸனது தந்தையை விடவும் ஹஸனது தாய், கடையை சிறந்த முறையில் செய்து வந்தாள். மேலும் ஹஸனின் தந்தைக்கு முஸ்லிம் திருமணப்பதிவாளர் தொழிலும் கிடைக்கப் பெற்றது. அதனையும் அவர் சிறந்த முறையில் மேற்கொண்டார். ஊர் மக்கள் உட்பட அனைவருக்கும் அவர் செய்த சேவைகளினூடாக சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தை, அவர் அடைந்தார்.
ஹஸனது தந்தை யட்டியாந்தோட்டையில் சொந்தமாக எழுதி வாங்கிய, கடையின் பின்னாலுள்ள ஒரு பகுதி, பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேஷன் அவர்களுடைய தந்தைக்கு சொந்தமானது என்று மனோஷன் அவர்கள் கூறினார். மனோ கனேஷன் அவர்கள், ஹஸனது தந்தைக்கு எதிராக வழக்கு போட்டு, 2011 ஆம் ஆண்டில், வழக்கில் அவர் வென்று, உடனே எல்லோரையும் இரவோடு இரவாக கடையை மொத்தமாக காலி செய்து விட்டு, போகுமாறு கூறினார். "எங்கு செல்வது, என்ன செய்வது" என்று ஹஸனுடைய தந்தைக்கு பெரும் யோசனை. ஹஸனும், அவனுடைய தாயும் "குருனாகொடைக்கு போவோம்" என்று விடாப்பிடியாக இருந்தனர்.
யட்டியாந்தோட்டையிலே வாடகைக்கு கடையொன்றை எடுக்குமாறும், கல்லுமலை வீட்டிற்கு வந்து தங்குமாறும், ஹஸனுடைய தந்தையுடைய குடும்பத்தவர்கள் அனைவரும் கூறினார்கள். ஹஸனுடைய தாய், ஒரு துளி கூட விருப்பப்படவில்லை. கடைசியில் அனைவரும், கடையிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு, சொந்த ஊர் யட்டியாந்தோட்டையை விட்டு வெளியேறி, ஹஸனின் தாயினுடைய சொந்த ஊரான குருணாகொடைக்கு வாழச் சென்றனர். பிறகு ஹஸனுடைய தந்தை குருணாகொடைக்கு அருகிலுள்ள பிரதான நகரமான கொட்டியாக்கும்புரவில் வாடகைக்கு கடையொன்றை எடுத்தார். சில மாதங்களில் அங்கே வீடொன்றையும் வாடகைக்கு எடுத்தார் பிறகு அனைவரும் அங்கு சென்றனர்.
குருனாகொடைக்கு சென்றதிலிருந்து, நாஸிர் ஹஸன், பஸால், தலால், வலீத், அஸீஸ்,அன்சிப், உமைர் ஆகியோருடன் நண்பர்களாக பழகினான். கரம் விளையாடுவதே நாஸிர் ஹஸனுடைய பொழுது போக்காக காணப்பட்டது. கரம் விளையாட்டில், ஒரு கிங் ஆக, நாஸிர் ஹஸன் அனைவராலும் போற்றப்பட்டான். பஸால் என்பவனை பாட்னராக தெரிவு செய்து, எப்போதும் கரம் விளையாடுவதே வழக்கமாகியது. "எங்கள் இருவரையும் தோற்கடிக்க, எவனாவது ஒருத்தன், பிறந்து தான் வர வேண்டும்" என்றெல்லாம் கூறி, இருவரும் கரம் விளையாட்டில் பல தொடர் வெற்றிகளை பெற்றனர்.
மேலும், பலரை இணைத்து, கிரிக்கட் விளையாடுவதும், ஓடி, ஒழிந்து பிடித்து விளையாடுவதிலுமே காலம் கழிந்தன. மேலும் 'வலீத்' என்பவனுடன் ஓடைக்கு சென்று, மீன் பிடித்து, அதனை வளர்ப்பதில் நாஸிர் ஹஸனுக்கு ஓர் இன்பம் காணப்பட்டது. அனைவரையும் அழைத்து, ஹஸன், கிரிக்கட் விளையாடும் போது, அவனுடைய விக்கட்டை வீழ்த்துவது கூட, அனைவருக்கும் பெரும் கஷடமாக இருந்தது. அவன் அடித்த ஒவ்வொரு ஒவ்வொரு சிக்ஸர்களினதும் பந்து, பிரதான பாதையில் தான். மற்றவர்களுக்கு வெறுத்து போய், விளையாட்டை கூட பாதியில் நிறுத்தி விட்டு செல்வர். கிரிக்கட் வீரர்களின் புகைப்படக் கார்ட்களை சேகரித்து, புதிதாக ஒரு விளையாட்டை ஹஸன் அறிமுகமாக்கினான். கார்ட் பெக்ஸ் விளையாட்டு போன்று காணப்பட்ட, அந்த விளையாட்டில், அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
தரம் 1 இலிருந்து தரம் 7 வரை, சொந்த ஊர் யடியந்தோட்டை கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற நாஸிர் ஹஸன், தாயினுடைய சொந்த ஊரான குருணாகொடைக்கு அருகிலுள்ள கொட்டியாகும்புர அல் அகீல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இலிருந்து கல்வியை தொடர்ந்தான்
பாடசாலை வாழ்க்கையிலே நாஸிர் ஹஸன், படிப்பில் தான், அவன் கூடுதலான கவனத்தை செலுத்தினான். பாடசாலையில் நடைபெற்ற ஒவ்வொரு தவனைப் பரீட்சைகளிலும் கூட, அனைத்து பாடங்களிலும் சிறந்த புள்ளிகளைப் பெற்றான். "கிரிக்கட் வீரராக வர வேண்டும்" என்ற இலட்சியத்தை அவன் மறந்து, "எதிர்காலத்தில் ஒரு ஆசிரியராக வர வேண்டும்" என்பதையே அவன் உறுதியாக, அவனுடைய இலட்சியமாக்கினான். அனைத்து ஆசிரியர்களும் ஹஸன் மீது நல்லொரு அபிப்பிராயமும் நம்பிக்கையும் வைத்தனர். படிப்பில் மேலும் கவனம் செலுத்தி, பாடசாலையில் நடைபெற்ற அனைத்து பரீட்சைகளிலும் கூட ஹஸன் சிறந்த புள்ளிகளைப் பெற்றான்.
படிப்பில் மட்டுமல்லாமல் அவனுக்கு அதிகமாக நடிப்பிலும் ஓர் ஆர்வம் இருந்தது. பாடசாலையில் பல இடங்களில், மயக்கம் போட்டு திடீரென்று கீழே விழுவது போல அவன் நடித்த நடிப்பு, ஆசிரியர்கள் உட்டப பல பேரை அச்சுறுத்தியது. சிறந்தவொரு, நடிப்பு திறமையும் ஹஸனிடம் காணப்பட்டது. சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகனில் ஒருவனாக ஹஸன் காணப்பட்டான். அவர் நடித்த படங்களில் கூறிய, சினிமா வசனங்கள் அனைத்தையும்,ஹஸன், தன்னுடைய குறளில் அனைவருக்கும் கூறிக்காட்டுவான். "அவரைப் போலவே, தானும் ஒரு நடிகராக வர வேண்டும்" என்ற ஒரு கனவு, ஹஸன் மனதில் ஏற்பட்டது. "அது நடக்காது" என்று தெரிந்து, நாஸிர் ஹஸன், அந்த ஆசையும் கைவிட்டான்.
திறமைகள் இருந்தும் பாடசாலையில், எந்தவொரு நாடக நிகழ்விலும் அவன் பங்குபற்றவில்லை. என்றாலும் பாடசாலையில் அனைத்து மாணவர்களுக்கும் மத்தியில், நாஸிர் ஹஸன் ஒரு ஹீரோவாக விளங்கினான். வருடாந்தம் பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல் போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பெற்றான். மேலும் கிரிக்கட் விளையாட்டில், துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கினான். மேலும் பந்துவீச்சியிலும் கூட "தூஸ்ரா, கெரம்" பந்துகளை வீசி, அனைவரையும் தினரச் செய்தான். பாடசாலை வாழ்க்கை கெத்தாக மாற, அனைவருடைய கண்களுக்கும், ஒரு ஸ்டார் ஆக, நாஸிர் ஹஸன் காட்சியளித்தான்.
தரம் 10 இல் கல்வி கற்ற போது, ஹஸன் ஒரு பெண்ணை விரும்பினான். ஆனால் அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசியதும் இல்லை, அவளுடன் பழகியதும் இல்லை. அந்த வயதில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு வயசுக்கோளாறு, மனதில் தோன்றிய எண்ணங்களை வைத்து, அவளின் பெயரை போட்டு, ஒவ்வொரு ஒவ்வொரு கவிதைகளை எழுதி, சமூகவலையத்தலையங்களில் போட்டான். இதனால் பல பிரச்சினைகள் அவனுக்கு ஏற்பட்டது. அவளின் குடும்பத்தினர்கள், ஹஸனை சாதாரணதரப் பரீட்சையை கூட எழுத விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். ஹஸனுடைய தந்தையினுடைய கௌரவத்திற்காகவும், ஊர் மக்களுக்கு அவர் செய்த நலவுகளுக்காக வேண்டியும், அவளின் குடும்பத்தினர்கள், ஹஸனை எதுவுமே செய்யவில்லை.
பாடசாலையில் இஸ்லாம் பாட ஆசிரியை, ஹஸன் மீது மிகுந்த அன்பும் பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்திருந்தார். ஹஸனும் அவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்தான். தன்னுடைய இரண்டாவது தாயாகவே ஹஸன் அவர்களை மனதில் நினைத்திருந்தான். எதையும் ஹஸன் அவர்களிடம் மறைத்ததில்லை. ஹஸனுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். ஹஸனுக்கு எதிராக பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம், அவர், ஹஸனுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தார்.
சாதாரணத்தரப் பரீட்சைக்குரிய நாளும் நெருங்கியது. ஹஸன் பரீட்சைக்காக நன்றாக படித்தான். சாதாரண தரப்பரீட்சைக்குரிய நாளும் வந்தது. ஹஸன் நன்றாக பரீட்சையை எழுதி, சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியடைந்து, அனைவரையும் ஆச்சிரியத்துக்குள்ளாக்கினான்.
சாதாரண தரப்பரீட்சையை ஹஸன் எழுதி முடித்து விட்டு, விடுமுறையில் வீட்டில் இருந்த போது, ஒரு நாள் ஹஸன், நல்ல நித்திரையில் இருக்க, தேவதை போன்ற பெண்ணொருத்தி அவனுடைய கனவில் வந்தாள். சொந்த ஊர் யட்டியாந்தோட்டையில், கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஹஸன், தரம் 7 இல் கல்வி கற்க போது, அந்த பெண் தரம் 6 இல் கல்வி கற்றது போன்ற ஒரு ஞாபகம் அவனுக்கு வந்தது. அதை ஹஸன் பெரிதாக கணக்கெடுக்கவில்லை.
ஒரு நாள் ஹஸன், குருணாகொடையில் அவனுடைய உமம்மா வீட்டிற்கு சென்றிருந்த போது, "பிலிங்கா மரத்திற்கு ஏறி பிலிங்கா பித்து தர முடியுமா?" என்று ஹஸனுடைய பெரியும்மா, ஹஸனிடம் கேட்டாள். ஹஸனும் "முடியும்" என்று கூறி, பிலிங்க மரத்திற்கு ஏறினான். பிலிங்க பித்துக் கொண்டிருந்த போது, கொப்பொன்றில் அவன் கால் வைக்க, கொப்பும் உடைந்து அவன் கீழே விழுந்தான். கீழே விழுந்த அதிர்ச்சியில் அவனுக்கு நினைவில்லாமல் போனது. அக்கம் பக்கத்திலுள்ள அனைவரும் ஓடி வந்து, நீரை எடுத்து, அவன் முகத்தில் தடவி, அவனை எழுப்பாட்ட, ஒரிரு நிமிடங்களில் அவனுக்கு நினைவு திரும்பியது. நினைவு திரும்பிய அந்த தருணத்திலும் கூட, கனவில் கண்ட அந்த பெண்ணே அவன் ஞாபகத்திற்கு வந்தது.
பிறகு ஹஸனை, கரனல்லை வைத்தியசாலையிற்கு அழைத்து சென்றனர். "ஹஸனுக்கு எந்தவொரு பாதிப்புமே இல்லை" என்று வைத்தியர் கூற, அந்த நாள் வைத்தியசாலையில் தங்கி, மறுநாள் ஹஸன் வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்றதிலிருந்து, "தான் கனவில் கண்ட அந்த பெண் யார்? அவளை கண்டு பிடித்தே ஆக வேண்டும்" என்ற ஒரே யோசனையும் ஆர்வமும், அவன் மனதில் ஊடுருவிச் சென்றன. மறுநாள் காலையில் ஹஸன், 'சைத்' என்ற அவனுடைய நண்பன் ஒருவனை தேடி, சொந்த ஊர் யட்டியாந்தோட்டைக்கு புறப்பட்டான்.
சைத்திடம் நடந்தவற்றையெல்லாம் ஹஸன் கூறி, உன்னுடைய வகுப்பில் உள்ள பெண்பிள்ளைகளின் பெயர்களை கூறுமாறு ஹஸன், சைத்திடம் கேட்டான். அதற்கு சைத், அவனுடைய வகுப்பிலுள்ள பெண் பிள்ளைகளின் பெயர்களை ஹஸனிடம் கூறினான். அவன் கூறிய ஒவ்வொருத்தியையும் ஹஸன் சற்று ஞாபகப்படுத்தி பார்த்தான். "சைத் கூறிய படி பாரத்தால், நிச்சியமாக அது அவள் ஆக தான் இருக்க வேண்டும்" என்று ஒரு பெண்ணை ஹஸன் நினைத்தான். 'ஒரு தடவையாவது அவளை நேரில் பார்க்க வேண்டும்' என்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது.
ஜெஸ்லி, ஜாசிம் ஆகிய இருவரிடமும் அவளை பற்றி விசாரித்துடன், அவளை நேரில் பார்ப்பதற்கும் ஹஸன் முயற்சித்தான், ஆனாலும் அவளைப் பார்ப்பதற்கான எந்தவொரு சாத்தியப்பாடும் காணப்படவில்லை. பிறகு ஹஸன், அதைப் போட்டு மனதை குழப்பிக் கொள்ளாமல் விட்டு விட்டான். சில நாட்களிற்கு பிறகு, ஹஸனுக்கு அந்த பெண்ணினுடைய பெயர் மிகவும் பிடித்து போனது. "எதிர்காலத்தில் எனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு அவளுடைய பெயரை தான் வைக்க வேண்டும்" என்று ஹஸன் ஆசைப்பட்டான்.
ஆரம்பத்தில் ஹஸனின் தாய், ஹஸனின் தந்தையை, திருமணமுடித்து, யட்டியாந்தோட்டை கல்லுமலை வீட்டிற்கு, சென்றதிலிருந்து, கணவரது குடும்பவர்களினால் பட்ட அனைத்து கஷ்டங்களையும், ஹஸனின் தாய், ஹஸனிடம் கூறினான். அவ்வனைத்தையும் கேட்ட ஹஸன், கல்லுமலை வீட்டிலிருந்த, மாமியின் மீது கடுமையாக கோபமடைந்தான். கொட்டியாகும்புரவிற்கு சென்றதலிருந்து, வாடகைக்கு ஒவ்வொரு வீடாக மாறும் போது, அவனுக்கு வெறுத்து போய், "தங்களுக்கென்று சொந்த வீடொன்று இல்லாததனால் தான், இந்த நிலமை" என்றும் சொந்த ஊர் "யட்டியாந்தோட்டையில் கல்லுமலை வீட்டினுடைய மேல் மாடியை கட்டி, அங்கு செல்வது தான் சரி" என்றும் பெற்றோரிடம் கூறினான். அதற்கு ஹஸனின் தாய் கொஞ்சம் விருப்பப்படவில்லை. "தந்தைக்கும், கல்லுமலை வீட்டை, அவருடைய சகோதரிக்கே மட்டுமே கொடுக்க வேண்டும்" என்று ஹஸன் கூறினான்.
ஒருமுறை ஹஸன், மாமி மீதிருந்த கோபத்தில் "என் தாய், என் தந்தையை திருமண முடித்து கல்லுமலை வீட்டிற்கு வாழச் சென்ற போது, அந்த வீட்டில் அவளை நிம்மதியாக இருக்கவிடவில்லை; என் தந்தை முன்பிலிருந்து, அந்த வீட்டிற்காக எவ்வளவோ பணம் செலவு செய்திருக்கின்றார்கள், ஒருவருக்கு மாத்திரம் அப்படி வீட்டை கொடுக்க முடியாது; மூத்த மாமியும் கூட மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறார்கள்; எங்களுக்கும் தந்தையினுடைய சொத்தில் பங்கு வேண்டும்; ஒவ்வொரு முறை இப்படி வாடகை்கு வீடு வீடாக மாறி மாறி இருக்க முடியாது; கல்லுமலை வீட்டை விற்பனைக்கு போடப் போகிறேன்; விற்று, அனைவருக்கும் சொத்தை, பங்கு பிரித்துக் கொடுப்பேன்" என்றெல்லாம் ஹஸன் கூறி, சொத்தில் பங்கு கேட்டு போராடினான்.
ஆரம்பத்தில் குடிசையாக இருந்த கல்லுமலை வீட்டை, அரண்மனை போல ஹஸனுடைய சாச்சாவே முழுமையாக கட்டியமைத்திருந்தார். அதன் அடித்தளத்தை மாத்திரமே ஹஸனுடைய தந்தை போட்டதாக கூறப்பட்டது. அனைத்து வசதிகளையும் கொண்ட, தற்காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு கோடி பெறுமதியான வீடாக காணப்பட்டது. "சொத்தை விற்றால், மற்ற நான்கு பேருக்கும் பங்கு பிரித்துக் கொடுங்கள்; எனக்கு அதில் எந்த பங்கும் தேவையில்லை" என்று ஹஸனுடைய சாச்சா மனப்பூர்வமாக கூறினார். கல்லுமலை வீட்டினுடைய காணியின் சில பகுதிகளை, அக்கம் பக்கத்திலுள்ள சில பேர் பிடித்து, வீடு கட்டியதனால், அவர்களுக்கு எதிராக, ஹஸனுடைய பாட்டனார் போட்ட வழக்கு, முடியும் வரை கல்லுமலை வீட்டை விற்க முடியாத நிலைமை ஒன்று இருந்தது.
ஹஸனுடைய சாச்சா வீட்டை கட்டிய பணத்தை விடவும், அந்த வீட்டு காணி வழக்கிற்காக ஹஸனுடைய தந்தை செலவு செய்த பணமே அதிகம். ஹஸன் எதிர்ப்பார்த்தது நடக்காமல் போனதற்கு, அந்த வழக்கு பெரும் இடைஞ்சலாக காணப்பட்டது.
உயர்தரம் கல்வியை கற்க ஹஸன், கொட்டியாகும்புர அல் அகீல் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சென்ற போது, ஹஸன் மீது மிகுந்த நம்பிக்கையும் பாசமும் வைத்த, இஸ்லாம் பாட ஆசிரியை "உங்கள் மனதிலுள்ள எதையுமே என்னிடம் மறைக்க வேண்டாம்; நம்பிக்கை வைத்து என்னிடம் கூறுங்கள்; கூற முடியாதவற்றை நான் டைரி யொன்றை தருவேன்; அதிலாவது எழுதி தாருங்கள்" என்று ஹஸனிடம் கேட்டாள்.
அதற்கு ஒன்றுக்குமே ஹஸன் விருப்பப்படவில்லை. ஹஸன் அந்த ஆசிரியரை தன்னுடைய இன்னொரு தாயாகவே மனதில் நினைத்திருந்தான். அவர்கள் மீது மிகுந்த அன்பும், பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்தான். அதனால் ஹஸன், அவன் மனதிலிருந்த ஆசைகள், கனவுகள் அனைத்தையும், சிவகார்த்திகேயன் நடித்த, ரஜனி முருகன் திரைப்படத்தின் சில காட்சிகளை வைத்து, எடிட் செய்த வீடியோ ஒன்றையும் அந்த ஆசிரியைக்கு அனுப்பினான்.
அன்று பெப்ரவரி 14 ஆம் திகதி. பாடசாலை விட்டு ஹஸன் வீட்டிற்கு வந்த பிறகு, பாடசாலையில் இருந்து கோல் ஒன்று வந்தது. ஹஸனை, நாளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவனுடைய தந்தையை, நாளை பாடசாலைக்கு வருமாறு, அதிபர் கூறினார். மறுநாள் ஹஸனுடைய தந்தை, பாடசாலைக்கு சென்றார். ஹஸனுடைய எடிடிங் வீடியோ உட்பட அனைத்தையும் அதிபர், ஹஸனின் தந்தைக்கு காட்டியதுடன், ஹஸன் பாடசாலையிலிருந்து தூக்கி எறியப்பட்டான். ஹஸனின் தந்தை, மாலை வீட்டிற்கு வந்ததும், "இதற்கு பிறகு, மகனுக்கு பாடசாலைக்கு போக முடியாது, பாடசாலை வாழ்க்கை அவ்வளவு தான்" என்று தாயிடம் கூறினார். அதை கேட்ட தாய், உடனே கீழே விழுந்து, மகனின் எதிர்காலத்தை நினைத்து, ஏங்கி ஏங்கி அழுதாள். தாயின் கனவே, "அனைத்து கஷ்டங்களுக்கும் மத்தியில், மகன் படித்து நல்லொரு நிலமைக்கு வர வேண்டும்" என்பதாகும்.
என்ன நடந்தது என்று பார்ப்பதற்கு, ஹஸன், அவன் வீட்டிற்கு மிக அருகிலிலுள்ள, இஸ்லாம் பாட ஆசிரியரின் வீட்டிற்கு சென்றான். கதவு திறந்து இருந்தது. ஹஸன், ஸலாம் கூறி, கூப்பிட யாருமே வரவில்லை. கடைசியில் அவருடைய கணவர் வந்து, வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறி, ஹஸனை ஏசி அனுப்பினார். அது ஹஸன் மனதிற்கு, மிகுந்த வேதனையளித்தது. அந்த ஆசிரியர், ஹஸனுக்கு நம்பிக்கை துரோகமொன்றை செய்ததாகவே ஹஸன் நினைத்தான். ஒரு நாள் ஹஸன் வீதியில் வைத்து, ஆசிரியரை சந்தித்த போது, "நீங்கள் எனக்கு பெரிய துரோகமொன்றை செய்துவீட்டீர்கள்" என்று அவர்களிடம் கூறிய போது, "நான் அப்படி, துரோகம் செய்யவில்லை, அதிபருக்கு, நான் எதையுமே அனுப்பவுமில்லை; நீங்கள் சமூகவலையத் தளங்களில் போட்டு இருந்ததை தான்; யாரோ அதிபருக்கு அனுப்பியிருக்கிறார் " என்று ஹஸனிடம் கூறினார். என்ன நடந்தது என்று கூட ஹஸனுக்கு சரியாக தெரியவில்லை.
ஆசிரியர், ஹஸனைப் பற்றி தவறாக நினைத்து, அவனை வெறுப்பதை ஹஸன் உணர்ந்தான். ஹஸன், தூரத்திலிருந்து அந்த ஆசிரியரின் வீட்டு பக்கத்தை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியர், ஹஸன் பார்ப்பதை கண்டவுடன், அவர்களினால் வீட்டின் கதவு ஜன்னல்கள் கூட மூடப்பட்டன. இவை அனைத்தும் ஹஸன் மனதிற்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்தது. அந்த ஆசிரியை மீது ஹஸன் வைத்த பாசம், ஹஸனுக்கு அவர்களை வெறுக்கவும் முடியவில்லை. என்றாலும் அவர்களிடமிருந்து ஹஸன் விலகிச் சென்றான்.
உயர்தரத்தை கற்க, ஹஸனை, வேறு எங்கயாவது பெரிய பாடசாலையொன்றுக்கு போட, ஹஸனுடைய தந்தை ஆசைப்பட்டார். அருகிலுள்ள கன்னத்தொட்டை சுலைமானியா கல்லூரிக்கு போடுவதற்கு முயற்சி செய்தார். "என்னால் முடியாது, எங்கயும் போக தேவையில்லை, வீட்டிலிருந்து ப்ரைவட்டாக உயர்தரப் பரீட்சையை எழுதுகிறேன்" என்று ஹஸன் கூறினான். அதற்கு, ஹஸனுடைய பெற்றோர் விருப்பப்படவில்லை. "எங்கயாவது ஒரு பாடசாலைக்கு கட்டாயம் போகவே வேண்டும்" என்றே ஹஸனிடம் கூறினர். சொந்த ஊர் யட்டியாந்தோட்டையில், ஆரம்பத்தில் கல்வி கற்ற, கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு செல்லுமாறு தந்தை கூறினார். ஹஸனும் கடைசியில் அதற்கு விருப்பப்பட்டு, உயர்தர கல்வியை கற்க சொந்த ஊர் கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு சென்றான்.
"தன் கனவில் வந்த அந்த பெண்ணை, ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்' என்ற ஆர்வம், ஹஸனின் மனதில் ஏற்பட்டது. '2016 இல் சாதாரணத்தரப்பரீட்சை எழுதிய மாணவ மாணவிகள், 2017 மார்ச் மாதம் கடைசியில், பரீட்சை பெறுபேறுகள் வந்ததவுடன், அவள் பாடசாலைக்கு வரும் போது பார்த்துக் கொள்ள முடியும்' என்று ஹஸன் நினைத்தான். அந்த நாள் வரைக்கும் ஹஸன் காத்திருந்தான். அந்த நாளும் வந்தது. 2016 சாதாரணத் தரப்பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் பாடசாலைக்கு வந்தனர். அந்த நாள், கனவில் வந்த பெண்ணை ஹஸன் நேரில் பார்த்தான், முக அடையாளங்களை வைத்து, கனவில் வந்தது அவளே தான், என்று ஹஸனின் மனம் கூறியது. ஹஸனின் கண்ணிற்கு அவள் அவ்வளவு அழகாக காட்சியளித்தாள். "அவள் தன்னுடைய பாடசாலைக்கே உயர்தரம் கற்க வர வேண்டும்" என்று ஹஸன் ஆசைப்பட்டான். ஹஸன் ஆசைப்பட்டது போலவே அவள் தன்னுடைய பாடசாலைக்கே உயர்தரம் கற்க வந்தாள்.
அவள் பாடசாலைக்கு வந்த நேரமே, பாடசாலையில் ஜூனியர் பாராளுமன்ற தேர்தலொன்று நடைபெற்றது. அதில் ஹஸன் வேட்பாளராக நாஸிர் ஹஸன் நின்றான். தேர்தலில், தனக்கு ஓட்டு போடுமாறு கூறி, முதல் தடவையாக ஹஸன், அவளுடன் பேசினான். மற்றைய அனைத்து மாணவர்களுக்கும் தனக்கு ஓட்டு போடுமாறு கூறினான். ஹஸன் பாடசாலையில் அனைத்து மாணவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டதனால், அனைவரது வாக்குகளையும் பெற்று, தேர்தலில் வெற்றி பெற்று, கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலத்தியாலத்தில் ஜூனியர் பாராளுமன்றத்தில் பிரதமரானான்.
அத்துடன் மாணவத் தலைவனும் ஆனான். "சொந்த ஊர், சொந்த பாடசாலை, இங்க நாங்க தான் கெத்து" என்று ஹஸன் நினைக்க, அவனுடைய பாடசாலை வாழ்க்கையே, அவன் எதிர்ப்பராதாத அளவுக்கு கெத்தாக மாறியது.
யாரென்றே அறியாத, கனவில் வந்த ஒரு பெண்ணை ஹஸன், நேரில் பார்க்கும் போதெல்லாம் அவன் மனதிற்கு ஒரு சந்தோஷம். ஹஸன் அவளுடன் பேசி பழகினான். அதுமட்டுமல்லாமல் பாடசாலை மாணவர்களிடம் அவளைப் பற்றி விசாரித்தான். யாரும் அவளை பற்றி நல்ல விதமாக கூறவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசினார்கள். “அவள் நிறைய ஆண்களுடன் காதல் தொடர்பு, செய்த வேலைகள் சீரழிவு, இப்போது அவள், அவளுடைய பெரியம்மாவின் மகன் ஒருத்தனை விரும்புகிறாள்" இப்படியெல்லாம் கூறினர். அவளைப் பற்றி மாணவர்கள் அவ்வாறெல்லாம் கூறியதை நினைத்து, ஹஸன் மிகவும் கவலையடைந்தான். ஆனால் ஹஸன், அதையெதையுமே பெரிதாக கணக்கெடுக்காமல் அவளை ஒரு உயிராக மதித்து பேசி பழகினான்.
உயர்தரப் பாடங்களின் நோட்ஸ்கள் ஹஸனுக்கு தேவைப்பட, அதை அவளிடம் கேட்டான். அவளிடமிருந்த நோட்ஸ்களை அவள், ஹஸனுக்கு கொடுத்தாள். மேலும், ஹஸனுக்கு மற்றைய பாடங்களின் நோட்ஸ் உம் தேவைப்பட்டது. அதையும் அவளிடம் கேட்க, "வீட்டில் தான் இருக்கிறது" என்று அவள் கூறினாள். "நாளை பாடசாலைக்கு வரும் போது கொண்டு வந்து தர முடியுமா” என்று அவளிடம் கேட்டதற்கு, அந்த நிமிடமே பாடசாலை வேலையில், பாடசாலைக்கு அருகிலுள்ள அவளது வீட்டிற்கு சென்று, அனைத்து நோட்ஸ்களை எடுத்துக் கொண்டு வந்து ஹஸனிடம் கொடுத்தாள். அவளுடைய அந்த செயலும் அவளுடைய குணமும், ஹஸனுக்கு அவள் மீதான நல்லொரு அபிப்பிராயத்தை உண்டு பண்ணியது. "அவளின் வாழ்க்கை நல்லதாக அமைய வேண்டும்" என்று ஹஸன் இறைவனிடம் பிராரத்தித்தான். “இனி அவளைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அவள் என் பார்வையில் நல்லொரு பெண்" என்று ஹஸன் மனம் கூறியது. "ஒரு ஆண் ஒரு பெண் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்றால் அது அந்த பெண் கொண்ட காதலினால் அல்ல, எந்தவொரு கலப்படமும் இல்லாத தூய்மையான அன்பாக கூட இருக்கலாம்" என்று ஹஸனின் மனம் கூறியது.
அவள் விரும்பிய, அவளது பெரியம்மாவின் மகனுக்கு, அவளைப் பற்றிய விடயங்கள் தெரிந்து, அவன், "அவள் தனக்கு வேண்டாம்" என்று கூறியதால், அவள் அவளது கையை வெட்டிக் கொண்டதாக, ஹஸனுக்கு சைத் மூலமாக ஒரு தகவல் கிடைத்தது. அதை கேட்டவுடன், ஹஸனின் மனதிற்கு கஷ்டமாகியது. “அவளின் வாழ்க்கையே நான் மாற்ற வேண்டும், அவளுடைய வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்" என்று நினைத்த ஹஸன், அவளைப் பற்றி தெரிந்து கொண்டதை வைத்து, அவளின் பெயரை குறிப்பிடாமல், அவளைப் பற்றி கதையொன்றை எழுதி, அவளிடம் கொடுத்தான்.
"தந்தை ஒருவருக்கு மகள்மார் இருவர் இருந்தனர்; அந்த இருமகளும் அழகான தேவதையாக காணப்பட்டனர்; தந்தையின் கனவு இருமகளையும் நன்றாக படிக்க வைத்து, நல்லொரு இடத்திற்கு திருமணம் பேசி நன்றாக வாழ்வதை பார்ப்பதாகும்; மூத்த மகள் ஒருவனை காதலித்து, "அவனே வேண்டும்" என்று அடம்பிடித்து, அவளை திருமணம் செய்து தந்தையின் கனவை களைத்தாள்; தற்போது தந்தை கனவு இரண்டாவது மகளை பற்றி தான்' அவளும் தந்தைக்கு உண்மையாக இல்லை; நிறைய பேரை காதலித்தது மட்டுமல்லாமல் செய்த வேலைகள் சீரழவு; தற்போது அவளது பெரியம்மாவின் மகனை அவள் விரும்புகிறாள்; "இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்ற வேண்டும்" என்று யாரும் நினைக்கவில்லை; இந்த கதையின் ஹீரோ, ஹஸன் நினைத்தான்" என்று கதையில் எழுதி, 'ஒரு பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்' என்று நல்லறிவுறைகளை கதையில் சேர்த்து, கதையை ஹஸன், அவளுக்கு வாசிக்க கொடுத்தான்.
"நீங்களா எழுதினீர்கள், மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள், நல்ல நேரம் கதையில் என்னுடைய பெயரை போடவில்லை" என்று, அவள் ஹஸனிடம் கூறினாள். ஹஸன், அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். அவளுடன் பேசும் போது மனதிற்கு ஒரு சந்தோஷம். ஹஸன், அவன் வாழ்வில் பட்ட அவமானங்களை வைத்து, கற்பனைக் கதையான்றை எழுதி, அவளிடம் கொடுத்தான். அதை அவள் வாசித்து, "மிகவும் நன்றாக இருக்கிறது" என்று ஹஸனிடம் கூறினாள். அக்கதையை ஹஸன், அவளிடமிருந்து திருப்பி கேட்டதற்கு "யார், யாருக்கோ கதையை காட்ட வேண்டும்" என்று ஹஸனிடம் கூறி, அக்கதையை கூட அவள் ஹஸனுக்கு திருப்பிக் கொடுக்கவில்லை. பாடசாலையில் அவள், ஹஸனை காணும் போதெல்லாம் "ஏன் இவனை, அந்த பெண் வேண்டாமென்று சொன்னால்" என்று அவள் சிந்தித்தாள்.
நாட்கள், மிக மிக விரைவாக கடந்து செல்ல, ஹஸனுக்கு, உயர்தரப்பரீட்சைக்கான நாளும் நெருங்கியது. அத்துடன், ஹஸனுடைய பாடசாலை வாழ்க்கை முடிவடைந்தது. கடைசி நாளில் மிகுந்த கவலையுடன் ஹஸன், அவளிடம் சென்று "போய் வருகிறேன்" என்று கூறினான். அதற்கு அவள், "நன்றாக பரீட்சையை எழுதுங்கள்" என்று ஹஸனிடம் கூறினாள். ஹஸனுடைய பாடசாலை வாழ்க்கையிலே, அவன் பேசி பழகிய ஒரே பெண்ணாகவும், அவன் மனதிற்கு மிகவும் பிடித்த ஒரே பெண்ணாகவும், அவள் ஹஸனுடைய மனதில் நீங்கா இடம் பிடித்தாள். அழுகையுடனும் நல்ல பெயருடனும் ஹஸன், கராகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து விடைப் பெற்றான். அத்துடன் அவனுடைய பாடசாலை வாழ்க்கையே முடிவுற்றது.
உயர்தரப்பரீட்சையை எழுதி முடித்து விட்டு, ஹஸன் வீட்டில் இருந்த போது, அவன் மனதிற்கு மிகவும் பிடித்த, அந்த பெண்ணின் ஞாபகம், அவனுக்கு அடிக்க வந்து போனது. அவளை ரொம்ப மிஸ் பண்ணுகின்ற ஒரு பீலிங் ஹஸனுக்கு வந்தது. பாடசாலையிலே, அவளை தேடித் தேடிப் போய் பேசியதெல்லாம் அவனுக்கு நினைவு வரும் போது, அவன் கண்கள் கலங்கின. அது அவனுக்கு மிகுந்த கஷ்டமாக அமைந்தது. ஒரு சில மாதங்களில், ஹஸனுடைய உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின. இஸ்லாம் மற்றும் வரலாறு பாடங்களில் நன்றாக சித்தியடைந்த ஹஸன், தமிழ் பாடத்தில் சித்தியடையவில்லை. பிறகு ஹஸன், இரண்டாவது முறை, உயர்தரப் பரீட்சையை, எழுத நினைத்தான். "மீண்டும் பாடசாலைக்கு சென்று, கல்வி கற்க வேண்டும்" என்ற ஆசையும் அவனுக்கு ஏற்பட்டது.
அதற்கு பிறகு ஹஸன், பாடசாலைக்குச் சென்று, இரண்டாவது முறை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க நினைத்ததையும், மீண்டும் பாடசாலைக்கு கல்வி கற்க வர ஆசைப்பட்ட விடயத்தையும் அதிபரிடம் கூறினான். அதற்கு அவர், ப்ரைவட்டாக விண்ணப்பிக்குமாறு ஹஸனிடம் கூறினார். "பாடசாலையின் மூலம் பரீட்சை எழுதி, நல்ல பெறுபேற்றை பெற்றால், அந்த பெறுபேறு பாடசாலைக்கு தான்; அதனால் நான் பாடசாலையினாலே விண்ணப்பித்து; பரீட்சை எழுதி; பாடசாலைக்கு நான், நல்ல பெறுபேறை பெற்றுக் கொடுக்க வேண்டும்" என்று ஹஸன் அதிபரிடம் கூறினான். ஹஸனுக்கு, பாடசாலையினாலே பரீட்சைக்கு விண்ணப்பிக்க, அதிபர் விருப்பம் தெரிவித்து, ப்ரைவட் வகுப்புகளுக்கு சென்று படித்து கொள்ளுமாறு கூறினார்.
"ப்ரைவட் வகுப்புகளுக்கு எங்கும் செல்லாமல், பாடசாலையிலே, உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுடன் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்" என்று ஹஸன் அதிபரிடம் கூறினான். அதற்கு அதிபர், கொஞ்சம் கூட விருப்பப்படவில்லை. "உன்னை எப்படி அவர்களுடன் போட முடியும்; அந்த வகுப்பில் 7 மாணவிகள் இருக்கும் போது, அவர்களை விட நீ ஒரு வயது மூப்பு; உன்னை எப்படி அவர்களுடன் சேர்த்து போட முடியும்" என்று அதிபர் ஹஸனிடம் கேட்டார். அதற்கு ஹஸன், "அந்த வகுப்பில் இரண்டு மாணவர்களும் தான் இருக்கின்றார்கள்" என்று அதிபரிடம் கூறினான். "முடியவே முடியாது" என்றே அதிபரது முடிவு காணப்பட்டது. "அதிபர் பேசிய பேச்சுக்களையெல்லாம் ஹஸன், பெரும் அவமானமாகவே கருதினான். என்றாலும் ஹஸன், பொறுமையாக இருந்து அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
பட்ட அவமானங்கள் அனைத்தும் ஹஸனின் நினைவிற்கு வர, அவனின் மனம், அதிபரை பழிவாங்க துடித்தது. நடந்த விடயத்தை ஹஸன், ஒரு ஆசிரியையிடம் கூறினான். அந்த ஆசிரியையும், தனக்கு அதிபரினால் நடந்த சில அநியாயங்களையும் ஹஸனிடம் கூறினார். அது மட்டுமல்லாமல், மனதிற்கு பிடித்த பெண்ணைப் பற்றி ஹஸன் முன்பு விசாரித்த போதிலும் கூட, "அவளுக்கு வந்த கெட்டப்பெயர் ஒன்றிற்கும், அதிபர் ஒரு காரணம்" என்று மாணவர்கள் ஹஸனிடம் கூறியிருந்தனர். அவற்றையெல்லாம் நினைத்து, அனைத்து அநீதிகளுகளுக்கும் ஹஸன், அதிபருக்கு எதிராக குறள் எழுப்பி, ஒரு வொய்ஸ் நோட்டை, யட்டியாந்தோட்டையிலும் கராகொடையிலும் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் வட்ஸ்அப்பில் அனுப்பினான். அது ஊரெங்கும் ட்ரன்ட் ஆகியது. "இது எங்களுடைய ஊர்; எங்களுடைய பாடசாலை' என்றும் நடந்த அனைத்து விடயங்களுக்கும், அதிபரை சும்மா விடக் கூடாது" என்று கூறியிருந்தான்.
மறுநாள் பாடசாலையில், அது குறித்த ஒரு கலந்துறையாடல் ஒன்று இடம்பெற்றது. பாடசாலையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் அதிபருக்கு ஆதரவாக பேசினார்கள். "அதிபர் நல்லம், அவர் மீது எந்த தவறும் இல்லை" என்றே அனைவரினாலும் பேசப்பட்டன. ஹஸனிற்கு, பாடசாலையினால் உயர்தர பரீட்சை விண்ணப்பித்து, ப்ரைவட் வகுப்புகளிற்கு சென்று படித்துக் கொள்ளுமாறே அனைவராலும் கூறப்பட்டன. அதற்கும் ஹஸன், கடைசியில் ஒத்துக் கொண்டான்.
"அதிபரினால், ஒரு பெண்ணிற்கு வந்த கெட்ட பெயர்" என்று ஹஸன் கூறியதை வைத்து, "அந்த பெண் யார்" என்ற கேள்வியே, அந்த கலந்துறையாடலில் அனைவருக்கும் பெரும் குழப்பமாக காணப்பட்டது. அதற்கான ஆதாரமும் ஹஸனிடம் கேட்கப்பட்டது. அவளின் பெயரையும், அதைப்பற்றியும் கூறி, அவளை அசிங்கப்படுத்த, ஹஸன் கொஞ்சம் கூட விரும்பவில்லை. அனைவரும் ஹஸனிடம், "யார் அந்தப் பெண்" என்று கேட்க, கடைசி வரைக்கும் யாரென்று ஹஸன் சொல்லவில்லை. "அது யார் " என்று சொல்லும் வரை, அனைவரும் ஹஸனை விடவும் இல்லை. "அதிபருக்கு, அது ஒரு மானப்பிரச்சினை" என்று அனைவரும் ஹஸனிடம் கூறினர். "நான் சொன்னதெல்லாம் பொய்; அதிபர் நல்லவர்; பாடசாலை மாணவர்களின் பேச்சை கேட்டுத்தான் இவ்வாறு பேசினேன்; அதிபரிடம் மன்னிப்பு கேட்கிறேன், அனைவரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" இவ்வாறெல்லாம் வீடியோவிற்கு முன்னால் நின்று, பேசுமாறு அவர்கள் ஹஸனிடம் கூறினார்கள். "அவளின் பெயர் கெட்டு போகக் கூடாது " என்பதற்காக வேண்டி, கடைசியில் ஹஸனும் அவ்வாறே பேசி விட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.
ஹஸன் மன்னிப்பு கேட்டு பேசிய அந்த வீடியோவை, ஊரிலுள்ள அனைவருக்கும் அவர்கள், வட்ஸ்அப்பில் அனுப்பினார்கள். அந்த வீடியோவை பார்த்த ஹஸன், அதைப் பெரும் அவமானமாகவே கருதினான். "நான் சொன்னது எதுவுமே பொய் இல்லை; எல்லாம் உண்மை; எல்லோரும் சேர்ந்து என்னை அவ்வாறு கூற வைத்தார்கள்." என்று கூறி வொய்ஸ் நோட் ஒன்றை ஹஸன் அனைவருக்கும் வட்ஸ்அப்பில் அனுப்பினான். அதைக் கேட்ட அதிபர், அது குறித்து, பொலிஸில் முறையிட்டதாகவும், ஹஸனை கராகொடை பொலிஸிற்கு வருமாறு அழைத்ததாகவும் ஒரு தகவல் ஹஸனுக்கு கிடைக்கப் பெற்றது.
பிறகு ஹஸனும் அவனுடைய தாயும் யட்டியாந்தோட்டைக்கு சென்று, ஹஸனுடைய பாட்டனையும் அழைத்துக் கொண்டு, கராகொடை பொலிஸின் நுழைவாயிலுக்கு அருகில் சென்றனர். அந்த இடத்திற்கு, ஹஸனின் மனதிற்கு பிடித்த பெண்ணின் பெரியப்பா வந்தார். "ஏன் நீங்கள் இங்கே நிற்கின்றீர்கள்" என்று ஹஸனிடமும் தாயிடமும் வினவினார். அதற்கு ஹஸன் "அதிபருக்கு எதிராக நான் செய்த வேலை” என்று அவரிடம் சொன்னான். அதற்கு அவர் "உங்களுடைய மகன் செய்தது, பெரிய தவறில்லை; உங்களுடைய மகன் எங்களுடைய ஊர் பொடியன்; உங்களுடைய மகனுக்கு எந்த பிரச்சினையும் வராமல் நான் பாத்துக்கொள்றேன்; இவ்விடத்தில் நின்று சீரழியாமல் உங்களுடைய மகனை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு செல்லுங்கள்; நான் கூறியதை ஹஸனுடைய தந்தையிடம் சென்று கூறுங்கள்" என்று அவர் ஹஸனுடைய தாயிடம் கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் ஹஸனின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பிறகு ஹஸனும் தாயும் அவ்விடத்தை விட்டு வெளியேறி, வீட்டிற்கு சென்றனர்.
பிறகு அன்றைய நாள் பிற்பகல், ஹஸனை பொலிஸிற்கு வருமாறு பொலிஸிலிருந்து ஒரு கோல் ஒன்று வந்தது. பிறகு ஹஸனும்,அவனுடைய தாயும்,பாட்டனும் பொலிஸிற்கு சென்றனர். நடந்த விடயத்தைப் பற்றி, பொலிசார் ஹஸனிடம் விசாரனைகளை மேற்கொண்டனர். "மீண்டும் உயர்தரம் கற்க, பாடசாலைக்கு செல்வதற்கு என் மனதில் ஏற்பட்ட ஆர்வத்தினாலும், அதற்கு அதிபர் மறுப்பு தெரிவித்ததனாலும் தான் இவ்வாறான தவறை நான் செய்தேன்" ஹஸன் பொலிஸாரிடம் கூறினான். "ஹஸன் செய்த தவறிற்கு, பெரிதாக எந்த தண்டனையும் கொடுக்க முடியாது; நஷ்டஈடு கேட்க முடியும்" என்று பொலிசார் அதிபரிடம் கூறினர். அதிபரும் ஹஸனிடமிருந்து நஷ்டஈடு எதுவுமே கேட்காமல், அவனை மன்னித்து விட, “மீண்டும் இது போன்ற தவறை இனி செய்ய மாட்டேன்” என்று ஹஸன் பொலிஸாரிடம் கடிதம் ஒன்றை எழுதி, கையொப்பமிட்டு கொடுத்து அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
ஹஸன் மூன்று வருட கால பட்டப்படிப்பொன்றை வீட்டில் இருந்து மேற்கொண்டான். பட்டப்படிப்பை முடித்து விட்டு, அதை வைத்து ஆசிரியத் தொழிலைப் பெற்றுக் கொள்ளவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதற்கு, மொத்தமாக மூன்று லட்சப்பணம் கட்ட வேண்டும். தாயினுடைய சொந்தத்தில் வசதி படைத்த சிலரிடம் கேட்டான். யாரும் அவனுக்கு உதவவில்லை. நாஸிர் ஹஸன், பட்டப்படிப்பொன்றை மேற்கொள்வதற்கு, சொந்தக்காரர்கள் யாருமே விருப்பப்படவில்லை. அதற்கு ஏசிய வண்ணமே அவர்கள் காணப்பட்டனர். பொறாமையில் தான் ஏசுவது, ஹஸனுக்கு நன்றாக புரிந்தது. "இனி யாரிடமும் உதவி கேட்பதுமில்லை; பட்டப்படிப்பை செய்து முடிக்காமல் விடுவதில்லை" என்று நினைத்தான்.
சில மாதங்களிற்கு பிறகு, பாடசாலை அதிபரிடத்தில் இருந்து, ஹஸனுடைய தந்தைக்கு ஒரு தகவல் கிடைத்தது. ஹஸனுடைய உயர்தரப்பரீட்சைக்கான அட்மிஷனை பெற்றுக் கொள்ள, ஹஸனை பாடசாலைக்கு வருமாறு, அதிபர் ஹஸனின் தந்தையிடம் கூறியிருந்தார். ஹஸன், அவனுடைய தாயையும் அழைத்துக் கொண்டு, பாடசாலைக்கு சென்றான். அட்மிஷனை பெற்றுக் கொண்டதற்கு பிறகு, ஹஸன் அதிபரிடம், செய்த தவறிற்கு மீண்டுமொரு முறை மன்னிப்பு கேட்டான். அவரும் ஹஸனை மன்னித்து, அவனுடன் நல்லவிதமாக பேசினார். மேலும் பாடசாலையிலுள்ள ஆசிரியர்களும், ஹஸன் செய்த தவறை மறந்து, அவனுடன் மிகவும் நல்லவிதமாக பேசினார்கள். அது ஹஸன் மனதிற்கு, சற்று சந்தோஷத்தை உண்டு பண்ணியது.
பாடசாலையிருந்து வெளியேறிய பிறகு, ஹஸன், "உயர்தர வகுப்பில் வெள்ளை நிறத்தில், நல்ல ஒரு அழகான பெண் ஒருத்தி இருந்தாள்,பாத்தீங்களா? அவள் தான் என் கனவில் வந்த, என் மனதிற்கு மிகவும் பிடித்த பெண்" என்று ஹஸன் அவனுடைய தாயிடம் கூறினான். அதற்கு தாய், "நான் நினைத்தேன் அவளாகத் தான் இருக்குமென்று; அவள் வெள்ளையாக இருந்ததற்கு, அப்படிக்கு அவள் அழகொன்றுமில்லை" என்று தாய் சற்று கோபத்துடன் ஹஸனிடம் கூறினாள். அதற்கு ஹஸன் "போங்க உம்மா. உங்களுக்கு அழகு பார்க்கயும் தெரியாது; எனக்கு அவள் அழகு தான்" என்று ஹஸன் கூறினான்.
அட்மிஷனை பெற்றுக் கொண்டதற்கு பிறகு, ஹஸன், உயர்தரப் பரீட்சைக்கு மிகவும் நன்றாக படித்தான். "பரீட்சையில் நல்லொரு பெறுபேற்றை பெற்று, நான் நன்றாக சித்தியடைய வேண்டும்" என்று ஹஸன் நினைத்தான். பாடசாலையின் மூலமாகவே, ஹஸன் உயர்தரப்பரீட்சை எழுதினான். சில மாதங்களில், ஹஸனுடைய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளும் வெளியாகின. மூன்று பாடங்களிலும் ஹஸன், நன்றாக சித்தியடைந்தான். அவன் எதிர்ப்பார்த்தது போன்றே, பாடசாலைக்கு நல்லொரு பெறுபேற்றை பெற்றுக் கொடுத்தான். ஊரிலுள்ள அனைவரும் "போராட்டம், ஜெயித்தது" என்று ஹஸனிடம் கூறி, அவனை வாழ்த்தினர். அவ்வனைத்தும் ஹஸனின் மனதிற்கு, மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.
அதிபருக்கு, ஹஸன் செய்த தவறை வைத்து, ஊரிலோ, பாடசாலையிலோ யாரும் ஹஸனை வெறுக்காமல் இருந்தது, அவனுக்கு சந்தோஷமாக இருந்தாலும், அதுவே அவன் மனதிற்கு மிகவும் பிடித்த பெண், அவனை வெறுக்க காரணமாக அமைந்தது. அதிலிருந்து அவள், ஹஸனுடன் பேசுவதையும் நிறுத்தினாள். அது ஹஸன் மனதிற்கு மிகுந்த கஷ்டமாக அமைந்தது. 'அவள் நன்றாக கல்வி கற்கக் கூடிய மாணவி என்பதனால், அவள் செல்கின்ற அதே துறையை தேர்ந்தெடுத்து, அவளுடன் சேர்ந்து நானும் முன்னேற வேண்டும்" என்றெல்லாம் ஹஸன் எண்ணி இருந்தான். "ஆனால் அவள், இனிமேல் தன்னுடன் பேசவே மாட்டாள்" என்று ஹஸன் நினைத்த போதெல்லாம் அவன் மனதிற்கு மிகவும் கஷ்டமாகியது.
அவள் தன்னை புரிந்து கொள்வதற்காகவும், அவள் எப்படி தன்னுடைய வாழ்வில் வந்தாள் என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும், ஹஸன் தன்னுடைய வாழ்க்கையே கதையாக எழுதினான். "20 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், ஹஸனுடைய முப்பாட்டன், இந்தியாவிலிருந்து இலங்கை வந்தது, குடும்ப கதை உட்பட நடந்து முடிந்த அனைத்து உண்மையான சம்பவங்களையும் கதையில் சேர்த்தான். அத்துடன் ஹஸனுடைய கனவில் அவள் வந்ததையும், கனவில் கண்ட அவளை, நேரில் பார்த்த அற்புதமான நிகழ்வுகளையெல்லாம், ஹஸன் கதையில் சேர்த்தான். கதையில் முக்கிய கதைக்கலங்களாகிய யட்டியாந்தோட்டை நகரை சென்னையாகவும், கொட்டியாகும்புர நகரை கோயம்புத்தூராகவும் மாற்றி, கதையை எழுதினான். மேலும் இந்தியாவின் நகரங்களை வைத்தே, கதைக்கலங்கள் அமைந்தது. ஹஸன் எழுதிய அந்த கதையில், கதாபாத்திரத்தின் உண்மையான பெயரை வைத்தே கதையை எழுதினான். அதில் எந்தவொரு மாற்றமும் அவன் செய்யவில்லை.
கதையில் ஹஸன், அவனை கதாநாயகனாகவும், மனதிற்கு பிடித்த பெண்ணாகிய அவளை கதாநாயகியாகவும், சித்தரித்து எழுதினான். அக்கதையை ஹஸன் எழுதிக் கொண்டு போகும் போது "கதையில் கதாநாயகனும் கதாயாநாயகியும் ஒன்று சேர்ந்தால் நல்லம்" என்று ஹஸனுக்கு தோன்றியது. கதைக்காக மட்டுமல்லாமல் உண்மைக்குமே ஹஸன், அவளை மனதால் விரும்பியதை அப்போது உணர்ந்தான். "ஆரம்பத்தில் அவளை பார்ப்பதற்கு முற்பட்டது; அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனம் கொண்ட சந்தோஷம்; அவளின் வாழ்க்கையை மாற்ற நினைத்தது; அவளை பற்றி நித்தம் அவன் நினைக்கும் போதெல்லாம் அவன் கண்கள் கலங்கியது, இவையணைத்தும், அவள் மீது கொண்ட தூய்மையான காதலினால் தான்" என்பதை, ஹஸன் நடந்த அனைத்தையும் கதையாக எழுதும் அந்த தருணமே, அவன் அதை உணர்ந்தான். அதற்கு பிறகு, ஹஸன் அவளை அனைத்திலும் தாண்டி விரும்பினான். அவளுடன் வாழ ஆசைப்பட்டான். காதலித்து சீரழியாமல், அவளை முறைப்படியாக திருமணம் பேசி முடிக்கவே, ஹஸன் ஆசைப்பட்டான்.
ஆசைப்பட்ட விடயத்தை கூட அவளிடம் கூற, அவனுக்கு எந்தவொரு வாய்ப்புக்களும் அமையவில்லை. கடைசியில் ஹஸன், அவன் ஆசைப்பட்ட விடயத்தையும் கதையில் சேர்த்தான். "அவளது முடிவிற்காக ஹஸன் காத்திருந்தான்" என்றும் கதையில் எழுதினான். 99 பந்திக்கு எழுதப்பட்டிருந்த தன்னுடைய வாழ்க்கை கதையை, ஒரு அழகானதொரு கிப்ட் மாதிரி செய்தான். அதை அவளுக்கு கொடுக்குமாறு கூறி, அவளுடைய மச்சானிடம் கொடுத்து அனுப்பினான். அவளுடைய விருப்பத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹஸன் எடுத்த முதல் முயற்சி, தன்னுடைய வாழ்க்கை கதையை, அவளுக்கு சமர்ப்பித்ததாகும்.
அவளின் முடிவிற்காக, சில காலம் ஹஸன் காத்திருந்தான். ஆனால் அவனுக்கு எந்தவொரு பதிலும் எங்கிருந்தும் வரவில்லை. "அவள், அவளுடைய சகோதரனின் தொலைபேசியை தான் உபயோகிக்கிறாள்" என்ற விடயத்தை அறிந்த ஹஸன், அவளுடைய சகோதரனின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பொன்றை மேற்கொண்டான். அவளின் தாய் அவ்வழைப்பை எடுத்தாள். "நான் நாஸிர் ஹஸன் பேசுகிறேன்" என்று கூறியது மட்டும் தான் அவள் சற்று கோபத்துடன், "ஒவ்வொரு ஒவ்வொரு கிப்ட் ஐயும் என் மகளுக்கு கொடுத்து அனுப்புகின்ற வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று ஹஸனிடம் கூறினாள். பிறகு ஹஸன், ஆசைப்பட்ட விடயத்தையும் அவளின் தாயிடம் கூறினான். அதற்கு அவள் "உங்களுடைய தந்தை திருமணப் பதிவாளர் தானே; உங்களுக்கு தேவையென்றால், உங்களுடைய தந்தையிடம் கூறி, வேறு யாரையாவது திருமண முடித்து கொள்ளுங்கள்" என்று ஹஸனிடம் கூறினாள். அதன் மூலம் ஹஸன் அவமானப்பட்டது தான் மிச்சம்.
ஒரு நாள் ஹஸன், யட்டியாந்தோட்டைக்கு சென்றிருந்த வேலையில் கராகொடைக்கு சென்றான். அப்போது மிக நீண்ட நாட்களிற்கு பிறகு ஹஸன், அவளை பார்த்தான். அப்படியே அவளின் பின்னால் சென்றான். அவளை தாண்டிச் சென்று, ஹஸன் மெதுவாக பின்னால் திரும்பினான். "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று அவளிடம் கூறிவிட்டு, அப்படியே அவளின் வீட்டிற்கு செல்லும் பாதைக்கு அருகில் சென்றான். அவள் வரும் போது, அவளை பார்ப்பதற்காகவே ஹஸன் அங்கு சென்றான். அவளை பார்க்கும் போதெல்லாம் ஹஸன் மனதிற்கு அப்படி ஒரு சந்தோஷம். ஏன் என்று தெரியவில்லை. யாரையும் எதையும் காணும் போது வராதவொரு சந்தோஷம், அவளை பார்க்கும் போது ஹஸனுக்கு வந்தது. ஹஸன் கண்ணுக்கு அவள் மேலும் மேலும் அழகாக காட்சியளித்தாள். “அவள், என் கதையை வாசித்து இருக்கமாட்டாள் போல" என்று ஹஸன் நினைத்தான். தன்னுடைய வாழ்க்கை கதையை, 'வரலாறு நோட்ஸ்' என்று, அவளுக்கு கொடுக்குமாறு, த்ரீவில் பாக்கில் இருந்த, அவளின் பெரியப்பாவின் மகனின் கையில் கொடுத்து அனுப்பினான்.
ஒரு நாள், கராகொடைக்கு செல்லும் போது, அவளின் தந்தை, த்ரீவீலில் இருப்பதை ஹஸன் கண்டான். ஹஸன் சென்று அவருடன் பேசினான். அவர் ஹஸனுடைய தந்தையின் மீது மிகவும் மரியாதையும், நேசமும் வைத்திருந்தார். அதனால் ஹஸனுடன் மிகவும் நன்றாக பேசினார். "உங்களுடைய மகளை எனக்கு பிடித்திருந்தது; முறைப்படியாக தான் பேசி முடிக்க ஆசைப்பட்டேன்; அதை உங்களுடைய மகளிடம் செல்லுவதற்கு வாய்ப்பு எனக்கு அமையவில்லை; அதை தான் என்னுடைய கதையில் எழுதி, அக்கதையை தான் உங்களுடைய மகளிற்கு அனுப்பினேன்" என்ற உண்மையான விடயத்தை, ஹஸன் அவரிடம் கூறினான். அதற்கு அவர், எதுவுமே ஹஸனிடம் கூறவுமில்லை, ஹஸன் மீது கோபப்படவுமில்லை. பிறகு ஹஸன், “நான் தவறு எதுவுமே செய்யவில்லை, முறைப்படியாக தான்" என்பதை அவரிடம் கூறினான், "நீங்கள் நன்றாக படித்தவர் தானே, பார்த்து யோசனையுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று, அவர் ஹஸனிடம் கூறினார். பிறகு ஹஸன், அந்த இடத்தை விட்டு வெளியேறினான். "அவளின் விருப்பத்தை பெற்றால் போதும், நான் நினைத்து நடக்கும்" என்று ஹஸன் நினைத்தான்.
அன்று 2020 பெப்ரவரி 3 ஆம் திகதி. கராகொடை முஸ்லிம் பாடசாலையில், இல்ல விளையாட்டு போட்டியொன்று நடைபெற்று, அன்று கடைசி நாள். அந்த நாள் நாஸிர் ஹஸன் பாடசாலைக்கு சென்றான். விரும்பிய பெண்ணை பார்த்தான். அவள் இருக்கும் இல்லத்திற்கு, ஹஸன் சென்றான். ஹஸனை கண்ட அவள், ஹஸனிடம் "ஏன் எப்போதும் என்னுடைய பின்னால் வாரீங்க, இதற்கு பிறகு என்னுடைய பின்னால் வர வேண்டாம். ஒவ்வொருவருடைய கையில், எனக்கு ஒவ்வொன்றையும் கொடுத்து அனுப்பவும் வேண்டாம்" என்று, ஹஸனிடம் மிக அழுத்தத்துடன் கூறினாள். அவள் அப்படி கூறியது, ஹஸனின் மனதிற்கு, பெரும் கஷ்டமாக அமைந்தது.
இல்ல விளையாட்டு போட்டியின் இறுதியில், பழைய மாணவர்களுக்கான ஒரு ஓட்டப்போட்டி ஒன்று நடைபெற்றது. அந்த போட்டியில் ஹஸன் பங்கு பற்றினான். ஹஸனுடன் பங்குபற்றியவர்கள் அனைவரும் கடுமையான ஓட்டவீரர்கள். என்றாலும், "இதில் நான் தான் வெற்றி பெறுவேன்" என்று ஹஸனுடைய தன்னம்பிக்கை கூறியது. அது போலவே ஹஸன், ஓட்டப்போட்டியில், முதலாவதாக வந்து வெற்றியடைந்தான். பிறகு ஹஸனுக்கு கோல் மெடலும் பரிசும் கிடைத்தன. ஹஸன், அதை எடுத்துக் கொண்டு, சந்தோஷத்தில், அவள் அருகே சென்றான். ஹஸன் வருவதை பார்த்த அவள், அவன் மீதுள்ள கோபத்தில், அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றாள். அதுவும் ஹஸனின் மனதிற்கு பெரும் கஷ்டத்தை உண்டுபண்ணியது. அவன் கண்களும் கலங்கின. அங்கிருந்த, அவளின் நண்பியிடம், ஹஸன், "நான் மிகவும் கஷ்டப்பட்டு, கதையை எழுதினேன், அவளுக்கு அதை, வாசிக்க செல்லுங்கள்" என்று கூறி, அங்கிருந்து வெளியேறினான்.
"அவள், கதையை வாசித்திருப்பாலோ இல்லையோ" என்றொரு குழப்பம் ஹஸனின் மனதில் இருந்து கொண்டே இருந்தது. கதையை அவள் வாசிப்பதற்காக வேண்டி, அவளின் குடும்பத்தவர்கள் மாத்திரம் பார்க்கும் படி, கதையை ,ஹஸன், பேஸ்புக் இல் போட்டான். "நான் இவ்வாறு செய்தது, அவளுக்கு தெரியும் போதாவது, கதையில் என்ன எழுதியிருக்கின்றது" என்று, அவள் வாசிப்பாள்" என்ற நம்பிக்கையில் தான், ஹஸன் அவ்வாறு செய்தான். பிறகு, அவளின் சகோதரியிடமிருந்து, ஹஸனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேஸ்புக்கில் போட்டிருந்த கதையை, டிலிட் செய்யுமாறு அவள் கூறி, ஹஸனுக்கு ஏசினாள்.
அவள் பேசிய வார்த்தைக்கு, "டிலிட் செய்யவே கூடாது" என்று ஹஸன் நினைத்தான். "என்னால் டிலிட் பண்ண முடியாது” என்று கூறி, தொலைபேசி அழைப்பை துண்டித்தான். மறுபடி மறுபடி தொலைப்பேசி அழைப்பு வர, அதனை ஏற்றான். அவ்வழைப்பில் அவளின் தாய் பேசினாள். கதையை டிலிட் செய்யுமாறு, ஹஸனிடம் கேட்டாள். அதற்கு ஹஸன் "உங்கள் மகள் மீது நான் கொண்ட அன்பே, அந்த கதையில் தான் இருக்கிறது, என்னால் டிலிட் பண்ண முடியாது" என்று, அவளின் தாயிடம் கூறினான். அதற்கு அவள், "தயவு செய்து கதையை டிலிட் செய்யுங்கள்" என்று கூறி அழுதாள். ஹஸனுக்கு பாவமாக இருந்தது. "சரி, நான் டிலிட் பண்ணுறேன்; எனக்கு உங்கள் மகளிடத்தில் கொஞ்சம் பேச வேண்டும்; தொலைபேசியை கொடுக்க முடியுமா?" என்று, ஹஸன், அவளின் தாயிடம் கேட்டாள். "சரி" என்று கூறி, தொலைபேசியை மகளிடம் கொடுத்தாள்.
"கதையை வாசித்தீர்களா?" என்று ஹஸன் அவளிடம் கேட்டதற்கு, அவள் "வாசித்தேன்" என்று ஹஸனிடம் கூறினாள். “என்ன சொல்கின்றீர்?" என்று ஹஸன் அவளிடம் கேட்டான். அதற்கு அவள், "என்ன சொல்ல?" என்று அவள் பதிலளித்தாள். "அவளுக்கு என்னை பிடிக்கவில்லை" என்பதை ஹஸன், அவள் சொன்ன அந்த பதிலினாலே, புரிந்து கொண்டான்." ஹஸன் அவளிடம், "என்னுடன் பேசுவீர்களா?" என்று கேட்டான். அதற்கு அவள் "எங்கயாவது கண்டால், ஸலாம் மட்டும் தான் சொல்லுவேன்; பேச மாட்டேன்” என்று, ஹஸனிடம் கூறினாள். பிறகு, ஹஸன், "சரி; கதையை டிலிட் பண்ணுறேன்" என்று கூறி, அழைப்பை துண்டித்தான். பிறகு ஹஸன், பேஸ்புக்கில் போட்ட கதையையும் டிலிட் செய்தான்.
ஹஸன், எவ்வளவு தான், முயற்சி செய்தாலும் அவளுக்கு ஹஸனை பிடிக்கவில்லை. ஹஸன் அவள் மீது வைத்திருந்த, தூய்மையான காதலை கூட, அவள் புரிந்து கொள்ளவில்லை. அவளுக்கு ஹஸனை பிடிக்கவுமில்லை. "எப்போதாவது ஒரு நாள், என் கதையை அவள், ஆர்வமாக வாசித்தால், அவளுக்கு என்னை பிடிக்கும் " என்று ஹஸனின் மனம் கூறியது. "அவளை இழந்து விடக்கூடாது, தான் விரும்பிய பெண் தனக்கே கிடைக்க வேண்டும்" என்று, நினைத்த ஹஸன், கதையை மறுபடியும் பேஸ்புக்கில் போட்டான். அதைப் பார்த்த, அவளின் சகோதரி, ஹஸனுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்க, ஹஸன் அதை ஏற்கவில்லை.
அன்று பெப்ரவரி 5 இம் திகதி. அன்றைய நாள் இரவு, ஹஸன் விரும்பிய பெண்ணினுடைய, தந்தை, தாய், சகோதரி, சகோதரன் அனைவரும் ஹஸனை தேடி, அவனுடைய வீட்டிற்கு வந்தனர். அப்போது ஹஸனுடைய தந்தை வீட்டில் இருக்கவில்லை. கடைக்கு பொருட்களை வாங்க, கொழும்பிற்கு சென்றிருந்தார். நடந்த அனைத்தையும் அவளின் தந்தை, ஹஸனுடைய தாயிடம் கூறினார். ஹஸனுடைய அனைத்து கூத்துக்களையும், கூறிக் கொண்டிருந்த அவர், திடீரென்று, ஹஸனுடைய சேட்டை பிடித்து, அவனை அடிக்க கையோங்கினார். அந்த நேரத்தில் ஹஸனுடைய தாய் அழுதாள்.
அவர் அடிக்காமல் ஹஸனை விட்டு, "இவனின் முகத்தை பார்த்தால், அடிக்க கூட மனம் இல்லை" என்று கூறினார். "உங்கள் மகனுக்கு அறிவுறைகளை கூறி, எல்லாவற்றையும் நிறுத்துமாறு கூறுவதற்காக தான், இங்கே வந்தோம்" என்று அவர் ஹஸனிடம் தாயிடம் கூறினார். "ஆரம்பத்திலிருந்து, ஹஸனுடைய தந்தையுடன், நான் நல்ல முஹப்பத்தாக இருந்தேன்; அந்த காரணத்திற்காகவும், அவருடைய கௌரவத்திற்காகவும் தான், இதுவரை நான், உங்கள் மகனுக்கு, எதுவுமே சொல்லவில்லை" என்று மேலும் அவர் கூறினார். அதையெல்லாம் கேட்ட ஹஸன், அங்கிருந்து விலகி, அறையிற்கு சென்று, மெத்தையில் சாய்ந்தான்.
அந்த இடத்திற்கு வந்த, அவளின் சகோதரி “ஏன்டா இபிடியெல்லாம் பண்ணுற" என்று ஹஸனிடம் கூறி அழுதாள். அந்த நிமிடம் ஹஸன், அவளின் மீதுள்ள அனைத்து கோபங்களையும் மறந்து, தன் இரு கைவிரல்களால், அவளின் கண்ணீரை துடைத்தான். "இவன் நல்லவன், கெட்டவன் என்று இல்லை, நல்ல திறமையும் இருக்கிறது, யாழ்ப்பாணத்தில், அங்கு கதை எழுதுபவர்களுக்கு எல்லாம், ஒரு எழுத்துக்கு ஐந்து ரூபாய் கணக்கில் கொடுக்கப்படுகின்றது. இவனிடமுள்ள திறமையை, அந்த மாதிரி வழியில் பயன்படுத்தியிருக்கலாம்” என்றெல்லாம், அவளின் சகோதரி கூறினாள். இறுதியாக, அவளின் குடும்பத்தினர்கள் ஹஸனிற்கு அறிவுறைகளை கூறி விட்டு, அங்கிருந்து சென்றனர். அவர்கள் சென்றதற்கு பிறகு, ஹஸன், பேஸ்புக்கில் Intermission என்ற போட்ஸ் ஐ போட்டான்.
எவ்வளவு தான் முயற்சி செய்தும், நாஸிர் ஹஸனுக்கு, அவளை மறக்க முடியவில்லை. அவளின் நினைவுகள் எல்லாம் வந்து, அவனை கண்கலங்க வைக்கச் செய்தன. "கனவில் ஒரு பெண் வந்தது; அந்த பெண் மறுபடியும் ஞாபகத்திற்கு வந்தது; அவள் யாரென்று கண்டு பிடிக்க நினைத்தது; அவளின் பெயரை விரும்ப ஆரம்பித்தது; கனவில் கண்ட அந்த பெண்ணையே நேரில் பார்க்க கிடைத்தது; அவளுடன் பேசி, பழகியது; அவளின் வாழ்க்கையே மாற்ற நினைத்தது; அவளை விரும்பியதை எல்லாமே நினைத்து பார்க்கும் போது, என் தலையெழுத்தில் இருக்கும் பெண் அவளாக இருக்குமோ? என்றெல்லாம் ஹஸனின் மனம் கூறியது. பாடசாலை வாழ்க்கையில் ஹஸன், அவள் ஒருத்தியை தவிர வேறு எந்தப் பெண்ணிடமும், பேசி பழக வில்லை. அவளை இழந்துவிடப்படாது" என்று ஹஸன் நினைத்தான். வாழ்க்கையே கதையாகி எழுதி, எடுத்த, முதல் முயற்சி, தோல்வியிலும் அவமானத்திலும் முடிவடைந்தது. இரண்டாவது முயற்சியாக கவிதையொன்றை எழுதினான். அந்த நேரத்தில், அவன், இருந்த நிலமையும், அவனுடைய கஷ்டத்தையும், அவனுடைய உள்ளத்தில் தோன்றிய அனைத்து கவலைகளையும், உணர்வுகளையும் வைத்து, யதார்த்தமாக கவிதையொன்றினை எழுதினான்.
என் அன்பே! வாழ்க்கையில் எனக்கு எவ்வளவோ கஷ்டம்.
நான் ஆசைப்படுபவைகளையெல்லாம் உண்ண கூட, கையில் எந்தவொரு வருமானமும் இல்லை.
அணிவதற்கு கூட ஒழுங்கான ஆடையில்லை. எப்படி இருக்க வேண்டிய பொடியன். இப்படி இருக்குறானே! சூழ்நிலை அப்படி.
இது தான் என் நிரந்தர வாழ்க்கையும் இல்லை. என் பட்டப்படிப்பு முடியும் வரைக்கும் தான் இந்த கஷ்டங்கள் எல்லாமே!
ஒன்றரை வருடங்கள் கழிந்து, இன்னும் ஒன்றரை வருடங்கள் இப்படியே வீட்டில் இருக்க, வாழ்க்கையே வேண்டாம் என்று, தோன்றுகிறதே!
நான் உன் மீது உயிரே வைத்திருக்கிறேன், என்று, எனக்கு பொய் எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நான் உன்னை, ஒரு உயிராக மதித்தேன் என்று, என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
நீ இல்லையென்றால் எனக்கு, வாழ்க்கையொன்று இல்லையென்று இல்லை. நீ எனக்கு கிடைக்காவிட்டால், உன்னை விட நல்ல பெண்ணுடன் நான் நன்றாக வாழ்ந்து காட்டுவேன்.
யாரோ முகம் தெரியாத ஒரு பெண்ணுடன் வாழ்ந்து காட்டுவதை விட, என் மனதிற்கு பிடித்த உன்னுடன் வாழ என் மனம் ஆசைப்படுகிறது. அது தவறா? என் அன்பே!
உன் எவ்வளவோ தவறுகள் இருந்தும், அதை ஒன்றையுமே கணக்கெடுக்காமல் உன்னுடன் பேசினேன். ஆனால் நான் செய்த ஒரே ஒரு தவறை மனதில் வைத்துக் கொண்டு, என்னுடன் பேசுவதை நிறுத்தினாய். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. என் அன்பே!
ஆரம்பத்தில் நான் ஒரு பெண்ணை விரும்பியதையும், அவள் என்னை வேண்டாம் என்று சொன்னதையும், நினைத்து. ஏன் இவனை அவள் வேண்டாம் என்று சொன்னாள் என்று நீ சிந்தித்தாய்.
தற்போது நான் உன்னை விரும்பியதையும், நீ என்னை வேண்டாம் என்று சொன்னதையும் நினைத்து, வேறொரு பெண், "ஏன் இவனை அவள் வேண்டாம் என்று சொன்னாள், என்று சிந்திக்க கூடாது" என்று நினைக்கிறேன் என் அன்பே!
என் கனவில் வந்த பெண்ணே! நீ யாரென்று கண்டு பிடித்தேனே! நீ என் கதையை வாசித்து, என் அன்பை புரிந்து கொள்ளும் வரை, நான் எவ்வளவு காலம் தான் காத்திருக்க.
நான் காத்திருப்பேன் காலம் காத்திருக்குமோ என்று எனக்கு தெரியாது. என் கதையை வாசித்து, சீக்கிரம் என் அன்பை புரிந்து கொள், என் அன்பே!
இப்படியெல்லாம் ஹஸன், மனதில் தோன்றிய அவள் மீதான தூய்மையான காதல் உணர்வை, வெளிப்படுத்தும் விதத்தில் கவிதையை, அழகாக எழுதி முடித்தான்.
கவிதையை, அவள் வாசிப்பதற்கு, என்ன செய்வதென்று யோசித்தான். அவளுடைய குடும்பத்தவர்களுக்கு கவிதையை வட்ஸப்பில் அனுப்பினான். “அக்கவிதை அவளுக்கு பகிரப்பட்டு, அவளிற்கு சென்றடையும் போது, நிச்சியமாக அவள் அதை வாசிப்பாள்" என்ற நம்பிக்கையில், ஹஸன் அவ்வாறு செய்தான்.
சில நாட்களில் அவளின் குடும்பத்தவர்கள் மீண்டும் ஹஸனை தேடி, அவனுடைய வீட்டிற்கு வந்தனர். குடும்பத்தவர்கள் அனைவரும் த்ரீவிலில் இருக்க, அவளின் தந்தை, மாத்திரம் வீட்டிற்கு வாசலிற்கு வந்து, கதவை தட்டினார். கதவு திறப்பட்டது. அவர் திகைத்து போய் நின்றார். அந்த நேரம், ஹஸனுடைய தந்தை வீட்டில் இருந்தார். "உங்களது மகன், கவிதையொன்றை எழுதி, தனது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் அனுப்பியிருக்கிறான்" என்ற விடயத்தை, அவர் ஹஸனின் தந்தையிடம் கூறினார்.
"அன்று Intermission' என்று நாஸிர் ஹஸன், பேஸ்புக்கில் போட்டதற்கு பிறகு, எல்லாம் முடிவடைந்து விட்டது என்று நினைத்தேன்" என்றும் அவர் ஹஸனின் தந்தையிடம் கூறினார். அப்போது ஹஸன், அறையில் சாய்ந்து கொண்டிருந்து, அவ்வனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். "இத்துடன் மகனுக்கு எல்லாத்தையும் நிறுத்தச் செல்லுங்கள்" என்று அவர் ஹஸனின் தந்தையிடம் கூறிவிட்டு சென்றார்.
அவர் சென்றதற்கு பிறகு, ஹஸனின் தந்தை, ஹஸனுடன் பேசுவதற்கு அறைக்கு வந்தார். அறிவுறைகளை ஹஸனுக்கு வழங்கி, "உன்னுடைய கூத்துக்கள் எல்லாத்தையும் இத்தோட நிறுத்துங்கள்" என்று கூறினார். "தந்தைக்கென்றே தனி மரியாதை ஊர் உலகத்தில் காணப்படுகிறது; நான் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும், என் தந்தையின் கௌரவம் தான் பாதிக்கப்படுகின்றது; போதும், இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திவிடுவோம்" என்று ஹஸனின் மனம் கூறியது. "ஒரு பெண் மீது எந்தளவுக்கு அன்பு வைக்க முடியுமோ அந்தளவுக்கு அன்பு வைத்து, அவளுக்கு அதை புரிய வைக்க, கைவிரல் வலிக்கும், முதல் முயற்சி, கதையை எழுதி கொடுத்தேன், அவள் என்னை புரிந்து கொள்ளவில்லை, கடைசி முயற்சி, கதையை மையமாக வைத்து, கவிதையொன்றை எழுதி அனுப்பினேன்; அதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை; என்பதை நினைத்து கவலைப்பட்டான். வாழ்வில் முதல் தடவையாக ஒரு பெண்ணுடன் பேசி,பழகி, அவள் மீது தூய்மையான காதல் கொண்டு, அவளுக்கு அதை புரிய வைப்பதற்கு, நாஸிர் ஹஸன் எடுத்த முயற்சிகள், தோல்வியிலும் அவமானத்திலும் முடிவடைந்தன.
வாழ்வில் பட்ட அவமானங்கள், அடிக்கடி வந்து, ஹஸனை கண்கலங்கச் செய்தன."நான் என்னுடைய வாழ்க்கை கதையை பிரபல்யமாக்க வேண்டும்; எது தனக்கு அவமானத்தை பெற்றுத் தந்ததோ, அதை வைத்தே பெரியதொரு வெற்றியை நான் அடையவே வேண்டும்" என்ற நினைத்தான். "என்னுடைய வாழ்க்கை கதை, தமிழ் சினிமாவில் சிறந்தவொரு படமாக வர வேண்டும்" என்று ஆசைப்பட்டான். "என் வாழ்க்கை கதையை அவள் வாசித்து, என்னை புரிந்து கொள்ளாவிட்டால், கதை எழுதி, நான் பட்ட கஷ்டங்கள் வீணாக கூடாது என்பதற்காக, அக் கதையை தமிழ் சினிமாவில் ஒரு சிறந்தவொரு படமாக இயக்குவேன்" என்று அவளுக்கு எழுதி அனுப்பிய, கதையிலும் கூட, ஹஸன் குறிப்பிட்டிருந்தான். அந்த உள்நோக்கத்தில் தான், கதையில் கதைக்கலங்களை, இந்தியாவிலுள்ள நகரங்களை வைத்து, எழுதியிருந்தான்.
வாழ்க்கை கதையை, நாஸிர் ஹஸன், தமிழ் சினிமாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்தான். அவனுடைய முதல் முயற்சி, தமிழ் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் நிறைய பேருடைய, உண்மையான பேஸ்புக் ஐடியை கண்டு பிடித்து, அவர்களை நண்பர்களாக்கினான். புதிதாக திரைப்படமொன்று வெளியாகியவுடன், உடனே அப்படத்தை இயக்கிய இயக்குனரையும், படத்தில் நடித்த நடிகர்களையும் பேஸ்புக்கில் நண்பர்களாக்கினான். அதில் சில இயக்குனர்களிடம் நாஸிர் ஹஸன் வாழ்க்கை கதையை கூறினான். "கதையை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் சென்னை வாருங்கள்" என்பதே இயக்குனர்களிடம் பதிலாக காணப்பட்டன.
இயக்குனர் ஒருவரின் மூலம், ஹஸனுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவர்களின் வட்ஸ்சப் இலக்கத்தை பெற்றுக் கொண்டான். அவருடன் வட்சப்பில் பேசினான். அவர் ஹஸனுடன் அன்பாகவும் பணிவாகவும் பேசினார். "நான் என்னுடைய வாழ்க்கையை கதையாக எழுதினேன், அக்கதையை நான், தமிழ் சினிமாவில் சிறந்தவொரு படமாக இயக்கி, நான் ஹீரோவாக நடித்து, அப்படத்தை எனக்கு மிகவும் பிடித்த நடிகரான சிவகார்த்திகேயன் அவர்கள் தயாரித்து வழங்க, நான் ஆசைப்படுகிறேன்' என்றெல்லாம் நாஸிர் ஹஸன், தன்னுடைய கனவை, யோகிபாபு அவர்களிடம் கூறினான். ஹஸனுடைய ஆசையையும் கனவையும் அவர் புரிந்து கொண்டார். "நீங்கள், சென்னைக்கு சென்று, ஒரு இயக்குனரின் கீழ், ஆறு மாத காலம் உதவி இயக்குணராக பணி புரியுங்கள். பிறகு என்னை தொடர்பு கொள்ளுங்கள், நான் சிவகார்த்திகேயன் அவர்களுடன் பேசி, அவரிடத்தில் அழைத்துச் சென்று, நீங்கள் நினைத்ததை சிறப்பாக செய்வோம்" என்று யோகிபாபு அவர்கள் நாஸிர் ஹஸனிடம் கூறினார்.
"இந்தியாவிற்கு செல்வதற்கும், அங்கு சென்று தங்குவதற்கும் எந்தவொரு வசதி வாய்ப்பும் என்னிடம் இல்லை; இங்கே படுகின்ற கஷ்டம் போதாததற்கு, அங்கு சென்றால், இன்னும் கஷ்டம் தான்" என்றெல்லாம் நினைத்த ஹஸன் அந்த ஆசையை கைவிட்டான். என்றாலும், "வேறு யாராவது நல்ல இயக்குனர் ஒருவர், என் வாழ்க்கை கதையை படமாக இயக்கி, பிரபல நடிகர் ஒருவர் நடித்தால், அப்படம் ஹிட் ஆகும்" என்றொரு யோசனை ஹஸனுக்கு தோன்றியது. அதற்காக முயற்சித்தான். 'சிக்ஸர்' என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனரான 'சசி' என்பவர், நாஸிர் ஹஸனுடைய வாழ்க்கை கதையை, தமிழ் சினிமாவில் சிறந்தவொரு படமாக இயக்குவதாக கூறினார். இந்தியாவிற்கு செல்லாமல் என்னுடைய கனவை நனவாக்க முடியாது என்று ஹஸன் நினைத்தான். நாஸிர் ஹஸனிடமுள்ள திறமைகளுக்கு, அவனுக்கு நிறைய வாய்ப்புகள் அமைந்தாலும், அவனுடைய ஏழ்மை அவனுடைய கனவுகளுக்கு பெரும் தடையாக அமைந்தது.
சன் டீவியில் வீடியோ ஜாக்கியாக இருந்த, அர்ஷனா ரவிஷ்ஷந்ரன், பேஸ்புக்கில் நாஸிர் ஹஸனுடைய நண்பராக காணப்பட்டதனால், ஹஸன் பேஸபுக்கில் எழுதி, போட்டிருந்த, கவிதையை, அவள் வாசித்தாள். "உங்களுடைய கவிதையை, வீடியோவொன்றில் கூறி, 'Ungalmedai@sunnetwork.in' என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்; அதனை எம்முடைய, சன் நெட்வேக் அனைத்திலும் போட்டுக் காட்டி, உங்கள் திறமையை உலகறியச் செய்வோம்" என்று அவள் ஹஸனிடம் கூறினாள். ஆனால், ஹஸன் அதற்கு முயற்சி செய்யவில்லை.
"நான் என்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்காக கதை, கவிதை போன்றவற்றை எழுதவில்லை; என் மனதிற்கு பிடித்த பெண்ணிற்கு, என் அன்பை புரிய வைக்க எடுத்த முயற்சி தான் அது; என்னை அவள் ஒரு நாள் புரிந்து கொண்டு; அவளுக்கு என்னை பிடித்திருந்தால் போதும்; வேறு எதுவுமே தேவையில்லை" என்றெல்லாம் ஹஸனுடைய மனம் கூற, ஹஸனுக்கு கிடைத்த நல்லொரு வாய்ப்பையும் ஹஸன் தவறிவிட்டான். வீடியோ ஜோக்கியாக தன் வாழ்க்கையை தொடங்கிய, அர்ஷ்ஷனா ரவிச்சந்தரன், அதற்கு பிறகு விஜய் டீவியில், ராஜா ராணி 2, சீரியலில் வில்லியாக நடித்ததுடன், பிக்போஸ் 7 நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வெற்றியாளராகி, பிரபல்யமாகியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாஸிர் ஹஸனுடைய தந்தை, 'The Flower City' என்ற பெயரில் வாடகைக்கு செய்த கடையில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமடைந்தார். ஆரம்பத்திலிருந்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தத்தை பெற்றிருந்தார், அரசாங்க உத்தியோகப்பூர்வ கடிதமொன்றை எழுதும் தேவை யாருக்காவது ஏற்பட்டால், மக்கள் அனைவரும் ஹஸனுடைய தந்தையை தான் தேடி வருவார்கள். யாருக்காவது ஏதாவது ஒரு பிரச்சினையென்றாலும் அவரையே தேடி வந்து, அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வர். அனைத்து இன மக்களினாலும், வரவேற்கத்தக்க ஒரு தலைவராக திகழ்ந்தார். முஸ்லிம் விவாகப்பதிவாளராகவும், சமாதான நீதியவானகவும் காணப்பட்டதனால் அவருடைய தேவையில்லாத யாருமே ஊரில் இல்லை. மேலும் பள்ளிவாசலுடன் நெருங்கிய தொடர்புடைய மனிதராகவும் காணப்பட்டார். அவர் மீதுள்ள மக்களின் நம்பிக்கையினால், அவர் சீட்டு பணமும் சேமித்து, அதனை உரியவர்களுக்கு சரியான நேரத்திற்கு வழங்கும் வேலையையும் செய்தார்.
அவர், அவ்வாறெல்லாம், அனைவராலும் புகழப்படுவதும், அவருடைய முன்னேற்றத்தை பார்த்து, ஒரு சிலருக்கு பொறுக்க முடியவில்லை. ஊரில் சிங்களர் சிலர், அவரைப் பற்றி ஒரு அவதூறு ஒன்றை பரப்பினர்."சிங்களவர் சிலர், கடைக்கு வந்து, ஹஸனின் தந்தையிடம் கப்பம் கேட்டதாகவும், அதை அவர் கொடுக்காததனால், அப்படி செய்ததாகவும், ஹஸனுடைய தந்தை அனைவரிடத்திலும் கூறினர். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, கொட்டியாகும்புரவில் வாடகைக்கு செய்த கடையை, கடை உரிமையாளர் திடீரென்று கேட்க, கடையை கொடுக்கும் நிலைமைக்கு ஹஸனுடைய தந்தை ஆளானார்.
யட்டியந்தோட்டையில் மனோகனேஷன் அவர்கள் கைப்பற்றிய கடை, ஹஸனுடைய தந்தையினுடைய பெயரில் இருந்ததனால், மனோகனேஷன் அவர்களால் அதை யாரிற்கும் விற்க முடியவில்லை. இறுதியில் ஹஸனுடைய தந்தையிடம் கடையினுடைய சொத்து பத்திரம் வர, அதை அவர் ஒருவருக்கு விற்றார். கிடைத்த பணத்தில், இருபத்தைந்து லட்சம் பணத்தை, கொட்டியாகும்புவில் வாடகைக்கு இருந்த, வீட்டு உரிமையாளருக்கு கொடுத்து, ஐம்பது லட்சத்திற்கு வீட்டை சொந்தமாக எழுதிக் கொண்டார். மிகுதி பணத்திற்கு, வீட்டை வங்கியில் வைத்து, வங்கியிலிருந்து இருபத்தைந்து லட்சம் பணத்தைப் பெற்று உரிமையாளரிடம் கொடுத்தார். அதற்கு மாத மாதம் வங்கிக் கடனை கட்டாயம் கட்ட வேண்டிய நிலை இருந்தது. நடந்த எதையுமே அவர் குடும்பத்தில் ஹஸனிடமோ, அவனுடைய தாயிடமோ கூறவில்லை. அதை கேள்விப்பட்டதிலிருந்து, ஹஸனும், அவனுடைய தாயும் எப்போதும், அவருக்கு ஏசிய வண்ணமே காணப்பட்டனர். கடைசியில் ஹஸனுடைய தந்தை வீட்டை விற்கும் முடிவுக்கு வந்தார். வீட்டை தந்தவரே, மீண்டும் வீட்டை வாங்குவதாகவும் கூறினார்.
ஹஸனுடைய தந்தை, சம்பாரித்ததில், வீடுவாசலோ, நகைநட்டோ எதுவுமே சேமித்து வைக்கவில்லை. அவர் சேமித்து வைத்தது அனைத்துமே கடையில் பல லட்சக்காண பொருட்களை மட்டும் தான். "அவையனைத்தையும் எங்கு கொண்டு சென்று போடுவது" என்று யாருக்கும் தெரியவில்லை. ஹஸனுடைய தாயின் குடும்பத்தவர்கள், அந்த கஷ்ட நேரத்தில் கூட எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. அனைவரும் கைவிட்டார்கள். சிங்களவர்கள் சிலரினதும், ஊர் மக்களினதும் பேச்சை கேட்டு, ஹஸனுடைய தந்தையை குற்றம் சாட்டி, அவரை வெறுத்து ஒதுக்கினர். ஹஸனுடைய தந்தை பட்ட அவமானத்திற்கு, அந்த ஊரில் அவருக்கு, இருக்கவும் பிடிக்கவில்லை.
அவருடைய, சகோதரியின் மகளை, திருமண முடித்து கொடுத்திருக்கும், கண்டியில் தெல்தோட்டை ஊரிற்கு செல்ல வேண்டும்" என்று, அவர் மிகவும் ஆசைப்பட்டார். மேலும் தெல்தோட்டையில், ஹஸனுடைய தந்தையினுடைய மாமி, மாமா அனைவரும் அங்கு இருப்பதனாலும், அங்கு செல்ல நினைத்தார். ஆனால் ஹஸனுக்கு, அங்கு செல்ல பிடிக்கவில்லை. "சொந்த ஊர் யட்டியாந்தோட்டைக்கே மீண்டும் திரும்பி, கல்லுமலை வீட்டில் தங்கினால், எங்களுக்கு வீட்டு வாடகையில்லை." என்று நினைத்தான். அங்கு, வாடகைக்கு கடையொன்றை தேடுவதற்கு ஹஸன் முயற்சி செய்தான். யட்டியாந்தோட்டை நகரம், நகரமயமாக்கப்பட்டு வளர்ச்சியடைந்ததினால், அங்கு கடையொன்றுக்கு, மாதமொன்றுக்கான வாடகை ஒரு லட்சம். குறைந்த விலைக்கு கடையொன்றும் கிடைக்கவில்லை. "தெல்தோட்டைக்கே செல்லுங்கள்; கல்லுமலை வீட்டையும் சீக்கிரம் விற்றால், அதில் கிடைக்கும் பணத்திற்கு தெல்தோட்டையில் குறைந்த விலைக்கு சொந்தமாக வீடொன்றை வாங்கலாம்; நாங்களும் அங்கு தான் வருவோம்" என்று ஹஸனுடைய மாமி கூறினாள். "மாமி, சொன்னது உண்மையோ, பொய்யோ" என்று ஹஸன் யோசிக்கவில்லை. கடைசியில், ஹஸன் விருப்பமில்லாமல் தெல்தோட்டைக்கே செல்ல முடிவெடுத்தான்.
தெல்தோட்டையில், ஹஸனுடைய தந்தையினுடைய சொந்தக்காரர்கள், அங்கு கூலிக்கு கடையொன்றை தேடித்தந்தார்கள். செய்த, கடையிலிருந்த அவ்வளவு பொருட்களையும் ஏற்றுவதற்கு, பெரிய லொறி ஒன்று போதாது. அந்த ஒரு பெரிய லொறி, 3 முறை தெல்தோட்டைக்கு பொருட்களை ஏற்றிச் சென்றன. அதுமட்டுலாமல் வீட்டுப் பொருட்களையும் ஒரு முறை எடுத்துச் சென்றன. 2021 இல் குடும்பத்தில் அனைவரும், கொட்டியாகும்புரவில் வாடகைக்கு செய்த கடையையும், வீட்டையும் கொடுத்து விட்டு, தெல்தோட்டையில் வாடகைக்கு வீடொன்றையும் கடையொன்றையும் எடுத்து, அங்கு வாழச் சென்றனர்.
மத்திய மலைநாட்டின், குளிர்ச்சிகரமான ஊரான தெல்தோட்டைக்கு சென்றதற்கு பிறகு, ஹஸனுடைய தந்தை, "The Lovers City" என்ற, பெயரில், கடையை திறந்து, வியாபாரத்தை ஆரம்பித்தார். கேகாலை மாவட்டத்திலிருந்து கண்டி மாவட்டத்திற்கு இடமாறிய பிறகு, அவர் செய்து வந்த, விவாகப்பதிவு தொழிலிலிருந்தும் அவர் விலகினார். வியாபாரமும் ஓரளவுக்கு பரவாயில்லை."தெல்தோட்டையில் வியாபாரம் செய்து, முன்னேறுவது கஷ்டம். ஏன் இந்த ஊரிற்கு கடை செய்ய வந்திருக்கிறீர்கள்" என்று நிறைய கேட்டனர். "கடை, எங்கு போகுதோ, அங்கே, போகுது வாழ்க்கை, 2011 இல் யட்டியாந்தோட்டையிலிருந்து கொட்டியாகும்புர, 2021 இல் அங்கிருந்து தெல்தோட்டை." என்று ஹஸனின் மனம் கூறினர்.
'ஹஸனுடைய தந்தையினுடைய முன்னேற்றத்தை பொறுக்க முடியாத சிலர், திட்டமிட்டு செய்த சதி' என்று, கொட்டியாகும்புர மக்கள், பலர் அதனை ஏற்றுக் கொண்டனர். அவர் அங்கிருந்த வந்தது பலருக்கு, பெரும் கஷ்டமாகியது. அவருடைய தேவைகள் சிலருக்கு ஏற்பட, அவரை தேடி தெல்தோட்டைக்கும் அவர்கள் வந்தனர். தாயினுடைய குடும்பத்தவர்களும் கூட கடைசியில் அவரை புரிந்து கொண்டனர்.
ஹஸனுடைய தந்தைக்கு, யார் என்ன அநியாயம் செய்தாலும், யாருடனும் அவர் கோபித்துக் கொண்டதில்லை. வாழ்வில், யாரையும் பார்த்து முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்டதில்லை. அவருக்கு தீமை செய்தவர்களிடம் கூட அவர் நல்லவிதமாக பேசுவார். அதே குணம், ஹஸனிடமும் காணப்பட, அது தந்தையிடமிருந்து வந்தது என்பதை, அவன் இறுதியாக தான் ஹஸனுக்கு புரிந்தது,
ஹஸனுடைய தந்தை கடையில் சம்பாரிக்கின்ற பணத்தில், கடைக்கான வாடகை, வீட்டு வாடகை, வீட்டுச் செலவு என்று செலவுகள் கூடுதலாக அமைய, வியாபாரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் வரவில்லை. கடையிலுள்ள பொருட்கள் தான் விற்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக முடிவடைவதே தவிர, கடைக்கு மீண்டும் எந்தவொரு பொருட்கள் வாங்கப்படவில்லை. அப்படியே, காலம் போகப் போகப் கடைசியில் அரைவாசி பொருட்களே முடிவடைந்தன.
குடும்ப கஷ்டத்தை காரணமாக வைத்து, சொந்தக்காரர்கள் அனைவரும் ஹஸனுக்கு, வெளிநாட்டிற்கு போகுமாறு கூறி, அவனுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். வெளிநாட்டுக்கு செல்ல ஒரு துளி கூட ஹஸனுக்கு பிடிக்கவில்லை. அவன் வீட்டிலிருந்து, பட்டப்படிப்பை மேற்கொண்டான். ஹஸனுடைய இலட்சியம் கல்லூரிக்கு சென்று ஆசிரியராக வர வேண்டும் என்பதாகும். கல்லூரிக்கு விண்ணப்பிக்கின்ற காலம் வரும் வரை காத்திருந்தான்.
அனைவரும் ஹஸனை வெளிநாட்டிற்கு போகுமாறு, அவனுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்தனர். அதிலிருந்து தப்பிக்க, என்ன செய்வதென்று யோசித்த ஹஸன், அவனுடைய தந்தை செய்து கொண்டிருந்த கடையை, ஹஸன் பொறுப்பெடுத்து செய்தான். பிறகு ஹஸனுக்கு வியாபாரத்தில் ஒரு ஆர்வம் வந்தது. The Lover City போஸ் ஆகினான். அப்போது தான், ஹஸனுக்கு பொறுப்புணர்வு வந்தது. "வியாபாரத்தினூடாக வாழ்க்கையில் முன்னேறிக் காட்ட வேண்டும்" என்று, நினைத்தான்.
கடையை முன்னேற்றி, கடைக்கு, மக்கள் கேட்டு வருகின்ற பொருட்கள் அனைத்தையும் வாங்கி, கடையை, மக்கள் மத்தியில் பிரபல்யமாக்க நினைத்தான். அதற்கு, ஹஸனுக்கு பணம் தேவைப்பட்டது. தாயினுடைய குடும்பத்தவர்களிடம் கேட்டான். ஆனால் யாரும் அவனுக்கு கொடுக்கவில்லை. "யாரிடமும் கேற்க வேண்டாம்" என்று கடைசியில், ஹஸனுடைய உமம்மா, அவளது தங்க காப்பொன்றை விற்று, ஹஸனுக்கு ஒரு லட்சமொன்று கொடுத்தாள். அந்த ஒரு லட்சத்தை எடுத்துக் கொண்டு ஹஸன், தந்தையுடன்கொழும்பிற்கு சென்றான். நைட் கிறீம் உட்பட கொஸ்மடிக்ஸ்களை வாங்கி, அதிலிருந்து, அவன் ஆரம்பித்த வியாபாரம் மேலும் மேலும் சிறப்பாக அமைந்தது.
நாளுக்கு நாள் ஹஸனுடைய மனதில், அவன், வாங்கிய, கொஸ்மடிக்ஸ்களை விற்க விற்க, மீண்டும் அவற்றை வாங்கி, அதில் முன்னேற்றமடைந்தான். அவன், எதிர்ப்பார்த்தது போன்றே தெல்தோட்டை 'The Lovers City' என்ற பெயரில் செய்த கடையையும், தெல்தோட்டை மக்கள் மத்தியில் பிரபல்யமாக்கினான். அப்படியே ஹஸனுடைய தந்தையும், கடையை ஹஸனுக்கே செய்யுமாறு பொறுப்புக் கொடுத்து, அவர் முற்றாக விலகினார். அவர் வீட்டில் இருக்க, ஹஸன் தனியாக கடையை செய்து, அனைத்து செலவுகளையும் சமாளித்து குடும்பத்தை ஜீவித்தான். மேலும் அவன் ஒரு லட்சத்துக்கு இருபதாயிரமிற்கு கைத்தொலைபேசி ஒன்றையும் வாங்கினான். மேலும் அவனுக்கு தேவையான அனைத்தையும் வாங்கினான். அவனுடைய வாழ்க்கையும் அழகாகியது. தெல்தோட்டை ஊரும் அவனுக்கு மிகவும் பிடித்து போனது. "இதற்கு பிறகு இங்கயே தான் இருக்க வேண்டும்; இந்த தெல்தோட்டை ஊரை விட்டு வேறு எங்கயுமே போகப்படாது" என்று முடிவு எடுத்தான்.
கொட்டியாகும்புரவில் இருந்த வீட்டையும், வீட்டு உரிமையாளரின் சகோதரர், வங்கிக்கு கடனையும் அடைப்பதாக கூறி, வீட்டை அவர் பெயரில் எழுதி எடுத்தார். வங்கிக் கடன், வட்டி அனைத்தும் கழிந்து போக ஹஸனுடைய தந்தைக்கு கிடைத்த பணம் பத்து லட்சம் ரூபாய் தான். அதிலும் தந்தையின் வியாபாரக் கடன்களை அவர் கொடுக்க, எட்டு லட்சம் ரூபாய் தான் மிஞ்சது. ஹஸனும் தாயும் அப்பணத்தை கேட்டு எடுத்துக் கொண்டனர். அந்த நேரம் தெல்தோட்டையில் ஆறு லட்சம் ரூபாயிற்கு பதினைந்து பர்சேஸ் காணியொன்று இருந்தது. "அதனை எடுக்க வேண்டாம்" என்றே தந்தை கூற, "பணம் செலவாகிடும்" என்ற பயத்தில் எடுக்கவே நினைத்தான். இறுதியில் தந்தை, காணியை அவருடைய பெயரிற்கு எழுதுமாறு கூறினார், ஆனால், ஹஸன், தாயினுடைய பெயரிற்கு எழுதி எடுத்தான். "அக்காணி அவ்வளவு பெறுமதியில்லை, மூன்று லட்சத்திற்கும் விற்க முடியாமல் இருந்த காணி" என்று நிறைய பேர் கூறினர். தாயிற்கும், மகனுக்கும் ஹஸனின் தந்தை, எப்போதும் ஏசிக் கொண்டிருந்தார். அதையெதுமே ஹஸன் கணக்கெடுக்காமல், "பிற்காலத்தில் காணி பெறுமதியாகும்" என்று நம்பிக்கையில் ஹஸன் இருந்தான்.
சில மாதங்களிற்கு பிறகு, கல்லூரிக்கு விண்ணப்பிக்கின்ற நாள் வந்தது. ஹஸன் இஸ்லாம், சமூக விஞ்ஞானம், ஆரம்பக்கல்வி போன்ற பாடங்களுக்கு விண்ணப்பித்தான். "எனக்கு கல்லூரி நேர்முகப்பரீட்சைக்கான கடிதம், கட்டாயம் வரும்" என்ற நம்பிக்கையில் ஹஸன் காத்திருந்தான். மேலும் ஹஸனின் மனதில், பல கனவுகள் இருந்தது. "கல்லூரிக்கு வரும் வரைக்கும் கடையில், வியாபாரத்தை மேலும் மேலும் முன்னேற்ற வேண்டும், பட்டப்படிப்புக்கான பணத்தையும் கட்டி, பரீட்சையை எழுதி, அதையும் செய்து முடிக்க வேண்டும்." என்றெல்லாம் ஹஸன் நினைத்தான்.
ஹஸன், தெல்தோட்டைக்கு சென்றதற்கு பிறகு தான், அவனுடைய தந்தையுடைய சொந்தக்காரர்களுடன் பேசி பழகினான். முன்பெல்லாம் அவர்களுடன் எந்தவொரு சம்பந்தமுமில்லை. "பூநோனா" என்ற செல்லப் பெயரையுடைய, ஹஸனுக்கு, பெரியும்மா ஒருவர் அறிமுகமானார். அவளைப் பற்றி, ஹஸன் சிறுவயதிலிருக்கும் ஹஸனுடைய தாய், ஹஸனிடம் கூறியிருந்தாள். தெல்தோட்டைக்கு செல்லும் வரை, ஹஸனுக்கு பூநோனா பெரியும்மாவுடன் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும், தூரத்து சொந்தக்காரர்களாகவே ஹஸன் நினைத்திருந்தான்.
அந்த பெரியும்மா, ஹஸனுடைய தந்தையினுடைய மாமி மகள். ஹஸனுடைய தந்தைக்கு, அவள் மைனி, என்ற உறவு. இருவரும் முன்பு விரும்பியதாகவும், அவளைத் தான், ஹஸனுடைய தந்தை திருமண முடிக்க இருந்ததாகவும், ஹஸனுடைய தாய், ஹஸனிடம் கூறியிருந்தாள். ஹஸன் மீது மிகவும் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொண்டாள். தெல்தோட்டை சென்றதற்கு பிறகு, ஹஸனுக்கு கிடைத்த பெரியதொரு பொக்கிஷமாக, பூநோனா பெரியம்மாவின் பாசம் கிடைப்பெற்றது. அவர்களிடம் காணப்பட்ட நல்ல குணமும், யாருக்கும் கெடுதல் நினைக்காத, அவர்களுடைய நல்ல மனமும், ஹஸனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஹஸனும் பெரியும்மாவுடன் மிகுந்த அன்புடனும் பாசமுடனும் நடந்து கொண்டான்.
ஒரு நாள், பெருநாள் தினமொன்றில், ஹஸனுக்கு பெருநாள் காசாக, ஐநூறு ரூபாய் ஒன்றை தந்தாள். “ஏன் எனக்கு" என்று அவர்களிடம் கேட்டதற்கு, நீங்களும் என்னுடைய பிள்ளை மாதிரி" தான் என்று பெரியும்மா கூறினாள். "அவள் தந்த காசு பெரிதல்ல, என்றாலும், அவள் கூறிய அந்த வார்த்தை ஹஸனுக்கு பெறுமதியாக காணப்பட்டது. பெரியும்மாவிடம் ஹஸன், அவளுடைய வாழ்க்கை கதையை கேட்க, அவள் அனைத்தையும் ஹஸனிடம் கூறினாள்.
ஹஸனுடைய தந்தை, அவளை விரும்பி, அவளையே மணமுடிக்க இருந்ததாகவும், ஹஸனுடைய தந்தையின், தாயும் சகோதரியும் அதற்கு விருப்பப்படாததினால், அது நடக்காமல், பெரியதொரு ஏமாற்றத்தை அவள் சந்தித்ததாகலும் ஹஸனிடம் கூறினாள். அந்த நேரம் அவளுக்கு வந்த வைராக்கியத்தில், அவளுடைய வாழ்க்கையே, அவள் தியாகம் செய்ததாக, அவள் கூறிய கதையை கேட்ட பிறகு, ஹஸனின் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஹஸனும் பெரியும்மாவை, மிகவும் நன்றாக புரிந்து கொண்டு, அதிகமாக பாசம் வைத்தான். "ஒரு நாளும் பெரியும்மாவிற்கு எந்தவொரு கஷ்டத்தையும் கொடுக்க கூடாது; நானும் நன்றாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றெல்லாம் ஹஸன் நினைத்தான். ஹஸன், தன்னைப் பற்றி தன்னுடைய வாழ்க்கை கதையையும், அவங்களிடம் கூறனான். ஹஸனின் கதையை பெரியும்மாவிடம் கூற, பெரியும்மா ஹஸனை, மேலும் நன்றாக அவனை புரிந்து கொண்டாள். ஹஸன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தாள். ஹஸன் எதையுமே மறைக்காமல், அனைத்து விடயங்களையும் பெரியும்மாவிடம் கூறினான்.
பெரியும்மாவுடன் பேசும் போது எல்லாம், அவன் மனதிற்கு ஒரு ஆறுதலும் சந்தோஷமும் ஏற்பட்டன. முன்பெல்லாம் யாரென்றே தெரியாத, புதிதாக அறிமுகமாகிய ஒரு சொந்தத்தை, உறவுகளில், அனைவரையும் தாண்டி, ஹஸன் நேசித்தான். தாய் மீது எந்தளவுக்கு பாசம் வைத்தானோ, அதையும் தாண்டி, ஹஸன் பெரியும்மாவையும் தன் தாயாகவே நினைத்து, அதிகமாக பாசம் வைத்தான். "நான் என்னுடைய மகனை, மனதில் எந்த இடத்தில் வைத்திருக்கிறேனோ, அதே இடத்தில் தான் உங்களையும் வைத்திருக்கிறேன்" என்று பெரியும்மா ஹஸனிடம் கூறினாள். நண்பனொருவனிடத்தில் இருந்து எதிர்ப்பார்த்த உண்மை, நம்பிக்கை, ஒரு பெண்ணிடத்தில் இருந்து எதிர்ப்பார்த்த அன்பும், புரிந்துணர்வும் ஹஸனுக்கு, பூநோனா பெரியும்மாவிடமிருந்து கிடைக்கப்பெற்றது. ஹஸன் பெரியும்மா மீது வைத்த பாசம், சொந்தக்காரர்களிலே 'பூனோனா பெரியும்மா' என்ற ஒரு சொந்தம் போதும், வேறு எந்த சொந்தமும் தேவையில்லை" என்று ஹஸனை சிந்திக்க வைத்தது.
ஒரு நாள், ஹஸனுடைய, பாசம் மிகுந்த, பூனோனா பெரியும்மாவிற்கு, கடுமையான காய்ச்சல் ஒன்று ஏற்பட்டு, எந்திரித்து நிற்க முடியாதளவுக்கு, அவள் கஷ்டப்பட்டாள். "வாழ்க்கையில் இதற்கு முன்பு இவ்வாறானதொரு வருத்தம் ஒன்று வரவில்லை" என்று பெரியும்மா, ஹஸனிடம் கூறினாள். அந்த சமயம் ஹஸன், அவனால் முடிந்தளவு பெரியும்மாவை நன்றாக பார்த்துக் கொண்டான். "அவளுக்கு வந்த, அந்த காய்ச்சலை அவள், எனக்கு தந்து விட்டு, முற்றிலும் அவள் குணமடைய வேண்டும்" என்று, ஹஸன் நினைத்து, அவளின், நெற்றியில் முத்தமிட்டான். அது போலவே அவளுக்கு காய்ச்சல் குணமாகி, காய்ச்சல் ஹஸனுக்கு ஏற்பட்டது. ஆனால், பெரிதளவுக்கு ஹஸன், காய்ச்சலினால் அவதிப்படவில்லை. ஹஸனும் சில நாட்களில் குணமடைந்தான்.
கல்லூரி நேர்முகப் பரிட்சைக்கான கடிதம் வெளியிடப்பட்டதாக ஒரு தகவல், ஹஸனுக்கு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஹஸன் தபாற்காரனை எதிர்ப்பார்த்து காத்து நின்றான். தபால் நிலையத்திற்கு சென்று கேட்டுப் பார்த்தான். "கடிதம் வரவில்லையே" என்று அவர்கள் கூறினார்கள். 'கடிதம் வந்து அதைப் பார்ப்பது" போன்று ஹஸனுடைய தாய் கனவொன்றை கண்டு கண்டு, ஹஸனிடம் கூறினாள். அந்த நாளிலே, மிக நீண்டதொரு காத்திருப்பிற்கு பின், நாஸிர் ஹஸனுக்கு கல்லூரிக்கான நேர்முகப்பரீட்சைக்கான கடிதம் வந்தது. அதைப் பார்த்த தாய் சந்தோஷத்தில் அழுதாள். கடிதம் கிடைத்ததிலிருந்தே ஹஸன் மிகவும் சந்தோஷத்தில் இருந்தான். ஆரம்பக்கல்வி பாடத்திற்கு மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியிற்கு, நேர்முகப்பரீட்சைக்கு வருமாறு கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
கல்லூரி நேர்முகப் பரீட்சைக்கு செல்வதற்கு இருந்த அந்த சமயம், 'The Lovers City' என்ற பெயரில் நாஸிர் ஹஸன் வாடகைக்கு செய்து வந்த கடைக்கான இரண்டு வருட கால எல்லையும் முடிவடைந்தது, கடையை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு, கடைப் பொருட்கள் அனைத்தையும் வீட்டிலே போட்டு விட்டு, மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரிக்கு, ஆரம்பகல்வி பாடத்திற்கு நேர்முகப்பரீட்சைக்கு சென்று வந்தான்.
"அட்டாளச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியிருந்தும் கடிதம் ஒன்று வரும்" என்ற நம்பிக்கையில் இருந்தான். ஹஸன் நினைத்தது போலவே அங்கிருந்தும் கடிதம் வந்தது. இஸ்லாம் பாடத்திற்கு நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. பிறகு ஹஸன், அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு, இஸ்லாம் பாடத்திற்கு, நேர்முகப்பரீட்சைக்கு சென்று வந்தான். சென்று வந்ததிலிருந்து,"அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு, நான் நிச்சியமாக தெரிவு தான்" என்ற பெரியதொரு நம்பிக்கை ஹஸனுக்கு ஏற்பட்டது. சொந்தக்காரர்களின் வாயை மூடுவதற்காக அவர்கள் அனைவர்களிடத்திலும் நாஸிர் ஹஸன், கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு விட்டதாகவே கூறினான்.
கல்லூரிக்கு கூப்பிடும் வரையில், நாஸிர் ஹஸன், வீட்டிலிருந்த கடைப்பொருட்கள் அனைத்தையும் மற்றைய கடைகளுக்கு விற்பனைக்கு வழங்கி, பணத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டான். கொஷ்மடிக்ஸ் அனைத்தையும் தெல்தோட்டை பள்ளிவாசலிற்கு அருகிலுள்ள பார்மசியிற்கு வழங்கினான். பார்மஸியில் இருந்த, சகோதரரி ஒருத்தி, ஹஸனுடைய நிலைமை புரிந்து கொண்டு, அவ்வனைத்து கொஸ்மடிக்ஸ் பொருட்களையும், அவனுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு, அவனிடமிருந்து பெற்றுக் கொண்டான். அவற்றினால், நாஸிர் ஹஸனிற்கு, கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பணம் கிடைக்கப் பெற்றது.
அந்த நன்றிக் கடனுக்காக வேண்டி நாஸிர் ஹஸன், கல்லூரிக்கு வரும் வரை, பார்மஸியிற்கு சென்று, அந்த சகோதரியிடமிருந்து எந்தவொரு கூலியும் வாங்காமல், பார்மஸியில் வியாபாரமும் செய்து கொடுத்தான். "எந்தெந்த மருந்து மாத்திரைகளை, எது எதற்கு கொடுக்க வேண்டும்" என்பவற்றையெல்லாம் நாஸிர் ஹஸன், தெரிந்து கொண்டு, மருந்துகளையும் விற்றான். நம்பிக்கையாக அந்த சகோதரியும், ஹஸனை தனியாக பார்மஸியில் வைத்து விட்டு, செல்லும் போது, ஹஸன் அவளுக்கு நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் நடந்து கொண்டு, வியாபாரத்தையும் செய்து கொடுத்தான்.
"பணம் கையில் இருந்தால், தெரியாமலே செலவாகிவிடும்; ஏதாவது பிரயோசனமான வேலை செய்வோம்" என்று, நினைத்த நாஸிர் ஹஸன், அவனுக்கு கிடைத்த இரண்டு அரை லட்சத்தில், வீட்டுக்கு தேவையான பல தளபாடப் பொருட்களை வாங்கினான். அத்துடன் அவன் எடுத்திருந்த காணியில் பெகோ ஒன்றை வரவழைத்து, மணல் வெட்டி காணியை பெறுமதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டான். மேலும் வீட்டிலிருந்த, ஏனைய கடைப் பொருட்களை, ஒவ்வொரு கடைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விற்று, கிடைத்த பணத்தை வீட்டு செலவுகளுக்கு எடுத்தான்.
"சமூக வலையத்தளங்களை நல்ல விடயத்திற்கு பயன்படுத்த வேண்டும்; நம்மால் அனைவரும் நாளுக்கு நாள் பயனடைய வேண்டும்" என்று நினைத்த நாஸிர் ஹஸன், Education Information' என்ற பெயரில் வட்சப் குரூப்ஸ்களை உருவாக்கி அதில் கல்வி சம்பந்தமான தகவல்களை போட்டான். அதில் முக்கியமாக தேசிய கல்வியற் கல்லூரி சம்பந்தமான தகவல்களையே அதிகமாக போட்டான். அதனால் அதற்காக வேண்டி கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் குரூப்பில் இணைந்தனர். ஹஸனிடமிருந்து அவர்கள் அனைவரும் புதிய புதிய தகவல்களை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். அனைத்து தகவல்களும் நிறைய பேருக்கு பயனுள்ளதாக அமைந்தன. மேலும் கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரினதும் சந்தேகங்களை தீர்க்கும் விதத்தில் 'Collage Discussion' என்று வட்சப் குரூப் ஒன்றையும் ஹஸன் உருவாக்கினான்.
"குரூப்பில் கல்லூரி தொடர்பான சந்தேகங்களை தவிர வேறு வீணான தேவையில்லாத ஒன்றையும் பற்றி பேச வேண்டாம்; மீறி பேசினால் வட்சப் குரூப்பில் இருந்து ரீமூவ் பண்ணப்படுவீர்கள்” என்று ஹஸன் குரூப்பிலுள்ள அனைவருக்கும் கூறினான். அக்கட்டளையை மீறுவோரை குரூப்பை விட்டு ரிமூவ் செய்தான். பின்னர் அவனுக்கு தெரிந்தது அவன் நீக்கியவர்களில் சிலர் கல்லூரியில் சீனியர்ஷ் என்று. குரூப்பில் மீண்டும் இணைக்குமாறு அவர்கள் ஹஸனிடம் கேட்க, யாரையும் ஹஸன் இணைக்கவில்லை. "கல்லூரிக்கு வந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன்" என்று அவர்கள் கூறினார்கள்.
சீனியர்ஷ் பேசுவதாக கூறி, நிறைய பேர் தேவையில்லாமல் மெசேஜ் செய்வதாக குரூப்பிலுள்ள சிலர், குரூப் அட்மின் நாஸிர்ஹஸனிடம் முறைப்பாடு செய்தனர். "சீனியர்ஷ்" என்று கூறி குரூப்பிலுள்ள பெண் பிள்ளைகளுக்கு தேவையில்லாமல் மெசேஜ் தொந்தரவு செய்பவர்களுடைய இலக்கம் மற்றும் மெசேஜை ஸ்கிரீன் சொட் செய்து எனக்கு அனுப்புங்கள், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று ஹஸன் கூறினான். குரூப்பை விட்டு ரிமூவ் செய்ததனாலும், ஹஸனுடைய பேச்சுக்களினாலும் கோபமடைந்த சீனியர்ஷ், ஹஸனின் கல்லூரி வருகைக்காக காத்திருந்தனர்.
கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட அனைவருடைய பெயர் பட்டியலும் வெளியானது. பெரிய எதிர்ப்பார்ப்பும் நாஸிர் ஹஸன் இஸ்லாம் பாடத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர்களின் பெயர் பட்டியலை பார்த்தான். முதலில் நடுவிலிருந்து கீழ் வரையுள்ள பெயர்களையே அவன் பார்க்க, அவன் பெயர் இருக்கவில்லை. பின்பு மேலே மூன்றாவதாக, 'நாஸிர் ஹஸன்' என்ற அவனுடைய பெயர் இருப்பதை கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தான். அவன் எதிர்ப்பார்த்தது போன்றே, அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு, நாஸிர் ஹஸன் தெரிவு செய்யப்பட்டான். அவனுடைய வாழ்க்கையே அவன் ஜெயித்தது போன்று அவனுடைய மகிழ்ச்சி காணப்பட்டது. அதை ஹஸன் தாயிடம் கூற, அவளுக்கும் அவ்வளவு ஒரு சந்தோஷம். வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து ஹஸன் அடைந்த வெற்றியாகவும், அவனுக்கு கிடைத்த வரமாகவும் கல்லூரி வாய்ப்பு அமைந்தன.
ஒவ்வொரு பாடத்திலும் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், வெளியாகிய உடனே, மிக விரைவாக ஹஸன், அவனுடைய அனைத்து வட்சப் குரூப்ஸ்களிலும் போட்டான். கல்லூரிக்கு விண்ணப்பித்து, காத்திருந்த அனைவருக்குமே அது சென்றடைந்தன. கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட அனைவருமே ஹஸனுடைய அனைத்து உதவிகளுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
பெயர் பட்டியல் வெளியாகியும் கல்லூரிக்குள் மாணவர்களை உள்வாங்குவதற்கு தாமதமாகின. "கல்லூரிக்கு இன்னமுமே கூப்பிடவில்லையே; எப்படா எங்களை எடுப்பாங்க; இதற்கு மிச்சம் காத்திருக்க முடியாது; கல்லூரியே வேண்டாம்" என்று பல பேரினுடைய மெசேஜ் ஹஸனுக்கு வந்தது. “எல்லாம் நன்மைக்கு தான்; பொறுமை வேண்டும்; இறைவன் ஒன்றை தர தாமதப்படுத்தினால், அது எல்லாம் நம்முடைய நன்மைக்காக தான்; சற்று பொறுமையாக இருங்கள்" என்றெல்லாம் கூறி அனைவரையும் ஹஸன் ஆறுதல் படுத்தினான்.
"4 வருடங்கள் வீட்டிலே காத்திருந்து, கல்லூரிக்கு எடுப்பதற்கு தாமதமாக்கி, கல்லூரிக்கு எடுத்து, 3 வருடங்களுக்கு பிறகு தான் ஆசிரியத் தொழில் கிடைக்கும்; வயதும் போகுது " என்று நினைத்து ஹஸன் கவலைப்பட்டான். 3 வருட கல்லூரியை 2 வருடத்திற்குள் முடிப்பதற்காக நாஸிர் ஹஸன் முடியுமான முயற்சிகளை செய்தான். அது மட்டுமல்லால் அனைவரையும் மிகவும் அவசரமாக கல்லூரிக்கு எடுப்பதற்காக வேண்டிய போராடினான். அவ்வனைத்தையும் வைத்து சிங்கள மொழியில் ஒரு கடிதத்தை எழுதி, இலங்கை சமகி ஜனபல வேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களுக்கு வட்சப்பில் அனுப்பினான். அத்துடன் அவர்களுடைய வட்சப் இலக்கத்தையும், அக் கடிதத்தையும் ஹஸன் அவனுடைய Education Information வட்சப் குரூப்பில் போட்டு, அவர்களுக்கு அனுப்புமாறு ஹஸன் அனைவருக்கும் கட்டளையிட்டான்.
அனைவரும் ஹஸன் கூறிய படியே செய்தனர். ஹஸன் கடிதத்தில் கூறியிருந்த அனைத்தையுமே ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்கள் வாசித்து, அடுத்த நாள் இடம் பெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் கூட அவ்வனைத்தையுமே பேசியமை மகிழ்ச்சியான விடயமாகும். அதற்கு பிறகு கல்வியமைச்சு மிக விரைவாக அனைவரையும் கல்லூரிக்கு உள்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது. நாஸிர் ஹஸன், கல்லூரிக்கு தெரிவானவர்களுக்கு, கல்லூரி பதிவுக்கு கொண்டு செல்ல வேண்டிய பிணைமுறிவு ஒப்பந்தத்தை நிரப்புவது பற்றியும் மேலும் அது தொடர்பான சந்தேகங்களையும் தீர்த்து, நிறைய பேருக்கு தன்னால் முடியுமான உதவிகளை செய்தான்.
கல்லூரியை எதிர்ப்பார்த்த வண்ணம் காத்திருந்த, ஹஸனுடைய வட்சப் குரூப்பில் இணைந்திருந்த மாணவி ஒருத்தி, அவள் 2 பாடங்களில் 2 கல்லூரிகளுக்கு தெரிவானாள். அதில் இஸ்லாம் பாடத்திற்கு அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் பதிவை மேற்கொள்வதில் அவள் ஆர்வம் காட்டினாள். அவள் ஹஸனிடம் “எப்போது கல்லூரிக்கு எடுப்பாங்க" என்று ஒரே கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் அப்படி ஒரே கேட்க காரணம் அவளுக்கு வீட்டில் திருமணப்பேச்சு என்பதனால் தான். "ஒவ்வொரு மாதமும் இறுதியில் கல்லூரியிற்கு எடுப்பாங்க எடுப்பாங்க" என்று அவள் காத்திருந்து ஏமார்ந்து, கடைசியில் அவளது பெற்றோர் அவளுக்கு "கல்லூரிக்கு போக வேண்டாம்" என்று கூறி திருமணம் பேச்சு வார்த்தையும் மேற்கொண்டனர்.அந்த சமயம் பார்த்து கல்லூரிக்கு கூப்பிடும் நேரமும் வந்து விட்டது.
அவளது தாய் ஒரு முடிவு எடுத்தால், அதற்கு மறு பேச்சே கிடையாது. அந்த மாணவி அழுது அழுது "கல்லூரிக்கு போகவே வேண்டும்" என்று விடாப்பிடியாக இருந்தாள். தாயின் மனம் கொஞ்சம் கூட மாறவில்லை. மாறுவதற்கு எந்த வாய்ப்புமே இல்லையென்று மிகுந்த கவலையுடன், “இறைவன் தன்னுடன் இரக்கமில்லை; தன்னுடைய ஆசிரியக் கனவை நனவாக்கிக் கொள்ள முடியாமல் போனதே" என்று மிகவும் வேதனைப்பட்டாள். அந்த வேதனையில் அவளது கையை கூட தீயினால் சுட்டுக்கொண்டு, அதை போடோ எடுத்து ஹஸனுக்கு அனுப்பி, அவளுடைய கவலைகளையல்லாம் மெசேஜ் ஒன்றின் மூலம் ஹஸனிடம் கூறினாள்.ஹஸனும் அவள் மீது மிகுந்த அனுதாபப்பட்டு "அவளுக்கு கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஹஸன் நினைத்தான்.
"அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து சேர் ஒருத்தர் பேசுகின்றேன்" என்று கூறி ஹஸன் அவளுடைய பெற்றோருடன் பேசினான். "நிறைய பேர் ஏங்கி ஏங்கி பல பேருக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு இந்த கல்லூரி வாய்ப்பு; அது உங்களுடைய மகளுக்கு கிடைத்திருக்கிறது; அதுவும் 2 பாடங்களுக்கு தெரிவாகியிருக்கிறாள்; இந்த வாய்ப்பை தயவு செய்து மிஸ் பண்ண வேண்டாம்; வயதை காரணம் காட்டி உங்களுடைய மகளின் இந்த படிப்புக்கும், அவளுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்புக்கும் எதிராக தடையாக இருக்க வேண்டாம்; நடக்க இருப்பவை எல்லாம் சரியான காலத்திற்கு சரியான நேரத்திற்கு நடக்கும்; மேலும் கூறப் போனால் எமது கல்லூரிக்கு தெரிவாகியிருப்பவரில் 25 வயதுடைய பெண்களும் இருக்கின்றனர்; அவர்கள் கல்லூரியை முடித்து விட்டு செல்லும் போது அவர்களுக்கு 28 வயதாகும்; அப்போது அவர்களுக்கு நல்லொரு எதிர்காலமொன்று இல்லையா; அல்லாஹ் நாடியிருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும்; நம்பிக்கை வைத்து அனுப்புங்கள்; கல்லூரிக்கு வந்தால் நிச்சியமாக உங்களுடைய மகள் மேலும் மேலும் நல்லொழுக்கத்தையும் நல்ல விழுமியங்களையும் கற்றுக் கொள்வாள்; கல்லூரியில் நேரத்திற்கு நேரம் அனைத்தும் நடைபெறும்; வெளியாகும் போது ஆசிரியராக தான் வெளியாக்கப்படுவாள்; உங்களுடைய மகளுடைய வாழ்க்கை; நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்; இதை நான் உங்களிடம் வற்புறுத்தி கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை; என்றாலும் அனுப்பாமல் இருக்க வேண்டாம்" என்றெல்லாம் ஹஸன் அந்த மாணவியின் பெற்றோரிடத்தில் கூறி மிகவும் முயற்சி செய்து விடாப்பிடியாக இருந்த அவளின் பெற்றோரினுடைய மனதையே மாற்றினான்.
"எனக்கு இந்த கல்லூரி பற்றி ஒன்றுமே சரியாது தெரியாது; நான் பாடசாலைக்கு சென்று அதிபருக்கு உங்களுடைய நம்பரை கொடுத்து, உங்களுடன் பேச சொல்லுகிறேன்; அதிபருடம் பேச முடியுமா?" என்று அந்த மாணவியின் தந்தை ஹஸனிடம் கேட்டார். ஹஸனும் அதற்கு "சரி” என்றான். அதற்கு பிறகு அதிபர் ஹஸனுக்கு கோல் ஒன்றை எடுத்து பேச, கல்லூரிக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் பற்றியும் கல்லூரி பிணை முறிவு ஒப்பந்தம் பற்றியும் ஹஸன் அதிபரிடம் கூறினான். அத்துடன், அவளை கட்டாயம் கல்லூரிக்கு அனுப்பி வைக்குமாறும் ஹஸன் அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தான். பிறகு அந்த மாணவி, அனைத்தையும் தயார்ப்படுத்தி, நாளை கல்லூரிக்கான பதிவுத் திகதியாக இருந்த போது, எப்படியோ அவள் கடைசி கட்டத்தில் கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள். அவளே நினைத்துப் பார்த்திருக்கவில்லை, அவளுக்கு கல்லூரிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று.
ஒரு மாணவிக்கு கல்லூரி வரம் கிடைக்க ஹஸனும் முக்கிய காரணமாகினான். Education Information வட்சப் குரூப்பில் இணைந்தவர்களுக்கு ஹஸன் செய்த அனைத்து உதவிகளையும் விட, அந்த மாணவிக்கு செய்த உதவி 'ஒரு தரமான சம்பவம்' என்று சொல்லாம். அத்துடன் தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான தகவல்களை வழங்குவதினூடாக நாஸிர் ஹஸனுடைய பெயர், அனைத்து தமிழ் மொழி மூலமான தேசிய கல்வியற் கல்லூரிகளிற்கு தெரிவாகியிருக்கும் அனைவருக்கும் மத்தியில் பேசப்பட்டு தேடப்பட்டு வரும் பெயராக மாறியது.
அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை பதிவு செய்யும் நாளும் வந்தது. அந்த நேரம் தந்தைக்கும் தொழிலொன்று இல்லை. கடைப் பொருட்களை விற்றுக் கொள்ள முடியாமல், அவையனைத்தும் வீட்டில் சீரழிந்த வண்ணம் காணப்பட்டன. குடும்ப கஷ்டம், வாழ்வாதார பிரச்சினை என்பன காணப்பட, நாஸிர் ஹஸன் அதையதையுமே கணக்கெடுக்கவில்லை. பெரும் கஷ்டங்களிற்கு மத்தியில் "வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; கல்லூரிக்கு சென்று ஆசிரியராகி, தன்னுடைய இலட்சியத்தை அடைந்து, நல்லொரு நிலைமைக்கு வர வேண்டும்" என்று நாஸிர் ஹஸன் நினைத்தான். வியாபாரத்தையும் முற்றிலும் மறந்து, ஆசிரியக் கனவை நனவாக்கிக் கொள்வதற்காக நாஸிர் ஹஸன், தன்னுடைய 24 வயதில் 2023.10.13 ஆம் திகதி அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு சென்றான்.
NASIR HASAN 100% REAL LIFE STORY CHAPTER 2
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மைதானத்தின் ஓரத்தில் இருக்கும் மாமரத்தடியிலே..
அந்த அதிகாலை வேளையில் மனதிற்கு இனிமையைத் தரக்கூடியதாகவும், அமைதியை தரக்கூடியதாகவும் சில்லென்ற இளம் காற்று நாஸிர் ஹஸனை தழுவிச் சென்றது. காற்று வீசும் போது, அவை எழுப்பிய இசை இனிமையாக இருந்தது. ரம்மியமான அந்தக் காட்சி மனதிற்கு இனிமையையும் உடலிற்கு புத்துணர்வையும் தந்தது. நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் காற்றைப் போல மகனுடைய நினைவுகளையெல்லாம் எடுத்துச் சென்றாள் அவனது தாய். தன்னுடைய தாயையும் குடும்பத்தவர்களையும் பிரியும் துயரில் இதற்கு பிறகு கல்லூரியிலே வாழ்க்கை கழிவதை நினைத்து, ஹஸன் கண் கலங்கினான். தன் தாயும், பாசம் மிகுந்த பூனோனா பெரியும்மாவும் ஹஸனை அரவணைத்து, அவன் நெற்றியில் முத்தமிட்டு, பிறகு குடும்பத்தவர்கள் அனைவரும் அவனை கல்லூரியில் விட்டுச் சென்றார்கள். பல கஷ்டங்களுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் ஆரம்பித்தது நாஸிர் ஹஸனுடைய கல்லூரி வாழ்க்கை. கல்லூரியில் தன்னுடைய பெயரை பதிவு செய்வதற்காக ஹஸன் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சென்றான். "வாசலில் உள்ள பூமரங்கள் காற்றில் அசைந்தாடி ஹஸனை "வா வா" என்று அழைத்தன. ஹஸன், மண்டபத்திற்கு உள்ளே சென்று அமர்ந்தான். அவ்வேலையில் கல்லூரியில் சீனியர்ஷ்களின் தலைவர், ஹஸனிடம் வந்து, பெயரை கேட்ட போது 'நாஸிர் ஹஸன்' என்று கூறியதுடன் “உங்களுக்காக வேண்டி தான் அனைத்து சீனியர்ஷும் வைட்டிங்" என்று அவர் பதிலளித்தார். என்றாலும் ஹஸன், மன தைரியத்துடன் அமைதியாக இருந்தான். பின்னர், அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிலே நாஸிர் ஹஸன், தன்னுடைய பெயரை பதிவு செய்தான்.
நாஸிர் ஹஸன், கல்லூரியில் பதிவை மேற்கொண்டதற்கு பிறகு, கல்லூரி விடுதிக்கு சென்றான். அங்கு சென்ற முதல் நாளில் இருந்தே ஆரம்பித்தது சீனியர்ஷ்களின் பகிடிவதை. ஹஸனை நிம்மதியாக இருக்க விடவில்லை. சீனியர்ஷ் விடுதிக்கு வருவதே 'நாஸிர் ஹஸன்' என்று, அவனுடைய பெயரை சொல்லிக் கொண்டு தான். விடுதியிலிருந்து ஹஸன் வெளியே வரும் போது அவனை கண்டால், சத்தமிட்டு அவனை கூப்பிட்டு, ஒவ்வொன்றை செய்யுமாறு கூறி கஷ்டப்படுத்தினர். அவனை விடுதியில் நிம்மதியாக தூங்க கூட விடவில்லை. கல்லூரிக்கு வந்த முதல் நாளிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டான்.
தன் கோபத்தை கூட வெளியில் காட்டிக் கொள்ளாமல், தன்னை ஓர் அப்பாவி போல காட்டி அனைத்து சீனியர்ஷ் முன்னிலையிலும் கடுமையாக நடித்தான். ஹஸனுடைய நடிப்பு திறமையினை பார்த்த அனைத்து ஆசிரியப் பயிலுனர்களும் வியப்படைந்தனர். சீனியர்ஷ் எல்லோருமே நாஸிர் ஹஸனுடைய பெயரை சொல்ல அனைத்து ஆசிரியப் பயிலுனர்களுக்கும் அவனுடைய பெயரும் நன்றாக பாடமாகியது. அவர்களில் பலர் ஹஸனுடைய Education Information வட்சப் குரூப்பில் இணைந்து அவனால் பயனடைந்தவர்களாகவே காணப்பட்டனர். தலைவர் என்றே ஹஸனைக் கூப்பிட்டு, அவனுடன் மரியாதையாக பேசி பழகினார்கள்.
வெள்ளை சீருடையை அணிந்து வகுப்புக்கு செல்ல ஆயத்தமாகும் போது, பாடசாலைக்கு செல்வதற்கு ஆயத்தமாகுவது போன்ற எண்ணமே ஹஸனின் மனதில் தோன்றியது. "மீண்டும் பாடசாலை வாழ்க்கையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது போலவும் சாதாரண ஒரு பாடசாலையில் இருந்து நெசனல் பாடசாலை ஒன்றுக்கு வந்தது" போன்ற சிந்தனை ஹஸனின் மனதில் ஏற்பட்டது. கல்லூரி விடுதியையும் பயிலுனர்கள் இருப்பதையும் பார்க்கும் போது "அனைவரையும் வைத்தியசாலையிற்கு கொண்டு வந்து நிறுத்தியது" போன்ற சிந்தனையும் அவன் மனதில் தோன்றியது.
கல்லூரி வாழ்க்கை பல கட்டுப்பாடுகளுடனான வாழ்க்கையாக காணப்பட்டது. கல்லூரியின் முதல் நாளிலிருந்து வெள்ளை டீசர்ட்டையும், கருப்பு பொட்டத்தையும் அணிந்து பிளேட்டை எடுத்துக் கொண்டு சாப்பாட்டிற்கு வரிசையாக போகும் போது சிறையில் இருக்கும் கைதியினுடைய வாழ்க்கை எப்படியோ, அது போன்ற ஒரு உணர்வு ஹஸனின் மனதில் ஏற்பட்டது.
தொடர்ந்து சோற்றையும் பருப்பையுமே சாப்பிட அவனுக்கு கல்லூரி வாழ்க்கையே வெறுத்து போனது. இவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் ஒரு புறமிருக்க, சீனியர்ஷ்களின் பகிடிவதைக்கும் ஒரு முடிவு இல்லை. ஒரு முறை அவையனைத்தையும் ஹஸன், அவனுடைய தாயிடம் கூறினான். அதற்கு அவள், சீனியர்ஷ் சொல்லுவதை எல்லாம் செய்து விட்டு, அவர்கள் கல்லூரியை விட்டு போகும் வரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்குமாறு ஹஸனிடம் கேட்டுக் கொண்டாள்.
"நீ என்ன பெரிய ஆளா; வட்சப் குரூப் எல்லாம் உருவாக்கி கல்லூரி தொடர்பான தகவல்களை போடுவதற்கு; கல்லூரியின் பிணைமுறிவு ஒப்பந்தம் எப்படி நிரப்புவது என்று எல்லாம் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு; கல்லூரியை 2 வருடத்தில் முடிக்க முயற்சி செய்வதற்கு ; கல்வி அமைச்சில் இருக்கிறாயா" இவ்வாறெல்லாம் கூறி சீனியர்ஷ் ஹஸனை கிண்டல் செய்தனர். இதற்கு பிறகு, கல்லூரி தொடர்பான எந்த தகவல்களையும் நீ வழங்கக் கூடாது என்றும் அனைத்து வட்சப் குரூப்பிலுருந்தும் லீவ் ஆகுமாறும் ஹஸனை வற்புறுத்தினர்.
"ஒருவருடைய முன்னேற்றத்தை கண்டு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வயிற்றெரிச்சலினால் தான் இப்படி நடந்து கொள்கின்றார்கள் " என்று ஹஸன் நினைத்தான். அவர்கள் கூறிய எதையுமே ஹஸன் செய்யவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் ஹஸனுக்கு அமைதியாக இருக்கவும் முடியவில்லை. தனியாக நின்று ஒவ்வொருவரையும் எதிர்த்தான். ஹஸனுக்கு வந்த கோபத்திற்கு அதில் எவனுக்காவது போட்டு அடிப்பதற்கு அவன் மனம் துடித்தது. என்றாலும் தாயினுடைய வார்த்தைக்காக வேண்டியும், "நான் ஒரு ஆசிரியப் பயிலுனர்" என்பதை மனதில் வைத்து, பொறுமையாக இருந்தான். "சீனியர்ஷ் இந்த கல்லூரியை விட்டு போனதற்கு பிறகு, இந்த கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்" என்ற நம்பிக்கையில் ஹஸன் அனைத்தையும் கடந்து சென்றான். கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து ஹஸன் கவிதையொன்றை எழுதினான்.
நான்கைந்து வருடங்கள் வீட்டில் காத்திருந்து "எங்களை எப்படா? எடுப்பாங்க" என்று யோசித்து யோசித்து பல சிரமங்களுக்கு மத்தியில் வந்து சேர்ந்தோம் கல்லூரிக்கு..
பெற்றோரை பிரிந்து ஊரை விட்டு வீட்டை மறந்து, குடும்பத்தில் விலகி தொழிலை விட்டு நண்பர்களை பிரிந்து
தனக்கான மதிப்புக்குரிய ஆசிரியத் தொழிலை எதிர்ப்பார்த்து புதிய நண்பர்களின் நட்பை தேடவும் ஆசைப்பட்டு எதிர்ப்பார்த்து வந்து சேர்ந்தோம் கல்லூரிக்கு..
தன் பிள்ளை பிரிந்த கவலையுடன் பெற்றோரும் பெற்றோரை பிரிந்த கவலையுடன் நாங்களும் ஒவ்வொரு ஒவ்வொரு நினைவுகளும் ஞாபகத்திற்கு வந்து வந்து செல்ல பெரும் கவலையில் ஆரம்பமானது நம்முடைய கல்லூரியின் முதல் நாள்..
தாய் சமைத்து தரும் சுவையான வீட்டு உணவை மறந்து தந்தை கொண்டு வந்து தரும் இனிப்பான கடை சோற்றை மறந்து
கல்லூரியில் மூன்று நேரமும் ஒரு கறியுடனான சோற்றுக்குப் பழகி வயிற்றில் இறங்காத உணவுகளையெல்லாம் இறக்கி ருசிக்கு உண்ணாமல் பசிக்கு உயிர் வாழ மட்டுமே பிடிக்காத உணவுகளை யெல்லாம் உண்ண பழகி பெரும் கஷ்டத்தில் ஆரம்பமானது நம்முடைய கல்லூரி வாழ்க்கை..
நம்மை பல கட்டுப்பாடுகளுடன் சிறையில் அடைத்து போன்ற எண்ணம் அடிக்கடி வந்து போக சிறைக் கைதியாக நம்மை உணர வைத்து பல சோதனைக்கு மத்தியில் வாழப் பழகினோம் கல்லூரி வாழ்க்கையை..
நண்பர்கள் இருக்கின்றார்கள் என்ற ஒரே ஒரு சந்தோஷத்தில் அனைத்து கவலையும் மறக்க போக போக எல்லாம் பழகிரும் என்ற எண்ணத்தில் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக கழிக்க ஆரம்பித்தோம். நமது கல்லூரி வாழ்க்கையை..
நேர காலத்துடன் எழும்ப பழகி சோம்பலை அடியோடு அழித்து எந்த உணவையும் உணவாக மதித்து ஏழைகளின் கஷ்டத்தையும் உணர வைத்து இருக்கின்ற உணவை உண்டு பழகினோம் கல்லூரி வாழ்க்கையில்..
மூன்று வருடங்களிற்கு பிறகு நமக்கு கிடைக்கவிருக்கும் மதிப்புள்ள ஆசிரியத் தொழிலுக்காக வேண்டி எந்த சவால்களையும் எதிர்த்து வெற்றிக் கொள்வேன் என்ற மன தைரியத்தில் கழித்து விட்டு செல்வோம். இந்த கல்லூரி வாழ்க்கையை.
கல்லூரி வாழ்க்கையை பற்றி மனதில் தோன்றிய அனைத்து எண்ணங்களையும் அனுபவங்களையும் வைத்து சிறப்பாக எழுதிய அக்கவிதையை ஹஸன், அவனுடைய அனைத்து வட்சப் குரூப்ஸ்களிலும் போட அக் கவிதையும் பல பேர்க்கு மத்தியில் சிறப்புற்றன.
நாஸிர் ஹஸனிடம் பல்வேறுபட்ட திறமைகள் காணப்பட்ட போதிலும், கல்லூரியில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சிகளிற்கும் அவன் முன் செல்லவில்லை. "கல்லூரியில் சாதாரண ஒரு ஆசிரியப்பயிலுனராகவே இருந்து, வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் இருந்து விட்டு செல்ல வேண்டும்" என்று ஹஸன் நினைத்தான். ஆனால் ஆசிரியப்பயிலுனர்கள் அவனை விடவில்லை. தேசிய கல்வியற் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டம் ஒன்றான 'Green Leader Programme' என்ற பசுமை தலைவர் நிகழ்ச்சித் திட்டத்திற்கு தலைவர் தெரிவு செய்யப்பட்ட போது, அனைத்து ஆசிரியப்பயிலுனர்களும் நாஸிர் ஹஸனுடைய பெயரை கூற, அனைவருடைய பலத்த கைத்தட்டல்களுடன் அதற்கு தலைவராக அவன் தெரிவு செய்யப்பட்டான். பொறுப்பான விரைவுரையாளரும் அனைவருக்கும் முன்னிலையில் ஹஸனை கதாநாயகனாக சித்தரித்து வரவேற்றார்.
பெண் பயிலுனர் ஒருவரை செயலாளராக தெரிவு செய்யுமாறு விரிவுரையாளர் ஹஸனிடம் கேட்ட போது "எனக்கு யாரையுமே தெரியாது" என்று கூறி ஹஸன் யாரையும் தெரிவு செய்யவில்லை. பிறகு பெண் பயிலுனர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவரை செயலாளராக தெரிவு செய்தனர். அந்த சமயம் ஹஸனுடைய தெல்தோட்டை ஊர் பெண் பயிலுனர் ஒருவர் "நாஸிர் ஹஸனுக்கு, என்னை நன்றாக தெரியும், என்னை தெரிவு செய்து இருக்கலாம்" என்று நினைத்து சற்று கவலைப்பட்டாள். அவளுக்கும் ஏதாவது ஒரு வாய்ப்பொன்றை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஹஸன் நினைத்தான். அனைத்து ஆசிரியப் பயிலுனர்களையும் ஐம்பது பேர் கொண்ட குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒவ்வொரு தலைவர்களை தெரிவு செய்து, நில அலங்கரிப்புக்காக நிலங்களையும் பிரித்துக் கொடுத்து Green Project என்ற பெயரில் திட்டத்தை ஹஸன் கல்லூரியில் முன்னெடுத்தான்.
2023 ஆம் ஆண்டு இறுதியில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. மைதானத்தில் அதற்கான பயிற்சிகளை நாஸிர் ஹஸன் மேற்கொண்ட போது அவனுக்கான பெருமளவு ஆதரவுகள் ஆசிரியப் பயிலுனர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன. நாஸிர்ஹஸனுடைய Education Information சேவையினாலும், அவன் எழுதிய வாழ்க்கை கதையை வைத்தும் அவன் கல்லூரிக்கு செல்வதற்கு முன்பே தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருந்தான். அதனால் கல்லூரியில் "நாஸிர் ஹஸன்" என்று அவனுடைய பெயர் எங்கு எங்கு ஒலி எழுப்பப்படுகிறதோ அங்கங்கே அவனுக்கான கைதட்டல்களும் பலமாக இருந்தன.
இல்ல விளையாட்டு போட்டியில் தன்னுடைய திறமைகளை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்று ஹஸன் நினைத்தான். "இல்ல விளையாட்டுப் போட்டிகளில் சீனியர்ஷுடன் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்றி, நான் முதலாவதாக வந்து வெற்றி பெற்று, அவர்களை பழித்தீர்க்க வேண்டும்" என்ற வெறி ஹஸனின் மனதில் மேலோங்கி காணப்பட்டது. “அது தான் அவர்களுக்கு நான் கொடுக்கும் சிறப்பான பதிலடி, என்னுடைய ஒட்டுமொத்த கோபத்தையும் நான், என்னுடைய விளையாட்டில் காட்டுகிறேன்" என்று ஹஸன் நினைத்தான்.
இல்ல விளையாட்டுப் போட்டியில் ஹஸனுடன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய அனைவருமே சீனியர்ஷ். எதிர்ப்பார்த்தது போன்றே அவர்கள் அனைவரையும் தாண்டி ஹஸன் ஓட்டப்போட்டியில் முதலாவதாக வந்து வெற்றியடைந்தான். அதுமட்டுமல்லாமல் ஹஸன் பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் அனைவருக்கும் ஒரு பயத்தையே அவன் உண்டு பண்ணினான். மேலும் இல்ல விளையாட்டுப் போட்டியில் அவனுடைய இல்லம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஹஸன் அவனுடைய முழு முயற்சியையும் வழங்கினான். இல்ல விளையாட்டுப் போட்டி முழுமையாக முடிவடைந்ததவுடன், பெண் சீனியர்ஷ் ஒருவரினால் இல்லத்தில் வைத்து ஹஸனுடைய அனைத்து முயற்சிகளுக்கும் தனியாக பெயர் குறிப்பிடப்பட்டு அவன் பாராட்டப்பட்டான்.
இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளே, சீனியர்ஷ் உடைய கல்லூரியின் கடைசி நாளாக காணப்பட்டது. என்னதான் ஹஸனின் மனதில் அவர்கள் மீதான கோபங்கள் வெறுப்புக்கள் இருந்தாலும், அவர்கள் கல்லூரியை விட்டு விடைபெறும் தருணம் ஹஸனின் மனதிற்கு சற்று கவலையாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஹஸனிடம் வந்து அழுது மன்னிப்பு கேட்டார்கள். ஹஸனும் அவர்களை மன்னித்து, “நானும் நிறைய இடங்களில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இல்லாமல் நடந்து கொண்டேன்; என்னையும் மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று அவர்களிடத்தில் கூறினான். அவர்களும் ஹஸனை மன்னிக்க, கடைசியில் சீனியர்ஷ் எல்லோரும் கண்ணீருடன் கல்லூரியை விட்டு விடைப் பெற்றுச் சென்றனர்.
கல்லூரியில் அனைத்து ஆசிரியப் பயிலுனர்களுக்கும் நாஸிர் ஹஸன் தான் தலைவராக வருவான்" என்று பலர் எதிர்ப்பார்த்திருந்தனர். அனைவரும் "தலைவர் தலைவர்" என்றே ஹஸனை கூப்பிட்டு அவனுக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில், ஆசிரியப் பயிலுனர்களில் தலைவர் ஒருவரை தெரிவு செய்யும் போது, இஸ்லாம் பாடத்துறையில் மௌலவி ஆசிரியப் பயிலுனர் ஒருவரை தலைவராக தெரிவு செய்வதே வழக்கம். "அப்படி தெரிவு செய்யாமல் ஒரு வாக்கெடுப்பு ஒன்று இடம் பெற்று தெரிவு செய்தால், நிச்சியமாக நான் வெற்றி பெற்று தலைவராக தெரிவாகுவேன்; அதிகமானோரின் வாக்குகள், நிச்சியமாக எனக்கு கிடைக்கும்" என்று ஹஸன் ஆசிரியப் பயிலுனர்கள் சிலரிடம் கூறினான். அதற்கு அவர்கள் “அப்படி வாக்கெடுப்பு வைத்து தெரிவு செய்ய மாட்டார்களே" என்று கூறினார்கள்.
"என்னுடைய பாடசாலை வாழ்க்கையில் உயர்தர கல்வி கற்க சென்ற போது பாடசாலையில் சிறுவர் பாராளுமன்ற தேர்தல் ஒன்று இடம் பெற்று அதில் வெற்றி பெற்றது போல கல்லூரியிலும் தலைவருக்கான ஒரு வாக்கெடுப்பு வைத்து அதில் நான் நின்று வெற்றி பெற்றால் கெத்தாக இருக்கும்" என்று ஹஸன் நினைத்தான். சில நாட்களிற்கு பிறகு, ஹஸன் எதிர்ப்பார்த்தது போன்று வாக்கெடுப்பு மூலமே தலைவர் தெரிவு இடம் பெற்றது. அது கல்லூரியில் முதல் தடவையான ஜனநாயக வாக்கெடுப்பாக காணப்பட்டது. தலைவர் தெரிவிற்கு, மௌலவி ஒருவர், அவருடைய பெயரை கொடுத்திருந்தார். அவருக்கு போட்டியாளராக நாஸிர் ஹஸன் தன்னுடைய பெயரை கொடுத்திருப்பான் என்று பலர் எதிர்ப்பார்த்தனர்.
ஹஸனுடைய வகுப்புக்கு பொறுப்பான இஸ்லாம் பாட விரிவுரையாளர், யாராவது ஒருவர் மாத்திரம், பெயரை கொடுக்குமாறும் ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுக்குமாறும் கூறியதனால், ஹஸன் மௌலவிக்கு விட்டுக் கொடுப்பதாக கூறி, அவன் பெயரை கொடுக்கவில்லை. எனவே, மௌலவி போட்டியாளரின்றி ஆசிரியப்பயிலுனர்களுக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டார். "ஏன் நீங்கள் பெயரை கொடுக்கவில்லை; நீங்கள் பெயரை கொடுத்திருந்தால் நிச்சியமாக நிறைய வாக்குகளை பெற்று வென்று தலைவராகியிருப்பீர்கள்; நாங்கள் மிகவும் எதிர்ப்பார்த்தோம்" என்று பலர் ஹஸனிடம் கூறினார்கள். அதற்கு ஹஸன், "மௌவிக்கு விட்டுக் கொடுத்தேன்" என்று கூறினான். "மௌலவிமார்கள் தான் சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்கள், அவர்களுக்கு தான் தலைமைத்துவ முன்னுரிமையை கொடுக்க வேண்டும்" என்று ஹஸன் நினைத்தான்.
கல்லூரியில் ஒரு பெண், ஹஸனை அவளுடைய சகோதரனாக நினைத்து, அவன் மீது மிகுந்த பாசம் வைத்தாள். அவள் ஹஸனுடைய 'Education Information' வட்சப் குரூப்பில் இணைந்திருந்தமையினால், கல்லூரிக்கு வருவதற்கு முன்பே ஹஸனுக்கும் அவளை நன்றாக தெரியும். அவளுக்கு ஹஸன் நிறைய உதவிகளை செய்திருந்தான். அவள் கல்லூரிக்கு வந்ததிற்கு பிறகு அவளது கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையவில்லை. அது மிகவும் கஷ்டமானதாகவே அமைய "எனக்கு இந்த கல்லூரியில் யாரையுமே தெரியாது; உங்களை மட்டும் தான் நன்றாக தெரியும்; உங்களை நான் என்னுடைய உடன் பிறந்த சகோதரனாகவே நினைத்திருக்கிறேன், நீங்கள் தான் என்னுடைய இந்த கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றி தர வேண்டும்" என்றெல்லாம் அவள் ஹஸனிடம் கூறினாள். அதற்கு ஹஸன் "இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரமே எல்லாமே சரியாகும் "என்று அவளிடம் கூறினான். அவள் கூறியதில் "உடன் பிறந்த சகோதரனாகவே நினைத்திருக்கிறேன்" என்ற வசனம் ஹஸன் மனதிற்கு சற்று சந்தோஷத்தை உண்டு பண்ணியது. "வெறும் பேச்சுக்காக இல்லை; உண்மையாகவே மனப்பூர்வமாக தான் அவள் அப்படி சொன்னாள்" என்பதை ஹஸன் உணர்ந்தான்.
"இதுவரைக்கும் யாருமே என்னிடம் அவ்வாறு கூறியதில்லை; சொந்த பந்தங்களில் கூட எத்தனையோ சகோதரிகள் இருந்தும், அந்தளவுக்கு யாருமே என் மீது பாசம் வைத்ததில்லை; ஆனால் முதல் தடவையாக எந்தவொரு சொந்தமுமே இல்லாத, உடன் பிறவா சகோதரியான நீங்கள் என் மீது அவ்வளவு பாசம் வைத்திருக்கின்றீர்கள்; உங்களுக்கு நல்லொரு சகோதரான நான் எப்போதும் இருப்பேன்; உங்களுடைய கல்லூரி வாழ்க்கையையும் மிக விரைவில் மகிழ்ச்சியானதாக மாற்றுவேன் " என்றெல்லாம் ஹஸன் அவளிடம் கூறினாள்.
சகோதரி மீது ஹஸனும் மிகுந்த பாசம் வைத்து நல்ல முறையில் நடந்து கொண்டான். மேலும் ஹஸன், அவளுடை கல்லூரி வாழ்க்கையை கூட மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றினான். அவளது தாயிடத்திலும் அவள், ஹஸனைப் பற்றி கூறினாள். அவளது தாய்க்கும் ஹஸன் மீது நல்லொரு அபிப்பிராயம் உண்டாகியது. "கல்லூரியில் எனக்கு நல்லொரு சகோதரி ஒன்று கிடைத்திருக்கின்றது" என்று அவளைப் பற்றி ஹஸனும், அவனுடைய தாயிடத்திலும் கூறினான். கல்லூரி வாழ்க்கையில் ஹஸனுக்கு கிடைத்த முதல் வரமாக அந்த சகோதரியின் பாசம் அமைந்தது. இருவருக்குமிடையில் நல்லதொரு சகோதரத்துவம் பேணப்பட்டது.
நாஸிர் ஹஸனுடைய கல்லூரி வாழ்க்கையும் எதிர்பாராத அளவுக்கு அவனுக்கு மிகவும் பிடித்ததாக மாறியது. இப்படி இருக்க, இருந்து நின்று அவன் மனதிற்கு மிகவும் கஷ்டமான நாட்களும் வந்து போனது. கல்லூரியில் எத்தனையோ பேர் அவனுக்கு ஆதரவாக இருந்தாலும், அவனுடைய கவலைகளை பகிரவும், கஷ்டங்களை கூறவும் உண்மையான நம்பிக்கையான அவனுக்கென்றே ஒரு சிறந்த நண்பன் அல்லது நெருங்கிய நண்பன் அமையவில்லை. தனிமை உணர்வு இருந்து நின்று வந்து போய் அவனை அழ வைத்தது.
கல்லூரியில் எல்லோருடனும் ஹஸன் நல்ல விதமாக பேசி பழகினான். அனைவருடனும் நல்ல விதமாக நடந்து கொண்டான். என்றாலும் அவனுக்கு யார் மீதும் பெரிதாக நம்பிக்கை காணப்படவில்லை. அதனால் அவன் யாருடனுடன் மிகவும் நெருக்கமாகவுமில்லை, யாரையும் நண்பர்களாக்கிக் கொள்ளவுமில்லை. அதற்கு அவன் மனநிலையே முக்கிய காரணமாகியது. அவன் "தனிமையே சிறந்த துனை" என்று தனிமையையே தேடிச் சென்றான்.
அவனுடைய தெல்தோட்டை ஊரிலும் கூட அவனுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு ஹஸன், அவனும் கடையும் என்று இருந்து, வியாபாரத்திலே அதிகம் ஆர்வம் காட்ட, நண்பர்களை தேடிக் கொள்வதில் எந்தவொரு ஆர்வமும் அவன் காட்டவில்லை. "இவ்வுலகில் நண்பர்கள் யாருமே இல்லாத ஒரே ஆள் நாஸிர் ஹஸன் தான்" என்று அவனுடைய தாய், சொந்தக்காரர்கள் அனைவரும் எப்போதும் கூறுவர். அது மட்டுமல்லாமல் அவனுக்கு யார் மீதும் காதல், ஈர்ப்பு அப்படி ஒன்றுமில்லை. தனிமையில் இருந்தாலும் சந்தோஷமாகவே அவன் காணப்பட்டதனால் தனிமைக்கே ஹஸன் பழக்கப்பட்டான். 'நண்பர்கள் யாருமே இல்லை' என்ற எந்தவொரு கவலையும் அவன் மனதில் காணப்படவில்லை. ஆனால் கல்லூரிக்கு சென்றதிலிருந்து தான் அந்த கவலை வந்து, அவனை மிகுந்த கஷ்டத்திற்குள்ளாக்கியது.
நாஸிர் ஹஸனுடைய, கடந்த கால வாழ்க்கை கதையை, முழுமையாக வாசித்த வகுப்புத் தோழி ஒருத்தி, ஹஸனுடைய நல்ல தோழியாகவும், ரசிகையாகவும் மாறினாள். பெண்களில் யாரிடமும், பெரிதாக எந்தவொரு நட்பையும் மேற்கொள்ள ஆர்வம் காட்டாத ஹஸன், வகுப்பில் முன்வரிசையில் இருந்த, புன்முறுவல் பூத்த தோழியுடன் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், பேசி பழகினான். அவள், ஹஸன் மீது வைத்த மிகுந்த நம்பிக்கையே, அவளுடன் ஹஸன் பேச, பழக முக்கிய காரணமாக அமைந்தது."சிறந்த நண்பன் என்று எனக்கு யாரும் அமையவில்லை, தனிமை" என்றெல்லாம் ஹஸன் கூற, "அப்படியென்றால், நான் உங்களுடைய தோழி இல்லையா" என்று அவனிடம் கேட்டு, நல்லொரு தோழியாக அவள், ஹஸனுடைய மனதில் இடம் பிடித்தாள். கல்லூரி வாழ்க்கையில் நல்லொரு தோழியாக அவளை, ஹஸன் ஏற்றுக் கொண்டான்.
"கல்லூரியில் ஆண்களில், உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை மாத்திரமே, என்னுடைய தொலைபேசியில், Save செய்து, வைத்திருக்கிறேன்" என்று, அவள், ஹஸனிடம் கூறினாள். ஹஸன், ஒரு நாள் வகுப்புக்கு வராவிட்டாலும், "ஏன் வரவில்லை" என்று ஹஸனிடம் கேட்பாள், ஏதோ ஒரு கவலையில், ஹஸன், வகுப்பில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்த போதெல்லாம், "ஏன் என்னுடன் கூட பேசுவதில்லை" என்று மெசேஜில் ஹஸனிடம் கேட்பாள். ஹஸன், அவனுடைய மனதிலுள்ள கவலைகள், கஷ்டங்கள் அனைத்தையும் அவளிடம் கூற, ஹஸனுக்கு மிகுந்த ஆறுதலாக அவள் இருந்தாள். ஹஸன், "என் அருமை தோழியே" என்று, மெசேஜில் அவளை விளிக்க, "சொல்லுங்கள் என் அருமைத் தோழனே" என்று அவள் கூறினாள். அவள் ஹஸனுக்கு அனுப்பக் கூடிய மெசேஜ்களுக்கு, ஹஸன், ஸ்மைல் இமோஜியை தான் ரிப்ளேயாக அனுப்புவான். அதனால், அவளுக்கு, யார் ஸ்மைல் இமோஜியை அனுப்பினாலும், அவளுக்கு, ஹஸன் தான் ஞாபகம் வருவதாக ஹஸனிடம் கூறினாள். இப்படியெல்லாம் அவள், ஹஸன் மீது வைத்திருந்த நட்பு, சிறப்பாக காணப்பட்டது.
அவள் "உதவி" என்று ஹஸனிடம், எதைக் கேட்டாலும், அவன் "முடியாது" என்று கூறியதில்லை. அவனால் முடியுமான அனைத்து உதவிகளையும் அவளுக்கு செய்தான். வெள்ளிக்கிழமை நாட்களில் வகுப்பு முடியும் நேரம் அவள் ஹஸனிடம் வந்து, "எனக்கு ஒரு உதவி, முடியாது என்று மட்டும் கூறி விட வேண்டாம்; ப்ளீஸ் எனக்காக இந்த உதவியை கட்டாயம் செய்ய வேண்டும்" என்று கேட்பாள். "என்ன உதவி கேட்க போகிறாளோ?" என்ற யோசனை அவனுக்கு வர, "சரி சொல்லுங்களே, செய்கிறேன்" என்று ஹஸன் அவளிடம் கூறினாள். அதற்கு அவள் "நாளை சனிக்கிழமை காலை Green Project போட வேண்டாம், தூங்க வேண்டும்" என்று ஹஸனிடம் கூறினாள். ஹஸனும் அவளுக்காக வேண்டி அதன் படி செயற்பட்டான். இருவருக்குமிடையிலான நல்லொரு நட்பு பேணப்பட்டது. "இந்த நட்பு எப்போதும் இருக்க வேண்டும்; காதல் ஒன்றினால் உடைந்து விடக் கூடாது" என்று நினைத்து ஹஸன் அவளுடன் மிகவும் தெளிவாக நடந்து கொண்டான்.
மேலும் அவள் தன்னைப் புரிந்து கொள்வதற்காக வேண்டி ஹஸன், சில உண்மைகளை அவளிடம் கூறினாள். "பெண்கள் விடயத்தில் எனக்கு அவமானப்பட விருப்பமில்லை, அதனால் தான் பெண்கள் யாருடனும் பெரிதாக பேசுவதில்லை; எந்த பெண்ணிடமும் நம்பர் கேட்டு திரிந்ததில்லை; இதுவரை எந்த பெண்ணிடமும் நான் I Love you என்று கூட சொல்லியதில்லை; ஆனால் என் மனதிற்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தது. 3 வருடமாக மனதால் விரும்பினேன். அவளிடம் அந்த விடயத்தை கூட சொல்லும் வாய்ப்பு அமையவில்லை; அவ்விடயத்தை நான் என்னுடைய வாழ்க்கை கதையில் எழுதி, அவளுக்கு கொடுத்து தான் தெரியப்படுத்தினேன்; ஆனால் கடைசி மட்டும் அவள் என்னை புரிந்து கொள்ளவே இல்லை; அவளுக்கு என்னை பிடிக்கவுமில்லை, நிறைய முறை அவமானப்பட்டது தான் மிச்சம்" என்ற உண்மையான விடயத்தை ஹஸன் கவலைப்பட்டு, அவளிடம் கூறினான்.
அவளும் ஹஸனின் மனதை நன்றாக புரிந்து கொண்டு, "உங்களை போன்ற ஒருத்தரை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை; எந்தொரு ஆணும் இவ்வாறு இல்லை; நீங்கள் மிகவும் நல்லம்; உங்களை எனக்கு அவ்வளவோ நம்பிக்கை, அதனால் தான் ஆண்களில் உங்களுடன் மட்டும் நான் பேசுகிறேன், உங்களுக்கு நல்லொரு எதிர்காலம் ஒன்று இருக்கின்றது' என்றெல்லாம் அவள் ஹஸனிடம் கூறினாள். அதற்கு ஹஸன், “இதே தான் நிறைய பேர் சொல்லியிருக்கிறாங்க; எல்லா விடயத்திலும் எல்லா செயற்பாடுகளிலும் I'm Different" என்று ஹஸன் அவளிடம் கூறினான். அவள் எப்போதும் முன்வரிசையில் இருந்து, ஹஸனுடன் மிகவும் நன்றாக சிரித்து பேசினாள். தமிழ் பாடத்தில், கதைகளை தனக்கு விளங்கப்படுத்துமாறு, ஹஸன், அவளிடம் கூற, அவள் மிகவும் நன்றாக ஹஸனுக்கு விளங்கப்படுத்தினாள்.
"கடந்த கால வாழ்க்கையில், நான் பட்ட அவமானம், தோல்விகள், கஷ்டங்கள் இவற்றை எல்லாம் தாண்டி, அதற்கு பிறகு நான் அடைகின்ற ஒவ்வொரு ஒவ்வொரு வெற்றிகளும், என்னுடைய முன்னேற்றமும் புதியதொரு கதையாக வர வேண்டும்" என்று ஹஸன் நினைத்தான். ஹஸன், தோழியிடம், "நான் என்னுடைய கடந்த கால வாழ்க்கை கதையை, "ஹஸன் கல்லூரிக்கு சென்றான்" என்று கூறி, எழுதி முடித்தேன், கல்லூரிக்கு சென்றதிலிருந்து வாழ்க்கையில் பெரியதொரு வெற்றியை பெரும் வரையில் கல்லூரி வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து, 'Nasir Hasan 100% Real Life Story Chapter 2' என்று கதையை எழுதினால், எவ்வாறு இருக்கும்; எழுதவா?" என்று கேட்டான். அதற்கு அவள், "எழுதுங்கள், மிகவும் நன்றாக வரும்" என்று ஹஸனிடம் கூறினாள். "Chapter 1 இல், காதல், தோல்வி, அவமானம், கஷ்டம் எல்லாம் வந்திருக்கிறது, "Chapter 2 இல், அது எதுவுமே வராமல், நீங்கள் அடைகின்ற ஒவ்வொரு வெற்றிகளும் உங்களுடைய முன்னேற்றங்களும் மாத்திரமே கதையில் வர வேண்டும்" என்று அவள் ஹஸனிடம் கூறினான். “வெற்றி, என்றால் நாம் போட்டிகளில் பங்குபற்றி அடைகின்ற வெற்றி மட்டுமல்ல, நமக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தைரியமாக எதிர் கொள்வதும் வெற்றி தான்" என்று ஹஸனின் மனம் கூறியது.
கல்லூரி வாழ்க்கையின் உண்மையான கதையினை ஹஸன், ஒவ்வொரு காட்சியாக எழுதி, தோழியிடம் காட்ட, அவள் மேலும் மேலும் அவனை ஊக்கப்படுத்தினாள். கதைக்காக வேண்டியே ஹஸன், வாழ்வில் படிப்படியாக முன்னேறி, பல வெற்றிகளை பெற்றான். அவ்வனைத்தையும் கதையில் சேர்த்தான். அவன் எழுதிய கதையே அவனுடைய அனைத்து வெற்றிகளுக்கும் முக்கிய காரணமாகின. "அக் கதையை எழுத, முக்கிய காரணமாகத் திகழ்ந்த தோழி, தன்னுடைய வாழ்க்கை கதையில் கட்டாயம் வரவே வேண்டும்" என்று நினைத்த ஹஸன், இருவருக்கிடையிலான அன்னியோன்னியமான நட்புறவையும் தன்னுடைய வாழ்க்கை கதையில் சேர்த்தான்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் School Profile (பாடசாலை புடைக்காட்சி) தொடர்பான விபரங்களை சேகரிக்க அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியிலிருந்து நாஸிர் ஹஸன் காரைதீவு ஆர்.கே.எம் கேர்ல்ஸ் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தான். வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு பாடசாலைக்கு ஆசிரியராக சென்று மாணவர்களையும் பாடசாலையில் நடைபெறும் அனைத்து நாளாந்த செயற்பாடுகளையும் அவதானித்தான். அவற்றையெல்லாம் அவதானிக்கும் போது பாடசாலை வாழ்க்கையே ஹஸன் கண் முன் வந்து சென்றது. மாணவர்கள் போட்ட கூத்துக்களையெல்லாம் ஹஸன் பார்த்த போது "நாமும் மாணவர்களாக இருந்த காலத்தில் இவ்வாறு தான் இருந்தோம்" என்பது அவன் நினைவிற்கு வர அவன் கண்களும் சற்று கலங்கியது.
பாடசாலையின் முழு வரலாற்றையும் தொகுத்து எடுத்து அதனை நூலூறுப் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆசிரியப்பயிலுனர்களுக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. ஹஸனுக்கு வழங்கப்பட்டிருந்த, பாடசாலையின் நாளாந்த செயற்பாடுகளை அவதானித்து தகவல்களை சேகரித்தல் பொறுப்பை அவன் சிறப்பாக செய்தான். மூன்று நாட்கள் அப்பாடசாலைக்கு சென்று அனைத்தையும் சேகரித்து புடைக்காட்சி நிகழ்விற்கு தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியப் பயிலுனரிடம் ஹஸன் ஒப்படைத்தான். பாடசாலைக்கு சென்று ஒவ்வொரு மாணவர்களினதும் மனநிலையையும் செயற்பாடுகளையும் இனங்கண்டு கொண்டதில் ஒரு ஆசிரியராக நாஸிர் ஹஸன் சிறந்ததொரு அனுபவத்தைப் பெற்றுக் கொண்டான்.
செய்த கடையையும் கொடுத்து விட்டு ஹஸன் கல்லூரிக்கு சென்றதற்கு பிறகு அவனது குடும்பத்திற்கு பாரிய பொருளாதார கஷ்டம் ஏற்பட்டது. கல்லூரியில் அவனது செலவுகளுக்கும் கூட கையில் பணமில்லாமல் கஷ்டப்பட்டான். அதையொன்றுயுமே வெளியில் காட்டிக் கொள்ளாமல் "இந்த கஷ்டம் எல்லாம் என்றும் நிரந்தரமில்லை” என்று மன உறுதியுடன் அனைத்தையும் கடந்து சென்றான்.
கல்லூரி விடுமுறை வழங்கப்பட்டு வீட்டிற்கு வந்த போது குடும்ப கஷ்டத்தைப் பார்த்து கவலைப்பட்டான். அடுப்பங்கரையில் சமைக்க விற்கில்லாததனால் இன்று சமைப்பதில்லை என்று தாய் கூற அவன் விறகு தேடி தோட்டத்திற்கு சென்றான். தேடிக் கொண்டு வந்த விறகு கூட ஒழுங்காக பற்றவில்லை. ஊதி ஊதி விறகைப் பற்ற வைத்து மிகவும் கஷ்டப்பட்டு தாய் உணவு சமைத்தாள். பசியும் பட்டினியுடன் நீண்ட நேரமாக காத்திருந்து உணவைப் பெற்று உட்கொள்ள, தாயின் கைப்பக்குவம் உணவின் சுவையினை உணர்த்தியது.
தாய் மிகவும் கஷ்டப்பட்டு தன் இரு கைகளாலும் துணி துவைத்தாள். அவள் ஆசைப்படுபவைகளையெல்லாம் வாங்கி உண்ண கூட, அவள் கையில் பணமில்லை. "உங்கள் தந்தையை திருமண முடித்து இத்தனை வருடங்களாகியும், அவர் லட்சக்கணக்கு கோடிக்கணக்கு சம்பாரித்திருந்தும், குடும்பத்திற்காக தன் இரு பிள்ளைகளுக்காக வேண்டியாவது வீடுவாசல், நகை நட்டு என்று எதையுமே செய்து வைக்கவில்லை" என்று தாய் ஹஸனிடம் கூறி புளம்பினாள். செய்த கௌரவமான, மதிப்புக்குரிய அனைத்து தொழில்களையெல்லாம் விட்டு, நாளொன்றுக்கு சிறிய சம்பளத்திற்கு தந்தை கடையொன்றிற்கு வேலைக்கு செல்வதை நினைத்து ஹஸன் கவலைப்பட்டான். மாதா மாதம் வீட்டு வாடகை கட்டும் போது, அவருடைய சம்பளம் சரியாக சாப்பாட்டுக்கே போதாது, என்றாலும் தாய் அனைத்தையும் சமாளித்தாள். "கஷ்டங்கள் அனைத்தையும் கடந்து, தனது இரு பிள்ளைகளும் நல்லொரு நிலைமைக்கு சென்று, நன்றாக வாழ்வதைப் பார்ப்பதே" தாயின் பெரும் கனவாக காணப்பட்டது.
“இன்ஷா அல்லாஹ் நான் நல்லொரு நிலைமைக்கு வந்ததற்கு பிறகு அனைத்தும் சரியாகும், என் தாயையும் குடும்பத்தையும் நான் நன்றாக பார்ப்பேன், இன்னும் சில காலங்கள் தான் இந்த கஷ்டங்கள் எல்லாமே” என்று ஹஸன் மன தைரியத்துடன் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதையொன்றையுமே கணக்கெடுக்காமல் அவனுடைய இலட்சியத்தை நோக்கி பயணித்தான். "ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், அவனுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து, அடைந்து கொள்ளுகின்ற பெரியதொரு வெற்றியை நோக்கி, அவனுடைய வாழ்க்கை கதை நகர்த்தப்பட்டது.
நாஸிர் ஹஸனுடைய கல்லூரி வாழ்க்கையில் 1st Block Teaching குரிய நாளும் நெருங்கியது. "அருகில் எங்கயாவது பாடசாலை ஒன்று கிடைத்தால் நல்லம்" என்று ஹஸன் நினைத்தான். எதிர்ப்பார்த்தது போலவே அட்டாளைச்சேனையிலே ஒரு பாடசாலை கிடைத்தது. அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலத்திற்கு ஹஸன், முதலாவதாக Unit Collection இற்கு சென்றான். பாடத்தை கற்பித்து கொடுப்பதற்காக தரம் 6,8,10 ஆம் வகுப்புக்களை கேட்டு, பாடநேர அட்டவனையையும் ஹஸன் பெற்றுக் கொண்டான். அதற்கு பிறகு கற்பித்து கொடுப்பதற்கு ஏற்ற வகையில் Lesson மற்றும் Scheme ஐ எழுதினான். ஹஸனுடைய 1st Block Teaching இற்கு மேற்பார்வை விரையாளராக வகுப்புக்கு பொறுப்பான விரிவுரையாளரே நியமிக்கப்பட்டிருந்தார். அதனால் எந்தவொரு தயக்கமும் ஹஸன் மனதில் காணப்படவில்லை. ஆசிரியப்பயிலுனர்கள் அனைவரும் விடிய விடிய கண் விளித்து, Lesson மற்றும் Scheme எழுதுவதிலும் Teaching Aids தயாரிப்பதிலும் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆனால் ஹஸன் அப்படியெல்லாம் பெரிதாக கஷ்டப்படாமல், இதைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சுமுகமாக எழுதி முடித்தான்.
இரண்டு வார Block Teaching க்கான முதல் நாள் வந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக ஹஸன் ஆசிரியராக பாடத்தை கற்பித்து கொடுக்க, அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலத்திற்கு சென்றான். முதல் நாள் காலை கூட்டத்திலே அதிபர், புதிதாக வந்தவர்களை மேடைக்கு அழைத்து, தங்களை அறிமுகப்படுத்துமாறு கூறினார். நாஸிர் ஹஸனும் அவனை அறிமுகப்படுத்த அவனுடைய பெயரும் மாணவர்களுக்கு நன்றாக பாடமாகியது. முதலாவதாக தரம் 6 ஆம் வகுப்புக்கு பாடத்தை கற்பிக்கச் சென்றான். முதல் நாளிலே தரம் 6 வகுப்பு மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஹஸன், பிரம்பை கையில் எடுத்து அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். அதற்கு பிறகு தான் அவனால் பாடத்தை கற்பித்து கொடுக்க முடிந்தது.
தரம் 8 மற்றும் தரம் 10 வகுப்பு மாணவர்கள் பெரிதாக எந்தவொரு குழப்படியும் இல்லை என்பதினால் ஹஸன் எதிர்ப்பார்த்தது போன்றே அந்த வகுப்புக்களுக்கு மிகவும் நன்றாக பாடத்தை கற்பித்தான். ஆசிரியத் தொழிலே நாஸிர் ஹஸனுடைய இலட்சியமாக, பல நாள் கனவாக காணப்பட்டதனால் அந்த தருணம் அவன் மனதில் அனைத்து வகுப்புக்கும் சென்று பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணியது. வகுப்புகளில் பாடமெதுவுமில்லாமல் ஹஸன் ஓய்வில் இருக்கும் சமயம், தரம் 11 வகுப்புக்கு சென்றான். தரம் 10 வகுப்பிற்கு கற்பித்துக் கொடுத்த, 'நற்பண்புகள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்' என்ற பாடமே, தரம் 11 வகுப்புக்கும் 2 ஆம் தவணைக்கான முதல் Unit ஆக காணப்பட்டது. அதனால் ஹஸன் தரம் 10 வகுப்புக்கு ஆயத்தப்படுத்தியதை கொண்டு தரம் 11 வகுப்புக்கும் இஸ்லாம் பாடத்தை சிறந்த முறையில் கற்றுக் கொடுத்தான்.
உயர்தர வகுப்புக்கும் பாடங்களை கற்பித்து கொடுக்க வேண்டும் ஆசையும் அவன் மனதில் ஏற்பட்டது. உயர்தர மாணவன் ஒருவனை அழைத்து, "வகுப்பில் பாடமெதுவதும் நடைபெறாமல் இருக்கும் போது என்னிடம் வந்து சொல்லுமாறும், இஸ்லாம் பாடத்தை படிப்போம்" என்று கூறினான். அதற்கு அந்த மாணவன் "நிறைய சந்தேகங்களும் இருக்கிறது சேர், பாட ஆசிரியர் வராவிட்டால் உங்களிடம் வந்து சொல்லுகிறேன்; நீங்கள் வாருங்கள்" என்று ஹஸனிடம் கூறினான்.
சில நாட்களிற்கு பிறகு பாடசாலையில் தரம் 11 வகுப்பு மாணவன் ஒருவன் ஹஸனிடம் வந்து, "இஸ்லாம் பாடத்தில் மாகாண மட்ட பரீட்சை நேற்று நடைபெற்றது; பரீட்சையில் நீங்கள் படித்து தந்த பாடத்தில் கேள்வியொன்று வந்தது; நீங்கள் படித்து தந்ததை அப்படியே மனதில் வைத்து விடையெழுதினேன்" என்று கூறினான். இதை கேட்டதும் ஹஸன் சற்று மகிழ்ச்சியடைந்தான்.
1st Block teaching இல் கடைசி நாளில் ஹஸன் தரம் 6 வகுப்பிற்கு சென்ற போது வகுப்பில் கதிரையில் அமர்ந்திருந்த அந்த சமயம், ஒரு சில மாணவர்கள் இந்த பக்கத்தை பார்க்க வேண்டாம்" என்று ஹஸனிடம் கூறினார்கள். "ஏதோ ஒன்றை கொண்டு வந்து சாப்பிடுகிறார் போல, அதை நான் பார்க்க கூடாது என்பதற்காக அப்படி சொன்னார்கள்" என்று நினைத்து ஹஸனும் அந்த பக்கத்தை பார்க்கவில்லை. ஒரு சில நிமிடங்கள் ஹஸன் கதிரையில் அமர்ந்திருக்க சில மாணவர்கள், ஹஸன் மேல் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூக்களை தூவி, கௌரவித்து சிறிய பரிசொன்றையும் அவனுக்கு வழங்கினார்கள். அது ஹஸனின் மனதிற்கு Emotional Feelings ஒன்றையே உண்டு பண்ணியது. ஹஸனின் கண்கள் கூட சற்று கலங்கியது. அனைத்து மாணவர்களுக்கும் ஹஸன் நன்றியை கூறினான். அத்துடன் 2 வார 1st Block Teaching உம் முடிவடைந்தது. பாடசாலைக்கு ஒன்றுக்கு முதன் முறையாக ஆசிரியராக சென்று பாடத்தை கற்பித்து கொடுத்ததில் ஹஸன், வாழ்வில் மறக்க முடியாத நல்லொரு அனுபவத்தை பெற்றுக் கொண்டான். அது அவன் வாழ்வில் பெரும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியது.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் நாஸிர் ஹஸனுடைய தலைமையில் மேற்கொள்ளப்பட்ட Green Project செயற்பாட்டில், அனைவரையும் ஒத்துழைப்பு வழங்க வைப்பதற்காக வேண்டி ஹஸன் பல கட்டளைகளையும், நிபந்தனைகளையும் கொண்டு வந்தான். அவனுடைய கட்டளைகளுக்கு ஏற்ப பலர் ஒத்துழைப்பை வழங்கினர். சிலர் அவனுடைய கடுமையான கட்டுப்பாடுகளையெல்லாம் ஒரு சில விரிவுரையாளர்களிடம் முறைப்பாடு செய்தனர். விரிவுரையாளர்களுக்கான Staff Meeting இல் கூட நாஸிர் ஹஸனுடைய தலைமைத்துவம் பற்றி பேசப்பட்ட போது, ஒரு சில விரிவுரையாளர்கள் விமர்சித்தார்கள். என்றாலும் ஹஸனுக்கு மிகுந்த ஆதரவு வழங்கி, ஹஸனை சிறப்பான தலைமைத்துவத்திற்காக பயிற்றுவித்த விரிவுரையாளர், ஹஸனுக்கு ஆதரவாக பேசினார். "இவ்வாறான நிபந்தனைகள், கட்டளைகளையெல்லாம் நாஸிர் ஹஸன் விதிப்பது அனைவரையும் அதற்கு ஒத்துழைக்க வைப்பதற்காக தான்" என்பதையும் அவர் அவ்விடத்தில் கூறினார். அத்துடன் கல்லூரியில் பீடாதிபதி அவர்களும் கூட, அவர் அவதானித்ததில் ஹஸன் தனியாக நின்று, அதிகமாக அதில் ஆர்வம் காட்டி சிறப்பாக செயற்படுவதையும் அந்த Staff Meeting கூறி பாராட்டினார். "பீடாதிபதி அவர்கள் வரும் போது அவருக்கு காட்டுவதற்காக அவன் வேலை செய்வது போல நடித்திருக்கிறான்" என்று விரிவுரையாளர் ஒருவர் ஹஸனை விமர்சித்தார். அதற்கு பீடாதிபதி அவர்கள், "இல்லை, நான் அவன் அருகில் போகும் வரைக்கும் அவன் என்னை காணவில்லை" என்பதை கூறினார்.
அவ்விடத்தில் அந்த விரிவுரையாளர் அவ்வாறு கூறியது, ஹஸன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள மற்றைய விரிவுரையாளர்கள் மனதிற்கு மிகுந்த கஷ்டமாக அமைந்தது. அவ்வனைத்தையும் கேள்விப்பட்ட ஹஸன், மனம் உடைந்து போகாமல், எந்தவொரு விமர்சனத்தையும் காதில் வாங்காமல், தனக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவத்தை மேலும் மேலும் சிறப்பாக செய்தான். கல்லூரியில் ஒரு சில விரிவுரையாளருக்கு அவனை பிடிக்காமல் அவனை விமர்சித்தாலும், மற்றைய அனைத்து விரிவுரையாளர்களினதும் ஆதரவு அவனுக்கு இருப்பதை உணர்ந்து அவன் மகிழ்ச்சியடைந்தான்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை குழுவினால் அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் Green Leader Programme அறிமுக விழா நடைபெற்றது. அதன் மூலம் தேசிய கல்வியற் கல்லூரிகளில் Green Project மேற்கொள்ளப்படுவதற்கான முக்கிய காரணம் தலைமைத்துவப் பயிற்சி மற்றும் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வு என்பதை பயிலுனர்கள் புரிந்து கொண்டனர்.
கல்லூரியில் Green Project இற்கு தலைமை தாங்கி அதனை சிறப்பாக மேற்கொண்ட நாஸிர் ஹஸனுக்கு அவ்விழாவில் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் Green Project இற்கு பொறுப்பான விரிவுரையாளரினால் பாராட்டுக்கள் கிடைக்கப் பெற்றன. அவ்விழா முடிவுற்ற பின்பும் கூட உளவியல் பாடத்தை கற்றுத் தந்த விரிவுரையாளர், ஆசிரியப்பயிலுனர்கள் அனைவரையும் போகாமல் இருக்குமாறு கூறி, நாஸிர் ஹஸனின் தலைமைத்துவத்தை பாராட்டி, அனைவரும் அவனுடைய தலைமைத்துவத்திற்கு கட்டாயம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறியமையும் சிறப்புக்குரிய விடயமாகும்.
கல்லூரியில் Green Project மேற்கொள்ளப்பட்ட அனைத்து இடங்களிலும் ஹஸனுடைய வகுப்புக்கு அருகிலும், Accadamy இற்கு பின்னாலுள்ள அந்த ஒரு இடம் சவாலான இடமாக காணப்பட்டது. அக்குழுவிற்கு தலைவராக ஹஸன், அவனுடைய தெல்தோட்டை ஊர் பெண் ஒருத்தியையும், உப தலைவராக உடன் பிறவா சகோதரியையும் ஹஸன் தெரிவு செய்தான். முக்கியமாக அந்த இடத்தில் குழு உறுப்பினர்கள் அனைவரும் எவ்வளவு தான் முயற்சிகளை செய்தாலும் பயிர்கள் வளருவதை விடவும் நாளுக்கு நாள் புற்கள் தான் அதிகமாக வளர்ந்தது. மற்றைய அனைத்து இடங்களும் நன்றாக சரிவர அவ்விடத்தில் மாத்திரமே எதுவுமே சரிவரில்லை. அக்குழுத் தலைவர் எத்தனையோ முறை "என்னை இந்த தலைமைத்துவ பதவியிலிருந்து விலக்கி வேறு யாரையாவது போடுங்கள்" என்று ஹஸனிடம் கூறினாள். "நம்மூர் பிள்ளை இதில் அவமானப் படக் கூடாது, அனைத்திலும் பார்க்க இவளுடைய இடம் சிறப்பாக வர வேண்டும் என்று ஹஸன் நினைத்தான்.
"இதிலிருந்து விலக நினைக்க வேண்டாம், நான் முழுமையாக உதவி செய்கிறேன்" என்று ஹஸன் அவளிடம் கூறினாள். அவ்விடத்தை மையமாக வைத்தே Green Project தோல்வியடைந்ததாக ஆரம்பத்தில் அனைவரும் மட்டிட்டார்கள். அந்த இடம் கூட, ஹஸனுக்கு மிகுந்த ஆதரவு வழங்கிய, Green Project இற்கு பொறுப்பான விரிவுரையாளருக்கு பொறுப்பாக்கப்பட்ட இடமாக காணப்பட்டது. அவருடைய இடம் அனைத்திலும் மோசமாக காணப்பட்டதை நினைத்து ஹஸன் கவலைப்பட்டான். வகுப்புக்கு வருகின்ற சில விரிவுரையாளர்கள் கூட ஜன்னலுக்கு அருகில் சென்று, வெளியில் பார்த்து புற்கள் தான் வளர்ந்திருப்பதை காட்டி கலாய்த்தார்கள். 'அந்த இடத்தை கூட தெரிவு செய்தது பிழை" என்றார்கள். "மண் கூட பரிசோதனை செய்யப்படவில்லை" என்றார்கள். அவ்வாறான பல விமர்சனம் ஹஸனின் மேல் ஆரம்பத்தில் எழுந்தது. "எது தனக்கு அவமானத்தை பெற்றுத் தந்ததோ அதிலே வெற்றியடைந்து காட்டுவது தான் நாஸிர் ஹஸனுடைய தனி கெத்தே." அதை கூட ஒரு பெரும் சவாலாக ஹஸன் கையில் எடுத்து, அனைத்து இடத்தையும் பார்க்க அந்த இடத்தில் ஹஸன் முழுமையாக கவனம் செலுத்தினான்.
வாழ்க்கையில் விவசாயமோ, பயிர்செய்கையோ செய்யாத ஒருவன், அது பற்றிய எந்தவொரு முன் அனுபவமுமில்லாத அதற்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்த ஒருவன் அதைப் பற்றி தெரிந்து கொண்டு, அந்த இடத்தை அனைவருடைய பார்வையும் ஈர்க்கும் அளவுக்கு சிறப்பாக வடிவமைத்தான். "அனைத்து இடங்களிலும் பார்க்க சிறப்பான இடமாக அது வர வேண்டும்" என்று ஹஸன், தனி ஒருவனாக நின்று அந்த இடத்தில் முழு முயற்சியில் ஈடுபட்டான். "யாருக்காக தனியா இவ்வளவெல்லாம் கஷ்டப்படுகின்றீர்கள்? இதெல்லாம் யாருக்காக? யாருக்காக?" என்று கல்லூரியிலுள்ள எல்லோருமே ஹஸனிடம் கேட்டார்கள், ஹஸனும் அந்தக் கேள்வியை தனக்கு தானே கேட்டுக் கொண்டான். "இதெல்லாம் செய்வது, அக்குழுவிற்கு தலைவராக தெரிவு செய்த ஊர் பிள்ளைக்காகவா? இல்ல, உப தலைவராக தெரிவு செய்த உடன் பிறவா சகோதரிக்காகவா? அவர்கள் யாருக்காகவும் இல்லை, இவையனைத்துமே தன்னை தலைமைத்துவத்திற்கு பயிற்று வித்து, மிகுந்த ஆதரவு வழங்கிய Green Project இற்கும் அவ்விடத்திற்கும் பொறுப்பான விரிவுரையாளருக்காக தான்" என்று ஹஸனின் உள்மனம் கூறியது.
அக்குழுத் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஹஸனுடைய ஆலோசனைகளுக்கு இணங்க செயற்பட்டு, மிகுந்த ஒத்துழைப்பை வழங்கினர். மேலும் கல்லூரியின் Accadamy இற்கு பின்னால் அமைந்துள்ள அந்த இடம், கல்லூரியில் ஹஸனுக்கு மிகவும் பிடித்த இடமாகவும், அனைத்து இடங்களை விட சிறப்பானதாகவும் மாறியது. அவ்விடத்தை கூட ஹஸன், பொறுப்பான விரிவுரையாளரினூடாக அவனுக்கென்றே பெற்றுக் கொண்டான். கல்லூரியில் உள்ள அனைவருடைய பார்வையும் அவ்விடத்தை நோக்கி திசை திருப்பக் கூடிய அளவுக்கு நாஸிர் ஹஸன் அவ்விடத்தை சிறப்பாக மாற்றியது மட்டுமல்லாமல் அவ்விடத்தில் மிளகாய், வெண்டி, பயற்றை உட்பட தக்காளியும் பயிரிட்டு. அறுவடை செய்தது வியக்கத்தக்க விடயமாகும். இவ்வனைத்தும் நாஸிர் ஹஸனுடைய வாழ்க்கையில் புதியதொரு அனுபவமாகவே காணப்பட்டது. தலைமைத்துவத்திற்கு பயிற்றப்பட்டது மட்டுமல்லாமல், சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வு நாஸிர் ஹஸனுடைய மனதில் தாக்கம் செலுத்தியதுடன் Green Project இல் அவன் பெரியதொரு வெற்றியை அடைந்தான்.
2021 மற்றும் 2022 இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான தேசிய கல்வியற் கல்லூரிக்கான விண்ணப்பமும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுடனே நாஸிர் ஹஸன், அவனுடைய Education Information வட்சப் குரூப்பில் போட்டான். அனைவருக்கும் தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான வழிகாட்டல்கள், பாடத்தெரிவு, கல்லூரி நேர்முகப்பரீட்சை மற்றும் கல்லூரி பதிவு தொடர்பான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கினான்.
குரூப்ஸிலுள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள், அவர்களுடைய சாதாரணதர மற்றும் உயர்தர பெறுபேற்றை ஹஸனுக்கு அனுப்பி, கல்லூரிக்கான பாடங்களை தெரிவு செய்து தருமாறு அவனிடம் வேண்டினார்கள். தன்னால் முடியுமான அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஹஸன், பாடங்களை தெரிவு செய்து கொடுத்தான். அது மட்டுமல்லாமல் கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க தெரியாதவர்களுக்கு விண்ணப்பித்துக் கொடுத்தான். அத்துடன் விண்ணப்பிக்க இடர்படும் மாணவர்களுக்கும் கூட விண்ணப்பிக்க உதவி செய்ததுடன் தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து முழு உதவிகளையும் வழங்கினான்.
இன்றைய கால கட்டத்தில் பலர், மாணவர்களுக்கு கல்லூரிக்கு பாடத்தை தெரிவு செய்து கொடுப்பதற்கும் வழிகாட்டல்கள் வழங்குவதற்கும் விண்ணப்பித்து கொடுப்பதற்கும் கூட கிட்டத்தட்ட ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபா பணம் அறவிட்டு, அதை கூட வியாபாரமாக செய்கின்றனர். ஆனால் நாஸிர் ஹஸன் யாரிடமும் எந்தவொரு பணமும் வாங்காமல் இதை ஒரு சேவையாகவே தொடர்ச்சியாக செய்தான். இதன் மூலம் நாஸிர் ஹஸனுடைய பெயரும் அவனுடைய Education Information வட்சப் குரூப்ஸ்களும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றன.
Education Information மூலமாக ஹஸனுடைய முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டு பொறுக்க முடியாமல் பொறாமைப் பிடித்த சிலர், ஒரு சில விரிவுரையாளர்களிடம் ஹஸனைப் பற்றி தவறுதலாக முறைப்பாடுகளை செய்தனர். கல்லூரிக்கு புதிதாக வர இருப்பவர்கள் அனைவரையும் ஹஸன் தன்னுடைய கட்டுக் கோப்பில் வைத்துள்ளதாகவும், கல்லூரியில் பெண்கள் இவ்வாறு தான் ஆடை அணிய வேண்டும். இவ்வாறான சப்பாத்தை தான் போட வேண்டும்" என்றெல்லாம் ஹஸன் கூறியுள்ளதாக போலியான முறைப்பாடுகளை செய்தனர். கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கான Staff Meeting இல் ஹஸனுடைய Education Information தொடர்பாக பேசப்பட்ட போது விரிவுரையாளர் ஒருவரினால் இந்த போலியான முறைப்பாடுகளை பற்றியும் பேசப்பட்டது.
தெளிந்த நீரோடை போல அமைதியாக சென்று கொண்டிருந்த ஹஸனுடைய கல்லூரி வாழ்க்கையில் தீராத சிக்கல்கள் சீக்கிரமாக வந்து சூழ்ந்து கொண்டன. ஹஸன் மீது எழுந்த அவ்வனைத்து முறைப்பாட்டிற்கும் பதிலடியாக ஹஸன், "நான் கல்லூரிக்கான பாடத்தெரிவு தொடர்பாகவும், விண்ணப்பித்தல் தொடர்பாகவும் வழிகாட்டல்கள் ஆலோசனைகளை வழங்கினேனே தவிர மற்றப்படி கல்லூரிக்கான ஆடை, சப்பாத்து, அதற்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமுமே இல்லை" என்று விரிவுரையாளர்களிடம் கூற அந்த பிரச்சினையையும் ஹஸன் தனியாக தைரியமாக எதிர் கொண்டு வெற்றியடைந்தான். என்றாலும் அந்த விடயத்தை வைத்து, விரிவுரையாளர் சிலரினால் ஹஸன் அடிக்கடி அவமானப்பட்டான். அந்த அவமானங்கள் கூட ஹஸனுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. என்றாலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டான். "இதற்கு பிறகு யார் என்ன சொன்னாலும் ஒன்றையும் காதில் வாங்காமல், அதைப்பற்றி சிந்திக்காமல் இருந்தார் நல்லம்" என்று ஹஸனின் மனம் கூறியது. "ஒருவருக்கு நம்மை பிடிக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசத் தான் செய்வார்கள், விமர்ச்சிப்பவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள் அதையொன்றையுமே காதில் வாங்காமல், நாம் நம்முடைய கடமையை சரியாக செய்து விட்டு போவோம்" என்று ஹஸன் நினைத்து அதன் படி செயற்பட்டான்.
"கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு எந்தவொரு வழிகாட்டல் ஆலோசனைகளையும், தகவல்களையும் இதற்கு பிறகு வழங்கக் கூடாது" என்றும் "மீறி செயற்பட்டால் கல்லூரியை விட்டு போக வேண்டி வரும்" என வணிக பாடத்துக்கு பொறுப்பான விரிவுரையாளர், ஹஸனுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். என்றாலும் ஹஸன் அந்த விரிவுரையாளர்களின் எச்சரிக்கைக்கு எதிராக, அவரை மீறி செயற்பட்டான். "ஒரு கெடுதல் செய்வதற்கு தான் பயப்பட வேண்டும். நம்மால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய பயப்பட வேண்டிய அவசியமே இல்லை" என்று ஹஸனுடைய மனம் கூறியது. "என்னுடைய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு அவர்களுக்கும் மனதில் ஏற்பட்டுள்ள பொறாமையினால் தான் அவர்களும் என்னுடன் அப்படி நடந்து கொள்கிறார்" என்று ஹஸன் நினைத்தான். அதையெல்லாம் தாண்டி ஹஸன் அவனுடைய சேவையினை தொடர்ச்சியாக மேற்கொண்டான்.
“விமர்சிக்கப்படலாம்; உன் பாதைகள் தடுக்கப்படலாம்; உன் எண்ணங்களும் சிந்தனைகளும் கேள்விக்குள்ளாக்கப்படலாம்; உன் வாழ்வு முழுவதும் அவதூருகளால் சூழப்படலாம்; என்ன ஆனாலும் உண்மையும் நேர்மையும் உன்னோடு இருக்கும் வரை இறைவன் உன்னோடு பாதையில் வெற்றியை மட்டுமே மீதம் வைத்திருப்பான்" என்று ஹஸனின் மனம் கூறியது.
கல்லூரி விண்ணப்பித்தவர்களில் நேர்முகப்பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்ட பிறகு ஹஸன் அவனுடைய Education Information வட்சப் குரூப்பில் போட்டான். ஹஸனுடைய குரூப்பில் இணைந்து கல்லூரி சம்பந்தமான அனைத்து வழிகாட்டல்கள் ஆலோசனைகளை பெற்று விண்ணப்பித்தவர்களில் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவாகியிருந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடமாகும். அவர்கள் அனைவருக்கும் கல்லூரி பிணைமுறிவு படிவத்தை எப்படி சரியாக நிரப்புவது தொடர்பான முழுமையான வழிகாட்டல்களை வழங்க, அனைத்து மாணவர்களும் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பதிவை மேற்கொண்டனர். ஹஸனுடைய அனைத்து வழிகாட்டல்கள் உதவிகளுக்கும் அனைத்து மாணவர்களும் அவனுக்கு மனதார நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். அத்துடன் நாஸிர் ஹஸனுடைய பெயரும் அனைத்து தேசிய கல்வியற் கல்வியற் கல்லூரிகளிலும் பிரசித்தி பெற்றது. முக்கியமாக இலங்கை நாட்டில் ஆயிரக்கணக்கான எதிர்கால ஆசிரியர்கள் உருவாக நாஸிர் ஹஸன் முக்கிய காரணமாக திகழ்ந்தான்.
ஹஸன் செய்த இந்த சேவையை கல்லூரியில் விரிவுரையாளர்கள் வரவேற்றனர். அது மட்டுமல்லாமல் ஹஸனுக்கு எச்சரிக்கை விடுத்த வணிக பாடத்துக்கு பொறுப்பான விரிவுரையாளரிற்கு கூட, ஹஸன் மீதான நல்லொரு அபிப்பிராயம் உண்டாகியது. எதிர்ப்பாராத அளவுக்கு அவர், ஹஸனை அணுகி மிகவும் நல்ல முறையில் நடந்து கொண்டார். ஹஸனும் அவர்கள் உட்பட அனைத்து விரிவுரையாளர்களுடன் மிகவும் நல்ல முறையில் மரியாதையுடன் நடந்து கொள்ள ஹஸனுடைய கல்லூரி வாழ்க்கையும் மேலும் மேலும் கெத்தாக மாறியது.
2021 மற்றும் 2022 உயர்தர குழுவினரை அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு உள்வாங்க இருந்தனர். அதனால் அவர்களுக்கு தங்குவதற்கான விடுதி ஏற்பாடுகளை செய்வதற்காக வேண்டி, ஆண்கள் விடுதியை பெண்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆண் விடுதியிலிருந்த ஆண் ஆசிரியப் பயிலுனர்கள் அனைவரையும், கல்லூரிக்கு வெளியிலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி விடுதிக்கு போகுமாறும் பீடாதிபதி அவர்கள் கூறினார். அங்கே ஒரு கட்டிடம் மாத்திரம் நன்றாக காணப்பட, மற்றைய கட்டிடம் பாலடைந்த பழைய காலத்து கட்டிடமாகவே காணப்பட்டது. அங்கு தங்குவதற்கான அடிப்படை வசதிகளான மலசல கூடம், நீர் வசதிகள், எதுவுமே ஒழுங்கில்லாதமையினாலும், மின்விசிறிகள் கூட போதுமானதாக இருக்கப்படாமையினாலும் ஆண்களில் பலர், கல்லூரிக்கு வெளியிலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி விடுதிக்கு செல்ல ஒரு துளி கூட விருப்பப்படவில்லை.
ஹஸனும் ஆண்களுக்காக வேண்டி பேசி, ஒரு வொய்ஸ் மெசேஜ் ஒன்றினை கல்லூரி வட்சப் குரூப்பில் போட்டான். "கல்லூரிக்கு வெளியிலிலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி விடுதியில், ஆண்கள் அனைவரும் தங்குவதற்கான அடிப்படை வசதிகள் எதுவுமே அங்கு இல்லை; அந்த விடுதி 1940 காலப்பகுதியில் கட்டப்பட்ட, பாலடைந்த பழைய பங்காளாவை போன்றே காணப்படுகிறது; எப்போது இடிந்து விழும் என்று கூட சொல்ல தெரியாது; உயிருக்கும் ஆபத்துக்கள் நேரலாம்; அந்த விடுதியை முன்னரே இடிக்குமாறு கூறியுள்ளதாகவும் ஒரு தகவல்; அங்கே நீர் வசதிகள், மலசல கூடம் எதுவுமே ஒழுங்கில்லை; குளிப்பதற்கு ஏற்ற எந்தவொரு ஏற்பாடுகளும் அங்கு இல்லை; மின்விசிறிகள் கூட போதுமானதாக இல்லை; எம்முடைய பொருட்களை கூட வைப்பதற்கு இடமில்லை; படிப்பதற்கான எந்தவொரு வசதிகளும் அங்கு இல்லை; அதனால் ஆண்கள் யாருக்குமே அங்கு செல்ல விருப்பமில்லை; ஆண்கள் விடுதியை ஆண்களுக்கே விட்டுக் கொடுங்கள்; பெண்கள் விடுதியிலே பெண்கள் சமாளித்து இருங்கள்; பெண்களுக்காக வேண்டி ஆண்கள் எவ்வளவோ செய்திருக்கிறார்கள்; நானும் செய்திருக்கிறேன்; அதை சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்களிற்காக வேண்டிய பெண்கள் இந்த பெரும் உதவியை செய்யுங்கள்" என்றெல்லாம் ஹஸன் அந்த வொய்ஸ் மேசேஜில் கூறியிருந்தான்.
பெண்களில் பலர் அந்த வொய்ஸ் மெசேஜினை கேட்டு, மனம் உணர்ந்து, அனைத்தையும் புரிந்து கொண்டு, பெண்கள் விடுதியிலே பெண்கள் சமாளித்து இருப்பதாகவும், ஆண்கள் விடுதியை ஆண்களிற்கே விட்டுக் கொடுப்பதாகவும் கூறினர். அவ்விடயத்தை கேள்விப்பட்ட ஆண்கள், சந்தோஷத்தில் மிகவும் துள்ளிக் குதித்தனர். "நாஸிர் ஹஸன் வொய்ஸ் மெசேஜ் ஒன்றினை போட்டு நிறைய பேருடைய மனதை மாற்றினான்" என்றெல்லாம் கூறி பெண்களில் ஒரு கூட்டம் ஹஸன் மீது கடுமையாக கோபம் கொண்டனர். அவர்கள் உடனே அவனுடைய வட்சப் குரூப்பிலுருந்தும் லெப்ட் ஆகினர். அவர்கள் எழுபது பேரை பெண்கள் விடுதியில் உள்ள Green Dome என்று அழைக்கப்பட்ட விடுதியிற்கு அனுப்பினர். Green Dome முழுமையான தகரத்தினால் கட்டப்பட்ட ஒரு விடுதி. தகரம் என்பதனால் கடுமையான வெப்பம். தங்குவதற்கு மிகவும் கஷ்டமான நிலையே அங்கு காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் 70 பேரையும் அவ்விடுதியில் நெருக்கமாக போட, அவ்வனைவரும் அங்கு பெரும் கஷ்டத்தை அனுபவித்தனர். "அவ்வனைத்து கஷ்டத்திற்கும் நாஸிர் ஹஸன் தான் முக்கிய காரணம்" என்று கருதிய அவர்கள், ஹஸனை வெறுத்தனர்.
அந்த நேரம் ஹஸன், ஆண்களின் பக்கத்தை மாத்திரமே யோசித்தானே தவிர, பெண்களின் நிலைமை பற்றி அவன் நினைத்துப் பார்க்கவில்லை. Green Dome ஐ பற்றிம், அங்கு தான் அவர்களை அனுப்பப் போவதையும் அவன் அறிந்திருக்கவில்லை. Green Dome இற்கு அனுப்பட்ட ஹஸனுடைய வகுப்பிலுள்ள பெண்களும், ஹஸனுடன் கடுமையாக கோபித்துக் கொண்டனர். வேற்றுமை காட்டினர். "நான் செய்தது சரியா? தவறா" என்ற பெரும் குழப்பம் ஹஸன் மனதில் காணப்பட்டது. ஹஸன், அவர்களிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அது குறித்து பேசினான். "ஆண்கள் வெளியிலுள்ள விடுதியிற்கு அனுப்பப்பட்டிருந்தால், பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை விட ஆண்கள் பலமடங்கு கஷ்டப்பட்டிருப்பார்கள்" என்பதையும் அவர்களிடம் எடுத்து கூறினான். ஆனால் அவர்கள் யாரும் அதனை புரிந்து கொள்ளவில்லை. என்றாலும் கல்லூரியிலுள்ள பெரும்பாண்மையினர் அதனை ஏற்றுக் கொள்ள, "நடந்தது நடந்து முடிந்து விட்டது" என்று எண்ணி அது குறித்த குழப்பத்திலிருந்து ஹஸன் மீண்டான். என்றாலும் Green Dome இல் கஷ்டப்படுகின்ற பெண்களுக்காக என்ன செய்வது என்று ஹஸன் சற்று சிந்தித்தான். "அனைவரையும் மிக விரைவில் கல்லூரியை விட்டு வெளியேற்றி, நம்முடைய கல்லூரி வாழ்க்கையை அவசரமாக முடிக்க வைப்பது தான் இதற்கு சரியான ஒரே தீர்வு " என்று ஹஸனின் மனம் கூறியது. அதற்காக வேண்டி ஹஸன், அவனால் முடியுமான முயற்சிகளை செய்தான்.
இலங்கையிலுள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரிக்கும் நேர்முகப்பரீட்சைக்கு தெரிவாகியுள்ள 2021 மற்றும் 2022 உயர்தர மாணவர்களின் பெயர் பட்டியலை தனித்தனியாக கல்வி அமைச்சு தனது உத்தியோகப்பூர்வ வலையத்தளத்தில் வெளியிட்டது. வெளிவந்தவுடனே ஹஸன் அவனுடைய Education Information இல் பகிர்ந்தான். தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியின் பெயர் பட்டியல் வெளிவர சற்று தாமதமாகியது. ஹஸனுடைய வட்சப் குரூப்பில் இணைந்துள்ள ஒருவரிடமிடந்து, "தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியின் பெயர் பட்டியலை கல்வி அமைச்சிற்கு அனுப்பியிருக்கிறேன்; இன்னும் வெளியிடப்படவில்லை" என்ற ஒரு மெசேஜ் ஹஸனுக்கு வந்தது. அந்த மெசேஜ் வந்த தொலைபேசி இலக்கத்திற்கு ஹஸன் அழைப்பை மேற்கொண்டான். "அவர், தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியில் சிரேஷ் பெண் விரிவுரையாளர் ஒருவர்" என்ற விடயத்தை ஹஸன் தெரிந்து கொண்டான். அவர்கள் ஹஸனுடன் மிகவும் அன்பாகவும், பணிவாகவும் பேசினார். ஹஸனும் மிகுந்த மரியாதையுடன் அவர்களுடன் பேசினான். "பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் என்னுடைய வட்சப் குரூப்பில் இணைந்துள்ளார்கள், அனைவருக்கும் அட்மினாக செயற்படுகிறேன், அத்துடன் நான் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் ஒரு ஆசிரியப்பயிலுனர்" என்ற விடயத்தை ஹஸன் அவர்களிடம் கூறி தன்னைப்பற்றி தெரியப்படுத்தினான்.
"தர்கா நகர் கல்லூரிக்கு தெரிவானவர்களின் பெயர் பட்டியலை எனக்கு அனுப்புமாறும் கல்வி அமைச்சினுடைய வலையத்தளத்தில் போடப்படுவதற்கு முன்னர், அதை நான் என்னுடைய Education Information வட்சப் குரூப்ஸ்களில் வெளியிடுகிறேன்" என்று ஹஸன் அவர்களிடம் கேட்டான். அதற்கு அவர் "சரி" என்று கூறியதுடன் அவர்களிடம் இருந்து தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப்பரீட்சைக்கான பெயர்பட்டியல் உட்பட நேர்முகப்பரீட்சைக்கான கடிதம் மற்றும் மற்றைய ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, கல்வி அமைச்சு வலையத்தளத்தில் வெளியிடுவதற்கு முன்பே "DNCoE Interview Name List Released by Nasir Hasan" என்று போட்டு, ஹஸன் தன்னுடைய Education Information வட்சப் குரூப்ஸ்களில் அதனை வெளியிட்டான். தெரிவாகியிருக்கும் அனைவருக்குமே அது மிக விரைவாக சென்றடைந்தது. நாஸிர் ஹஸன் அதை வெளியிட்டு, ஒரு கிழமைக்கு பிறகு தான் கல்வி அமைச்சு அதனை வெளியிட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் அந்த விரிவுரையாளரைப் பற்றி ஹஸன் விசாரித்து பார்க்கையில், தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியிலே படித்து, அதே கல்லூரியிலே விரிவுரையாளராக கடமையாற்றி, கல்லூரியின் பீடாதிபதி அவர்களின் வேலைகளையும் கூட பாரமெடுத்து சிறப்பாக செய்து வரக்கூடிய சிறந்த சிரேஷ்ட பெண் விரிவுரையாளர் ஒருவர் என்பது ஹஸனுக்கு தெரிய வந்தது. மேலும் அந்த கல்லூரியிலுள்ள அனைவருக்குமே மிகவும் பிடித்த சிறந்த சிரேஷ்ட விரிவுரையாளராக அவர்கள் காணப்படுவது மகிழ்ச்சியான விடயமாகும். அந்த சிரேஷ்ட விரிவுரையாளரை ஹஸனுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
Education Information என்ற பெயரில் நாஸிர் ஹஸனுடைய சேவைகள் உயர்தரத்திற்கு தோற்றி சித்தியடைந்த பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. எந்த கல்லூரிக்காவது யாரையாவது ஒரு மாணவியை நேர்முகப்பரீட்சைக்கு அல்லது பதிவிற்கு அழைத்தால் கூட, அந்த மாணவி அவ்விடயத்தை Education Information அட்மினாக செயற்படும் நாஸிர் ஹஸனிடம் கூறி, அவனுடையே வழிகாட்டல்கள், ஆலோசனைகளை பெற்று தான் கல்லூரிக்கு செல்லும் அளவுக்கு நாஸிர் ஹஸன் வெற்றி கண்டான். அதுமட்டுமல்லாமல் 2 பாடத்திற்கு 2 கல்லூரிக்கு தெரிவான ஒரு மாணவி, எந்த பாடத்திற்கு எந்த கல்லூரியில் பதிவு செய்வது என்பதை கூட நாஸிர் ஹஸன் தான் அவர்களுக்கு முடிவு செய்து கொடுக்க வேண்டும் என்ற அளவுக்கு நாஸிர் ஹஸன் பெரியதொரு முன்னேற்றம் அடைந்தான். அது மட்டுமல்லாமல் "கல்லூரியை எதிர்ப்பார்த்து கிடைக்காமல் போனவர்கள் அடுத்த கட்டம் என்ன செய்வது என்ற தெரியாமல் கடைகளில் வேலைக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று கஷ்டப்படாமல் படித்த படிப்பிற்கு நம் நாட்டில் நல்லொரு அரசாங்க தொழிலை பெற வேண்டும்" என்ன எண்ணத்தில் ஹஸன் அவனுடைய வட்சப் குரூப்ஸின் ஊடாக கல்வியில் முன்னேற சிறந்த துறைகளை தெரியப்படுத்தினான். சட்டக் கல்லூரி, தாதியர் பயிற்சி கல்லூரி உட்பட திறந்த பல்கலைக்கழகம் யாவற்றையும் பற்றி மாணவர்களுக்கு விளங்கப்படுத்தி அவனுடைய சேவையை மேலும் தொடர்ந்தான். அவனால் பயனடைந்தவர் பல்லாயிரக்கணக்கானோர் உருவாக, அனைவருடைய துஆக்களையும் ஹஸன் பெற்றுக் கொண்டான்.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு தெரிவாகிய புதிய குழுவை முதல் நாள் பெரியதொரு வரவேற்புடன் கல்லூரிக்கு உள்வாங்கினர். அதில் பலர் நாஸிர் ஹஸனுடைய Education Information வட்சப் குரூப்ஸில் இணைந்து அவனால் பயனடைந்தவர்களாக காணப்பட்டனர். ஆண் பயிலுனர்களில் நாஸிர் ஹஸனை தெரியாத எவருமே இருக்கவில்லை. அதில் சிலர் அவனுடைய தீவிர ரசிகர்களாகவும் காணப்பட்டனர். ஓரிரு நாளில் அவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வும் ஆரம்பிக்கப்பட்டது. திசைமுகப்படுத்தல் பத்தாவது நாளில் 'Green Leader'' பற்றிய நிகழ்வு அதற்கு பொறுப்பான விரிவுரையாளரினால் நடைபெற்றது. அப்போது விரிவுரையாளர் அனைத்து புதிய ஆசிரியப்பயிலுனர்களுக்கும் நாஸிர் ஹஸனை அறிமுகப்படுத்தினார். அதனால் அனைவருமே அவனை நன்றாக அடையாளம் கண்டனர். அத்துடன் Green Project தொடர்பாக பேசும் படி விரிவுரையாளர், நாஸிர் ஹஸனிடம் கூற, அவனும் அது குறித்து சிறப்பாக பேசியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஒரு முறை ஹஸன் கல்லூரியிலிருந்து ஏராவூரிற்கு பஸ்ஸில் செல்லும் சமயம், மட்டக்களப்பு கல்லூரியில் இருந்து ஆசிரியப்பயிலுனர்கள் பலர் அந்த பஸ்ஸில் ஏறினர். பஸ்ஸில் ஏறிய அனைவரும் நாஸிர் ஹஸனை கண்டதும் "நாஸிர் ஹஸன் சேர்.. நாஸிர் ஹஸன் சேர்" என்று போட்ட சத்தத்தை பஸ்ஸிலுள்ள அனைவருமே கேட்டனர். "நாஸிர் ஹஸன் இலங்கை முழுவதுமே பிரபல்யம்" என்று பஸ்ஸில் சென்ற சிலர் ஹஸனிடம் கூறினார்கள். மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி பயிலுனர் ஒருவன் ஹஸனிடம் வந்து, "உங்களை கண்டதில் பெரும் மகிழ்ச்சி" என்றும் "இவ்வளவு தூரம் நாங்க வந்ததிற்கு காரணமே நீங்க தான் சேர்" என்றும் மனப்பூர்வமாக ஹஸனிடம் கூறினான். இதுவும் ஹஸன் மனதிற்கு Emotional Feelings ஒன்றையே உண்டு பண்ணியது. ஹஸனுக்கு பலர் மெசேஜ் இல் இப்படி கூறியதை விடவும், நேரில் ஒரு பயிலுனர் வந்து, இவ்வாறு கூறியது அவன் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. மேலும் அனைத்து ஆசிரியப் பயிலுனர்களும் நாஸிர் ஹஸனிடம் வந்து மதித்து பேசினார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த ஷீட்டை கூட ஹஸனுக்கு தரப்பார்த்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அவர்களினூடாக பஸ்ஸில் நாஸிர் ஹஸனுக்கு எதிர்பாராத பெரியதொரு வரவேற்பொன்றே கிடைக்கப் பெற்றது.
நாஸிர் ஹஸன், தோழி மீது வைத்திருந்த, அன்னியோன்னியமான நட்பு, நீடிக்கவில்லை. கல்லூரியில்,தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு, வகுப்பிலுள்ள அனைவரும் தகவல் தொழில்நுட்ப வகுப்புக்கு சென்றிருந்தனர். பாடம் முடிந்தவுடன், மடிக்கணினிகளை சேகரிக்குமாறு, விரிவுரையாளர் கூற, ஆண்களில் இருவர் அதை சேகரித்தனர். ஆண்கள் இருவரும், மடிக்கணினிகளை, தோழியிடம் கேட்க, அதை அவள் அவர்களுக்கு கொடுக்காமல், அவர்களை தாண்டிச் சென்று, ஹஸனிடம் அதை ஒப்படைத்து சற்று புன்னகைத்தாள். அதை பார்த்த, இருவரும் "ஹா..ஹா.." என்று கூறி சிரித்தனர். அதை கண்ட அவள், வருத்தப்பட்டாள். அந்த இருவரும் செய்த தவறிற்கு, ஹஸன், அவளிடம் மன்னிப்பு கேட்டான். "இப்படி நடந்து கொண்டது, எனக்கு பிடிக்கவில்லை" என்று அவள், ஹஸனிடம் கூறினாள்.
வகுப்பில் எப்போதும் முன் வரிசையில் இருந்து, ஹஸனுடன் நன்றாக சிரித்து பேசியவள், அந்த இடத்தை விட்டு விலகி, பின்வரிசைக்கு சென்றாள். "வீட்டில் எனக்கு பெற்றோர், எனக்கு திருமணம் பேசி வைத்து இருக்கின்றார்கள்" என்று ஹஸனிடம் கூறினாள். நான் அவளை விரும்புவதாக, அவள், என்னை தவறாக நினைத்து, நான் அவளுடன் நட்பாக பேசுவதை, நிறுத்துவதற்காக, அவள் அப்படி கூறினாலோ" என்றொரு சிந்தனை, ஹஸன் மனதில் வந்தது. திருமணம் பேசியுள்ள, மணமகனின் புகைப்படத்தை அவளிடம் கேட்க, அவளும் அதை ஹஸனுக்கு அனுப்பினாள். ஹஸனும் அவளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தான். "என்னுடைய வருங்கால கணரிடத்தில் கூட, கல்லூரி வாழ்க்கையிலே எனக்கு நல்லொரு நண்பர் கிடைத்திருக்கிறது என்று உங்களைப் பற்றி கூறியிருக்கிறேன்" என்று அவள் ஹஸனிடம் கூறினாள். அது, ஹஸனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
காலம் செல்ல செல்ல ஹஸனுக்கு அவள், கொடுத்த முக்கியத்துவமும் குறைந்தது. "உங்களுடன், நட்பாக பழகும் விடயம், விரிவுரையாளர்களுக்கு தெரிந்தால், என்னுடைய பெயர் தான், கெட்டுப் போகும்" என்று அவள் ஹஸனிடம் கூறினாள். பேசுவதையும் நன்றாக குறைத்தாள். அவ்வனைத்தும் ஹஸன் மனதிற்கு கஷ்டமாக அமைந்தது. அவளுக்கு, தன்னுடைய தூய்மையான நட்பை, புரிய வைத்து, அவளை, பேச வைப்பதற்காக ஹஸன், அவன் எழுதிய கதையில், ஒரு இடத்தில் அவளுடைய பெயரை எழுதி, அதை, அவள் பார்க்கும் படி செய்தான். அவளை பேச வைப்பதற்காக ஹஸன் செய்த, அந்த செயலே, "இனி அவனுடன் பேசவே கூடாது" என்று, அவளை சிந்திக்க வைத்தது.
"நான் விளையாட்டிற்காக தான் அப்படி செய்தேன்: மன்னித்துக் காெள்ளுங்கள்" என்றெல்லாம் ஹஸன், அவளிடம் கூறினான். என்றாலும் அவள் புரிந்து கொள்ளவில்லை. அதிலிருந்து அவள், ஹஸனை வெறுத்தாள். அவனை வட்சப்பில் Block செய்து, அவனுடைய தொலைபேசி இலக்கத்தையும் Delete செய்தாள். வகுப்பில், அனைவரது முன்னிலையிலும் அவள், ஹஸனுக்கு ஏசினாள். அது, ஹஸனுக்கு பெரும் அவமானமாகியது. என்றாலும், "அவளின் மீது, எந்த தவறும் இல்லை; என் மீது தான் தவறு" என்பதை உணர்ந்த ஹஸன், அமைதியாக இருந்தான். அவள் மீது கோபம் கொள்ளவுமில்லை. "தன்னை பிடித்தவர்கள், எத்தனையோ பேர் இருக்கலாம்; ஆனால், தன் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்த ஒருத்தி, அவள் தான். அவளுடைய நம்பிக்கையை நான் இழந்துவிட்டேனே." என்றெல்லாம் ஹஸனின் மனம் நினைக்க, அவன் கண்கள் கலங்கின.
"கல்லூரியில், நான், என்னுடைய School Profile Team இல் கூட, எந்த ஆண்களுடனும் பேசுவதில்லை; உங்களுடன் மாத்திரம் தான் பேசுகிறேன்; ஏன் என்றால், எனக்கு, உங்களை அவ்வளவு நம்பிக்கை" என்றெல்லாம் கூறி, ஹஸனுடன் மாத்திரம், பேசிய தோழி, அவனை வெறுத்து, அவனை தவிர, மற்றைய அனைவருடனும் நன்றாக சிரித்துப் பேசினாள். இதை, ஹஸன் பார்க்கும் போதெல்லாம், "அப்படியென்றால் அவளுக்கு நான், அவ்வளவு கேவலமாக போய் விட்டேன் போல, என்னுடன் பேசினால் மாத்திரமே, அவளுடைய பெயர், கெட்டுப் போகும்" என்றெல்லாம் நினைத்து கவலையடைந்தான். ஹஸன் மீது அவள், வைத்திருந்த நட்பு, நம்பிக்கை அனைத்தும், அவளுக்கு இல்லாமல் போக, அவள் ஹஸனை வெறுத்து, அவனை விட்டு, முழுமையாக, நீங்கிச் சென்றாள்.
எத்தனையோ ஆயிரம் பேர், நாஸிர் ஹஸனுக்கு நற்புக்கரம் நீட்டியும், யாருடைய நட்பையும் ஏற்றுக் கொள்ளாத ஹஸன், கல்லூரி வாழ்க்கையில், வகுப்பில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, பேசி, பழகிய தோழியினுடைய நட்பில், ஏமாற்றமடைந்தான். "இதுவரை என்னுடன் அவள், பேசி பழகியது, எல்லாமே நடிப்பு தான்" என்று ஹஸனை அவள் சிந்திக்க வைத்தான். தோழியினுடைய நடத்தை மாற்றம், ஹஸனுடைய மனதினை நன்றாக காயப்படுத்தியது. "நான் என்னுடைய மனசாட்சியை தொட்டு சொல்வதென்றால், என்னுடைய கல்லூரி வாழ்க்கையிலே, நான் நன்றாக பேசி பழகிய ஒரே ஒரு தோழி, அவள் ஒருத்தி மட்டும் தான், அவளை தவிர வேறு யாரையும் தோழியாக ஏற்றுக் கொள்ளவுமில்லை, கல்லூரியில் வேறு எந்தப் பெண்ணிடமும், எந்தவொரு நட்பையும் ஹஸன் மேற்கொள்ளவில்லை' என்றெல்லாம் ஹஸன் நினைத்து கண் கலங்கினான். "ஒரு ஆண் ஒரு பெண்ணிற்காக கண் கலங்குகிறான் என்றால், அது காதலினால் இல்லை, அவள் மீது கொண்டுள்ள, எந்தவொரு கலப்படமும் இல்லாத தூய்மையான நட்பாக கூட இருக்கலாம்" என்றெல்லாம் ஹஸனின் மனம் கூறியது.
தோழியின் பிரிவுத்துயரில், அவனுடைய உள்ளத்தில் தோன்றிய அனைத்து கவலைகளையும், உணர்வுகளையும் வைத்து, நாஸிர் ஹஸன், யதார்த்தமாக கவிதையொன்றினை எழுதினான்.
மலரும் போது என்னை பார்த்த பூ, உதிரும் போது என்னை மறந்தது, வாடி உதிர்ந்த பூவை நான் பார்த்த போது, பூவாக நினைத்த தோழியிற்கு, நான் எழுதிய கவிதை, என் சிந்தனையில்.
முன்வரிசையில் இருந்து பின்வரிசைக்கு சென்றாயே! நான் இருப்பதனாலோ என்னமோ..
உன் பல்வரிசையை காட்டி, ஏமாற்றி விட்டுச் சென்றாயே! நட்பென்ற பெயரில்..
தனிமையே சிறந்த துணையென்று நானிருக்க, பொய்யுறைத்து பேசினாயே வார்த்தையை இனிமையாக.
நட்புக்காக என்னை ஏங்க வைத்து.. உன் சுயநலத்திற்காகவா!? நீங்கிப் போகிறாய் என்னை விட்டு.
இழுத்துப் பிடித்தால் வலி எனக்கென்று நான் உணர.. விட்டு விட்டேன் என் மனம் அறியா உன்னை.
என் மீது அவ்வளவு நம்பிக்கை என்றெல்லாம் கூறி, என்னுடன் மாத்திரம் பேசினாயே அன்று பேசுகிறாயே மனசாட்சியே இல்லாமல் என்னை தவிர மற்ற எல்லோருடனும் இன்று
உன்னை தோழியாக என் வாழ்க்கை கதையில் இணைத்ததற்காகவா!? எனக்கு இந்த தண்டனை.
ஒரு நாள் உனக்கு தோன்றும் நல்லொரு நட்பை இழந்து விட்டோம் என்ற சிந்தனை.
கல்லாக்குறேன் என் மனதை நானும். காலம் வரும் போது சிந்திப்பாய் ஒரு நாள் நீயும்.
கைவிட்டு இருக்கலாம் உன் நட்பை காயப்பட முன்பே!
தூக்கி எறிந்தாயே நீ என்னை.. உன் தேவை முடிந்த பின்பே!
தோழியின் நடத்தை மாற்றம் குறித்து, நாஸிர் ஹஸன் எழுதிய கவிதைக்கும், ஆசிரியப் பயிலுனர்கள் மத்தியில், நல்லதொரு வரவேற்பொன்று கிடைத்தது. தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவதுடன், தோழி மீதான உள்ளத்து, உண்மையான நட்பு உணர்வுகளையும் வெளிக்காட்டுவதற்காகவே, ஹஸன், கவிதையை எழுதினான். என்றாலும் அவள், ஹஸனை புரிந்து கொள்ளவில்லை. "உன்னோடு இருக்க தகுதியில்லாத உறவுகள், உன்னோடு ஒருபோதும் இருக்காது, அந்த உறவுகளுக்கு தைரியமாக விடை கொடு, தகுதியில்லாதது உன்னை விட்டு நீங்கினால் தான் தகுதியுடையது உன்னை வந்து சேரும்" என்றெல்லாம் ஹஸன் நினைத்து, அவளுடைய நட்பை கை விட்டு, அவளை விட்டு விலகிச் சென்றான்.
கதைகள் பெரும்பாலும் கற்பனைக் கதைகளாகவே பலரினால் எழுதப்பட்டு வருகின்றன. யாருமே தன்னுடைய நிஜவாழ்க்கையை, கதையாக எழுதுவதில்லை. ஒரு ஆக்க பூர்வமான சிந்தனையாக நாஸிர் ஹஸன், தன்னுடைய நிஜவாழ்க்கை கதையை யதார்த்தமாகவும், உண்மையாகவும் 'Nasir Hasan 100% Real Life Story' என்ற பெயரில், பிறந்தது முதல் கல்லூரிக்கு செல்லும் வரையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் வைத்து, கதையாக எழுதினான். அதற்கு பிறகு கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து, கல்லூரி வாழ்க்கையின் ஆரம்பம் தொடக்கம் வாழ்க்கையில், நாஸிர் ஹஸன் பெரியதொரு வெற்றியை அடையும் வரையில் 'Nasir Hasan 100% Real Life Story Chapter 2' என்ற பெயரில் கதையினை மீண்டும் எழுதினான்.
கல்வி, வியாபாரம், விவசாயம், உணவு, சுற்றாடல், விளையாட்டு, தொழில் நுட்பம், கலை போன்ற அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கத்துடிக்கும் ஒருவனின் நிஜ வாழ்க்கை கதையாகும். வாழ்வில் பல அவமானங்கள், தோல்விகள், கஷ்டங்கள், புறக்கணிப்புக்கள், சவால்கள், விமர்சனங்கள், பிரச்சினைகள் அனைத்தையும் தனியொருவனாக தைரியமாக எதிர் கொண்டு, ஏழ்மையிலும் செம்மையாக வாழக் கூடிய ஒருவன், தன் திறமை மீது நம்பிக்கை வைத்து, அடைந்து கொள்ளக் கூடிய மாபெரும் வெற்றியே 'Nasir Hasan 100% Real Life Story' என்ற கதையின் முக்கிய கருப்பொருளாகவும், கதையினுடைய வெற்றியாகவும் காணப்படுகிறது.
நாஸிர் ஹஸன் என்பவனின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு மூலாதாரமாக, அவனுடைய 'Nasir Hasan 100% Real Life Story' சிறப்புற்றது. நாஸிர் ஹஸன், அவனுடைய வாழ்க்கையை கதையை, கதையாக எழுதி வெளியிடுவதை வைத்து கேலி கிண்டல்கள் செய்பவர்கள் பலர். அவர்களையெல்லாம் தாண்டி ஹஸனுடைய திறமையை வரவேற்று, அவனுடைய கதையை தேடி ஆர்வத்துடன் ரசித்து வாசிக்கும் அளவுக்கு, கதைக் கென்றே தனி ரசிகர் பட்டாளமே உருவாகி வர, கதையை வைத்து கலாய்ப்பவர்களை ஹஸன் சிறிதேனும் கண்டு கொள்ளவில்லை.
கல்லூரியில் பெண் ஆசிரியப் பயிலுனர்களின் தலைவி, அவள் கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு, நாஸிர் ஹஸனுடைய Education Information வட்சப் குரூப்பில் இணைந்திருந்தமையினால், குரூப்பில் நாஸிர் ஹஸன் போட்டிருந்த, அவனுடைய வாழ்க்கை கதையினை முழுமையாக வாசித்து, அவனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, கல்லூரிக்கு செல்வதற்கு முன்பிலிருந்தே அவள், நாஸிர் ஹஸனுடைய தீவிர ரசிகையாக மாறினாள். மேலும் கதைக்கு மிகுந்த ஆதரவை வழங்கினாள். ஹஸன் அவனுடைய வாழ்க்கையை, கதையாக எழுதுவதை வைத்து, கல்லூரியில் கிண்டல்கள் செய்பவர்கள் யாரிடத்திலும், அவள் ஹஸனை விட்டுக் கொடுத்ததில்லை. "அது நாஸிர் ஹஸனுடைய தனிப்பட்ட திறமை" என்று அனைவரிடத்திலும் கூறி ஹஸனை பாராட்டி அவனுடைய திறமையை அவள் வரவேற்றாள்.
ஹஸன் Print செய்து வைத்திருந்த, Nasir Hasan 100% Real Life Story புத்தகத்தை அவள், ஹஸனிடம் கேட்டாள். ஹஸன் அக்கதைப் புத்தகத்தை அவளுக்கு ஒப்படைக்க, அவள் வாசிப்பதற்கு அதை வீட்டிற்கு எடுத்த சென்ற போது, அவளுடைய சகோதரிகளும் கதையை வாசித்தனர். அக்கதையினால் அவர்களும் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அக்கதைப் புத்தகத்தை கூட திருப்பி ஒப்படைக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆசிரியப்பயிலுனர்களின் தலைவி "அதை நான், நாஸிர் ஹஸனுக்கு கட்டாயம் திருப்பிக் ஒப்படைக்க வேண்டும்" என்று அவர்களிடம் கூறி, கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்று ஹஸனிடம் ஒப்படைத்து, நடந்த அந்த விடயத்தையும் அவள் ஹஸனிடம் கூறினாள். அதற்கு பிறகு, புதிதாக Print செய்து வைத்திருந்த 'Nasir Hasan 100% Real life Story' புத்தகங்களில் ஒன்றினை ஆசிரியப் பயிலுனர்களின் தலைவி, நாஸிர் ஹஸனிடமிருந்து பரிசாகப் பெற்றுக் கொண்டாள்.
Nasir Hasan 100% Real Life Story Chapter 2 கதையில் எழுதிய ஒவ்வொரு காட்சிகளையும் ஹஸன், அவனுடைய Whatsapp Groups களில் போட்டான். அதனால் கதைக்கான ரசிகர்கள் மேலும் மேலும் கூடின. அவர்கள் அனைவருமே அனைத்து தேசிய கல்வியற் கல்லூரிகளிலும் பயிலும் ஆசிரியப் பயிலுனர்களாவர். கதையை வாசித்த பலர், கதைக்கு சிறப்பு கொமன்ஸ்களை ஹஸனுக்கு அனுப்பினர். "கதை மிகவும் சிறப்பாக இருந்தது; கதையை வாசிக்கும் போது அழுகை வந்தது" இதுவே நிறைய பேருடைய கொமன்ட்ஸ் ஆக காணப்பட்டது. அதில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் ஆசிரியப்பயிலுனர் ஒருத்தி, "இனிமேல் உங்களுடைய சிறப்புகளையும் பெருமைகளையும் நீங்களே உங்களுடைய கதை மூலம் கூறாமல் இனி வரும் காலங்களில் உங்களுடைய வெற்றிகளையும் பெருமைகளையும் இன்னொரு நபர் ஆர்வமாக தேடி ரசித்து எழுதும் அளவுக்கு உங்களுடைய இந்தப்பயணம் வெற்றிடையனும், அதுக்கு வாழ்த்துக்கள்” என்று அவள் அனுப்பிய அந்த கொமன்ட்ஸ் ஹஸனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு முறை கல்லூரி விடுதியில், இரவு நேரத்தில் ஆசிரியப் பயிலுனர்களின் உப தலைவர் அழுது கிடந்தான். அழுது அவன் கண்கள் இரண்டும் நன்றாக சிவந்து போய் காணப்பட்டன. அதைக் கண்ட ஹஸன், அவனிடத்தில் "ஏன், என்ன நடந்தது" என்று கேட்டதற்கு, "உங்களுடைய கதையை இப்போது வாசித்தேன்; நன்றாக பீல் ஆகிசி; மிகவும் நன்றாக எழுதியிருக்குறீங்க" என்று பதிலளித்தான். ஹஸனுடைய கதையை வாசித்த பல பேர் அழுததாக கதைக்கு எத்தனையோ கொமன்ட்ஸ்கள் வந்தாலும், முதல் தடவையாக ஒரு ஆண் ஆசிரியப்பயிலுனர் அழுததை ஹஸன் நேரில் பார்த்தது இதுவே முதன் தடவையாகும். கல்லூரியின் ஆசிரியப்பயிலுனர்களின் உபதலைவரும் கூட நாஸிர் ஹஸனுடைய கதையினால் ஈர்க்கப்பட்டு, அவனுடைய ரசிகனாக மாறினான். அவனுடைய எதிர்ப்பார்ப்பும், "நாஸிர் ஹஸன் வாழ்க்கையில் பெரியதொரு சாதனையை படைக்க வேண்டும்" என்பதாகும்.
கல்லூரியில் ஆசிரியப்பயிலுனர் ஒருவர், நாஸிர் ஹஸனுடைய வாழ்க்கை கதையை முழுமையாக வாசித்து, விடுதியில், ஆசிரியப்பயிலுனர்களுக்கு மத்தியில் அக்கதையை மிகவும் அழகாக முன்வைப்பு செய்தான். கல்லூரியில் சில ஆசிரியப் பயிலுனர்கள் ஹஸனுடைய கதையை வரவேற்று அவனை ஊக்கப்படுத்தினர். "நிச்சியமாக ஒரு நாள், நாஸிர் ஹஸனுடைய வாழ்க்கை கதை உலகளாவிய ரீதியில் பிரிசித்திப் பெறும்" என்பதே அவர்களுடைய நம்பிக்கையாகவும் காணப்பட்டன. அதில் ஒருவன், ஹஸனுக்கு, கதை எழுதுவதில் மட்டுமல்லாமல், ஹஸனுடைய அனைத்து திறமைகளையும் அவன் இனங்கண்டு, அவனை மேலும் உட்சாகப்படுத்தினான். ஹஸனை பெரியதொரு வெற்றிக் கொண்டு செல்ல, ஹஸனுக்கான முழு ஆதரவையும் வழங்கினான். ஹஸனை வைத்து, மற்றவர்கள் கிண்டல் செய்யும் போதெல்லாம், அவன் ஹஸனை விட்டுக் கொடுக்காமல், ஹஸனின் திறமைகளையே எடுத்துக் கூறி மற்றவர்களுக்கு புரிய வைத்தான். ஹஸனுடைய அனைத்து முன்னேற்றத்திற்கும், அவனும் ஒரு முக்கிய காரணமாகத் திகழ்ந்தான். அத்துடன் கல்லூரியில், வழிகாட்டல்கள் ஆலோசனைகள் மற்றும் சமூகவியல் பாட விரிவுரையாளரும் கூட ஹஸனுடைய கதையை வாசித்து, "கதை சிறப்பாக இருந்தது" என்றும் "மேலும் தொடர்ச்சியாக எழுதுமாறும்" நாஸிர் ஹஸனிடம் கூறினார்.
கல்லூரியில், ஹஸன் மீது, மிகுந்த பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்த, இஸ்லாம் பாட பெண் விரிவுரையாளர், ஹஸனுடைய வாழ்க்கை கதையை வாசித்து, ஹஸனை, மிகவும் நன்றாக புரிந்து கொண்டு, ஹஸனுடைய திறமையை வரவேற்று, ஹஸனுக்கும், அவன் எழுதிய கதைக்கும் பெருமளவு ஆதரவை வழங்கினார். "ஹஸன், வாழ்வில் பெரியதொரு சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஹஸன், அவர்களிடம் கூற, ஹஸனுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்ததார். மிக குறுகிய காலத்தில், அவர்களின் சிறந்தவொரு மாணவராகவும், ஆசிரியப் பயிலுனராகவும் நாஸிர் ஹஸன், அவர்களின் மனதில் இடம் பிடித்தான். "நாஸிர் ஹஸன் எழுதும், வாழ்க்கை கதையில், நானும் இடம் பெற வேண்டும்" என்று அவர் ஆசைப்பட்டார். "நான் எழுதுகின்ற என்னுடைய உண்மையான வாழ்க்கை கதையில், மற்றவர்கள், கதையில் வரும் என்ற பயத்தில், அவர்கள் அனைவரும் என்னை விட்டு விலக, முதல் தடவையாக ஒரு பெண் விரிவுரையாளர், என்னுடைய வாழ்க்கை கதையில் இடம் பெற நினைக்கும் அளவுக்கு கதை சிறப்புப் பெற்றிருக்கின்றது" என்று, ஹஸனின் மனம் கூறியது. வாழ்க்கை கதையில் மட்டுமல்லாமல், ஹஸனுடைய மனதில், இஸ்லாம் பாட பெண் விரிவுரையாளர், நீங்காத இடம் பிடித்தார்.
ஹஸன் கவலையில், "தனிமையை சிறந்தது, சிறந்த நண்பர் இல்லை" என்றெல்லாம் ஸ்டேடஸ் போட்ட போது, அவர்கள், ஹஸனுக்கு, தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு, "வாழ்க்கையில் யார் பேசாமல் போனாலும், முழு கல்லூரியுமே உங்களை வெறுத்து ஒதுக்கினாலும், விமர்சனத்தை எதையுமே கணக்கெடுக்காமல் அதையெதுமே கணக்கெடுக்காமல் உங்களுடைய கனவை நோக்கி பயணிக்க வேண்டும், அனைவருக்கும் நீங்கள் யாரென்று அடையாளப்படுத்த வேண்டும், அப்போது எத்தனையோ பேருக்கு உங்களை பிடிக்கும், சாதனைப் படைக்க துடிக்கும் உங்களிடம் ஒரு வேதனைகள் என்றுமே இருக்க கூடாது, என்று அவனை ஆறுதல் படுத்தியது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் வெற்றிக்காக ஹஸனை ஊக்கப்படுத்தினார் அவர் கூறிய பல அறிவுரைகளை வாழ்வில் எடுத்து, அதன் படியே ஹஸன் செயற்பட்டான். வகுப்பிலுள்ள அனைத்து ஆசிரியப் பயிலுனர்களுக்கும் கதையை கட்டாயம் வாசிக்கும் படி கூறினார். "மற்றவர்கள் வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்கவே வேண்டும்" என்று கூறினார். நாஸிர் ஹஸனுடைய வாழ்க்கை கதையினை, ஒருவர் இன்னொருவருக்கு வாசிக்குமாறு கூறும் அளவுக்கு, கதை சிறப்புப் பெற்றது.
நாஸிர் ஹஸனுடைய கல்லூரி வாழ்க்கையில் 2nd Block Teaching குரிய நாளும் நெருங்கியது. "இம்முறை சற்று தூரத்திலுள்ள எங்கயாவது பாடசாலை ஒன்று தான் கிடைக்கும்" என்று ஹஸன் நினைத்தான். அது போலவே கல்முனையிலே ஒரு பாடசாலை கிடைத்தது. கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலயத்திற்கு ஹஸன், முதலாவதாக Unit Collection இற்கு சென்றான். பாடத்தை கற்பித்து கொடுப்பதற்காக வழக்கம் போல தரம் 6,8,9,10 ஆம் வகுப்புக்களை கேட்டு, பாடநேர அட்டவனையையும் ஹஸன் பெற்றுக் கொண்டான். அதற்கு பிறகு கற்பித்து கொடுப்பதற்கு ஏற்ற வகையில் Lesson மற்றும் Scheme ஐ எழுதினான்.
இரண்டு வார Block Teaching க்கான முதல் நாள் வந்தது. பாடத்தை கற்பித்து கொடுக்க, கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலத்திற்கு சென்றான். அப் பாடசாலை குறைந்த மாணவர்கள் தொகையை கொண்ட ஒரு பாடசாலையாக காணப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளிலும் மாணவர்கள் சராசரி இருபது பேர் தான். அதனால், அனைவருக்குமே மிக இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் ஹஸனால் கற்பித்துக் கொடுக்க முடிந்தது. "1 year Intenship இற்கு இந்த பாடசாலைக்கே வாருங்கள்; பாடசாலையிலே விடுதி ஏற்பாடுகளும் இருக்கின்றது" என்று மாணவர்கள் பலர் ஹஸனிடம் கேட்டுக் கொண்டனர்.
2nd Block Teaching நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில், பொலன்னறுவையிலுள்ள புலஸ்திபுர தேசிய கல்வியற் கல்லூரியில் இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் இறுதி நாளில், இலங்கையிலுள்ள அனைத்து தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கும் இடையிலான 100m × 4, 200m × 4 மற்றும் 400m ×4 அஞ்சல் ஓட்டப்பட் போட்டிகள் நடைபெற இருந்தது. அதற்கான போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கு, அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி போட்டிகள் 2 இலும் நாஸிர் ஹஸன், முதலாவதும், இரண்டாவதும் வந்து, போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டான்.
"இப்படி ஒரு ஓட்டப் போட்டியொன்றிற்கு சென்று, அதில் வெற்றி பெற்று, தன்னால் அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு பெருமை சேர்த்து கொடுக்க வேண்டும்" என்பது நாஸிர் ஹஸனின் நீண்ட நாள் ஒரு கனவாகவே காணப்பட்டது. 'தன்னால் முடியும்' என்று ஹஸனுடைய தன்னம்பிக்கை கூறியது. "இலங்கையிலுள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியப் பயிலுனர்களும், நாஸிர் ஹஸனை அடையாளம் காணப்போகின்றார்கள்" என்று ஆசிரியப்பயிலுனர்கள் நாஸிர் ஹஸனிடம் கூறினார்கள். பெரும் கனவுகளுடனும், நம்பிக்கையுடனும் 19 தேசிய கல்வியற் கல்லூரிகளுக்குமிடையிலான ஓட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாஸிர் ஹஸன், பொலன்னறுவை புலஸ்திபுர தேசிய கல்வியற் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டான்.
பொலன்னறுவை தேசிய கல்வியற் கல்லூரியில் இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நாளில் மழை குறுக்கிட்டது. அந்த கல்லூரியினுடைய இல்லங்களிற்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் மழையிலே நடைபெற்றது. கல்லூரிகளிற்கிடையிலான போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, அட்டாளைச்சேனையுடன் மட்டக்களப்பு, மகாவலி தேசிய கல்லூரி ஆசிரியப் பயிலுனர்கள் மாத்திரமே வருகை தந்தனர். மற்றைய தேசிய கல்வியற் கல்லூரிகளிலிருந்து யாருமே சமூகமளிக்கவில்லை. கல்லூரிகளிற்கு இடையிலான நடைபெற்ற 100m × 4 அஞ்சல் ஓட்டப் போட்டியில் ஹஸன் பங்குபறவில்லை. மற்றைய 200m × 4 மற்றும் 400m × 4 இல் பங்குபற்ற நினைத்தான். ஆனால் மழைக்காரணமாகவும், நேரம் போதாமையினாலும் 100m × 4 அஞ்சல் ஓட்டப்போட்டி மாத்திரமே நடைபெற்றது. அதில் அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரி 3 ஆவது இடத்தை பிடித்தது. அங்கு சென்றதில் நாஸிர் ஹஸன் போட்டியில் பங்குபற்றவில்லை என்றாலும், 2 ஆவது Block Teaching Block Teaching இடையில் பொலன்னறுவைக்கு சென்ற அந்த சுற்றுப் பயணம், ஹஸனுடைய வாழ்வில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த நாள் ஹஸன், Block Teaching இற்கு கல்முனை இஸ்லாமாபாத் பாடசாலைக்கு சென்றான். பொலன்னறுவைக்கு சென்று வந்த சோர்வினால், பாடசாலைக்கு சென்றதும் அவனுக்கு நித்திரை மயக்கம். அந்த நேரம் பார்த்து, ஹஸனை மேற்பார்வை செய்வதற்கு விரிவுரையாளர், பாடசாலைக்கு சமூகமளித்தார். ஹஸன் தரம் 6 இற்கு இஸ்லாம் பாடத்தை கற்பித்துக் கொடுக்கச் சென்றான். "ஆதம் (அலை) அவர்கள்" என்ற பாடத்தை மிக விரைவாக கற்பித்து முடித்தான். விரிவுரையாளர் ஹஸனிடம் 'நீங்கள் பாடத்தை கற்பித்த நேரம் ஐந்து நிமிடம் தான், மற்றைய நேரம் சாராம்சமும் மதிப்பீடும் தான் நடந்தது, கூடுதலான நேரம் சும்மா தான் இருந்தீங்க, என்ன இப்படி படித்து கொடுத்தீங்க" என்று கேட்டார். அதற்கு ஹஸன், நேற்று பொலன்னறுவைக்கு சென்று வந்த சோர்வு தான்" என்று கூறினான். "இன்னொரு தடவை மேற்பார்வை செய்ய வேண்டும்" என்று அவர் ஹஸனிடம் கூறி விட்டுச் சென்றார். 1st Block teaching எந்தளவுக்கு ஹஸனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோ, அது போல 2nd Block teaching அவனுக்கு அமையவில்லை.
"எத்தனையோ ஆயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய என்னிடம் போய், என்ன இப்படி படித்து கொடுத்தீங்க" என்று விரிவுரையாளர் ஹஸனிடம் கேட்டதை, ஒரு பெரியதொரு அவமானமாகவே நாஸிர் ஹஸன் கருதினான். அன்று 2nd Block teaching இனுடைய கடைசி நாள். இரண்டாவது தடவையாக ஹஸனை மேற்பார்வை செய்வதற்கு, விரிவுரையாளர் பாடசாலைக்கு சமூகமளித்தார். ஹஸன் தரம் 10 ஆம் வகுப்பிற்கு சென்று, இஸ்லாம் பாடத்தில் "வியாபாரம்" என்ற பாட அலகினை மிகவும் சுவாரஷ்யமாக நன்றாக மாணவர்களுக்கு கற்பித்தான். கொஞ்சம் கூட நிறுத்தாமல் பாடம் முடியும் வரை மாணவர்களுக்கு நன்றாக விளங்கப் படுத்தினான். மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பாடத்தை கற்று நன்றாக விளங்கிக் கொண்டனர். விரிவுரையாளர் ஹஸனுடைய பாடக் குறிப்பு புத்தகத்தில் மேற்பார்வை குறிப்பை எழுதி விட்டுச் சென்றார்.
பெரியதொரு நம்பிக்கையுடன் ஹஸன் பாடக்குறிப்பு புத்தகத்தை கையில் எடுத்து, என்ன எழுதியிருக்கிறார் என்பதை பார்த்தான். "வேலைத்திட்டம் பாடக்குறிப்பு என்பன எழுதப்பட்டுள்ளது; கற்பித்தல் வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபாடு காட்டினர்; ஆசிரியர் மாணவர் தொடர்பாடல் சிறப்பு; கற்றல் பேறுகள் சாத்தியமானதாகவும் கட்டியெழுப்பத்தக்கதாகவும் காணப்பட்டன;" இவ்வாறெல்லாம் மேற்பார்வையாளர் குறிப்பு சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்தவுடன் ஹஸனுக்கு அப்படியொரு சந்தோஷம். அனைத்து மாணவர்களுக்கும் ஹஸன் நன்றியை தெரிவித்தான்.
"இந்த பாடசாலையையே Intenship இற்கு கேட்டு எடுங்கள்" என்று அப் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஹஸனிடம் கேட்டுக் கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் அதிபர் ஹஸனிடம், "இந்த பாடசாலைக்கு வர விருப்பம் இருந்தால் தனக்கு கூறுமாறும், அதற்கு பொறுப்பான விரிவுரையாளரிடம் பேசுவதாகும்" என்று கூறினார். இன்ஷா அல்லாஹ் என்று கூறி அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் ஹஸன் நன்றியை தெரிவித்து, பாடசாலையிலிருந்து விடை பெற்றான். அத்துடன் 2nd Block teaching உம் முடிவடைந்தது. நாஸிர் ஹஸனுடைய கல்லூரி வாழ்க்கையில் 2nd Block teaching இனுடைய அந்த கடைசி நாள், ஹஸனுக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய நாளாக அமைந்தது.
தொடர்ச்சியாக பெய்து வந்த, அடைமழை காரணமாக பல இடங்களில் பெரும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டன. அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு வெளியிலுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு அரங்கு கூட சம்பூர்ணமாக வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மைதானமும் வெள்ளத்தினால் சற்று மூழ்கியது. அப்போது தான் ஹஸன், முதன் முதலாக கெமராவிற்கு முன்னால் நின்று வெள்ளம் அனர்த்தம் தொடர்பான கருத்துக்களை கூறி பேசினான். அவன் பேசிய வீடியோவும் கூட பலரால் செயார் செய்யப்பட்டன.
அடுத்த நாள், ஹஸன், ஆசிரியப் பயிலுனர்கள் மூவரை அழைத்துக் கொண்டு மைதானத்திற்கு அருகில் சென்றான். அங்கே ஹஸன் கதிரையொன்றில் அமர்ந்திருக்க, ஆசிரியப்பயிலுனர் ஒருவன், பூவொன்றை ஹஸனின் அருகில் விழ வைத்தான். "அதை கையில் எடுத்து அதனை ஆழமாக பார்த்து , பின்னர், பூவை தூக்கி எறிந்து விட்டு செல்ல வேண்டும்" என்று ஆசிரியப்பயிலுனர் ஒருவன் ஹஸனுக்கு கூறினான். பூவை பார்த்தாலே பெரும்பாலும் சிலருக்கு கவிதை வரும். அந்த சமயம் ஹஸன், தன்னுடைய கவித் திறமையை அனைவருக்கும் வெளிக்காட்ட நினைத்தான். தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில், பொய்யான நட்பையும் பாசத்தையும் காட்டி, ஏமாற்றி விட்டுச் சென்ற தோழிக்கு எழுதிய தோழியின் நடத்தை மாற்றம் குறித்த அக்கவிதையை ஹஸன் அவ்விடத்தில் கூறினான். அதனை மற்ற ஆசிரியப்பயிலுனர் மிகவும் அழகாக வீடியோ எடுத்தான். அந்த வீடியோவை ஹஸன் அழகாக எடிடிங் செய்து, அதனை அவன் அவனுடைய அனைத்து வட்சப் குரூப்களிலும் போட்டான்.
அக் கவிதை வீடியோவிற்கு, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி உட்பட மற்றைய தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியப்பயிலுனர்களிடமிருந்தும் பெருமளவு வரவேற்பொன்று நாஸிர் ஹஸனுக்கு கிடைக்கப் பெற்றன. 'இதற்கே இப்படி என்றால், தன்னுடைய நிஜ வாழ்க்கை கதையை படமாக எடுத்தால், எப்படி இருக்கும்" என்று ஹஸன் சற்று சிந்தித்தான். தன்னுடைய கதையை வாசிக்கின்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்ப்பதற்காக ஹஸன் இதனை சிறப்பாக செய்ய திட்டமிட்டான். அது மட்டுமல்லாமல் நாஸிர் ஹஸன், கல்லூரிக்கு சென்ற ஆரம்பத்தில், வகுப்புக்கு வந்த விரிவுரையாளர்கள், முதல் நாளே ஒருவரை மற்றொருவர் அறிமுகப்படுத்துமாறு கூறிய போது, 'Actor, Director, Writter, Artist' என்றே நாஸிர் ஹஸன், அவனை அறிமுகப்படுத்த வைத்தான். ஆனால் அவன் வாழ்வில் எந்த மேடையிலும் ஏறி நடித்ததில்லை. அவையனைத்துமே அவனுடைய கனவுகளாகவே காணப்பட்டன. பிறகு அவன் முடிவு செய்தான், "3 வருட கல்லூரி வாழ்க்கை முடிவடைவதற்குள் 'Actor, Director, Writter, Artist' போன்ற அனைத்துக் கனவுகளை நனவாக்கி விட்டு தான் இங்கிருந்து வெளியாக வேண்டும்" என்று.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக உண்மையான நிகழ்ச்சிகளையும், சம்பவங்களையும், கதைகளையும் வைத்து, உண்மையான கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாக்கப்படும் முதல் உண்மையான திரைப்படமாக 'Nasir Hasan 100% Real Life Story' என்ற கதையை மையப்படுத்தி, 'Turning Point' என்ற பெயரில் திரைப்படமொன்றை அவன் இயக்கி, அதில் அவன் ஹீரோவாக நடித்து, அதனை வெளியிட நாஸிர் ஹஸன் திட்டமிட்டான். இத்திரைப்படம் வெளியானால் அது ஒரு பெரிய சாதனை என்று ஹஸனின் மனம் கூறியது. கல்லூரியில் அவனை சுற்றி கலைத்துறையில் ஆர்வமுள்ள ஆசிரியப்பயிலுனர்கள் சிலர் காணப்பட, அவர்களை இணைத்து படத்தை எடுக்க தொடங்கினான். ஹஸனுடைய செயற்பாடுகளை வைத்து அவனை ஜோக்கராக கணக்கெடுத்து சிரிப்பவர்கள் பலர் இருக்க, அவன் இல்லாத இடத்தில் அவனை இழிவுப் படுத்தி பேசும் கூட்டமும் ஒரு புறம் இருக்க, அவை அனைத்தையும் அவன் நன்கு அறிந்திருந்தும் கூட, அதையெதையுமே அவன் கணக்கெடுக்காமல் தன்னுடைய கனவுகள் மீது நம்பிக்கை வைத்து, அனைத்தும் நனவாக்க முயற்சித்தான்.
ஒரு சில மாதங்களில், 3rd Block Teaching உம் வந்தது. சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் பாடசாலைக்கு நாஸிர் ஹஸன் Unit Collection இற்கு சென்றான். பாடத்தை கற்பித்து கொடுப்பதற்காக வழக்கம் போல தரம் 7,8,9,10 ஆம் வகுப்புக்களை கேட்டு, பாடநேர அட்டவனையையும் ஹஸன் பெற்றுக் கொண்டான். அதற்கு பிறகு கற்பித்து கொடுப்பதற்கு ஏற்ற வகையில் Lesson மற்றும் Scheme ஐ எழுதினான். தமிழ் பாட சிரேஷ்ட விரிவுரையாளரே மேற்பார்வை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இரண்டு வார Block Teaching க்கான முதல் நாள் வந்தது. பாடத்தை கற்பித்து கொடுக்க, அல் மர்ஜான் மகளிர் பாடசாலைக்கு சென்றான். தரம் 9 வகுப்பு மாணவர்களுக்கு, இஸ்லாம் பாடத்தில் 'மறுமைநாள்' என்ற பாடத்தை கற்க இருந்த சமயம், ஹஸனை மேற்பார்வை செய்வதற்கு, தமிழ் பாட சிரேஷ்ட விரிவுரையாளர் பாடசாலைக்கு சமூகமளித்தார். தரம் 9 வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்தை கற்பித்தான். பாடம் முடிவடைந்ததற்கு பிறகு, விரிவுரையாளர், ஹஸனிடம், மாணவர்களுக்கு நடைமுறை சாத்தியமான உதாரணங்களை வைத்து, கற்பித்தல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர், ஹஸனின் கற்பித்தல் செயற்பாடுகளிலுள்ள சில பலவீனங்களையும் எடுத்துக் கூறினார். அவ்வனைத்தையும் சரி செய்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஹஸனிடம் கூறி விட்டுச் சென்றார். அது போலவே ஹஸன் கற்பித்தலை மேற்கொண்டான்.
ஒரு முறைத் தான் விரிவுரையாளர் ஹஸனை மேற்பார்வை செய்ய வந்தார். ஹஸன் ஒவ்வொரு நாளும் அவரை எதிர்ப்பார்த்து காத்திருந்தான். அனால் அவர் வரவில்லை, விசாரித்துப் பார்க்கையில் தான் அவனுக்கு தெரிந்தது. "அவர் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது விபத்துக்குள்ளாகினார்" என்று. அதை கேள்விப் பட்ட ஹஸனுக்கும் சற்று கஷ்டமாகியது. அவரைப் பார்ப்பதற்கு ஹஸன், வகுப்பிலுள்ள ஆசிரியப்பயிலுனர்களுடன் அவரின் வீட்டிற்கு சென்றான். "நான், நாளை பாடசாலைக்கு சென்று 9 ஆம் வகுப்பிற்கு கற்பிக்க இருக்கின்ற பாடம் "கழாகத்ர்" என்ற பாடம்; நீங்கள் என்னை பார்க்க வர வேண்டும் நான் எதிர்பார்த்தேன்; ஆனால் நான் உங்களை பார்க்க வரும் நிலைமை உருவாகியது; இதுவே கழாகத்ர் இற்கு நடைமுறை சாத்தியமான சிறந்த உதாரணம் என்றும் இந்த உதாரணத்தை காட்டி தான் நான் நாளை மாணவர்களுக்கு, பாடத்தை கற்பிக்க நினைத்துள்ளேன்" என்று ஹஸன் விரிவுரையாளரிடம் கூறினான். அதைக் கேட்ட விரிவுரையாளர் சற்று புன்னகைத்தார்.
அடுத்த நாள் ஹஸன், பாடசாலைக்கு சென்று மாணவர்கள் அனைவருக்கும் பாடத்தை மிகவும் நன்றாக படித்துக் கொடுத்தான். பாடசாலை மாணவர்கள் நிறைய பேருக்கு ஹஸனுடைய கற்பித்தல் மிகவும் பிடித்திருந்தது. 'இந்த பாடசாலையையே Intenship இற்கு கேட்டு, இங்கு வாருங்கள்' என்று பல மாணவர்கள் ஹஸனிடம் கேட்டுக் கொண்டனர். அனைத்து மாணவர்களுக்கும் ஹஸன் நன்றியை தெரிவித்து, பாடசாலையிலிருந்து விடை பெற்றான். அத்துடன் 3rd Block teaching உம் முடிவடைந்தது.
கல்லூரியில் பீடாதிபதி அவர்களுடைய ஓய்வை முன்னிட்டு, இடம் பெற்ற பிரியாவிடை நிகழ்வில், நாஸிர் ஹஸன் அவர்களுக்காக, பாடல் வரிகளை எழுதி, தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாடலொன்றை உருவாக்கினான். பீடாதிபதி அவர்களை வீடியோ எடுத்து, அழகாக வீடியோஸ்களை எடிட் செய்து, வீடியோ பாலொன்றை உருவாக்கினான். கல்லூரியில் விரிவுரையாளர் ஒருவர், நாஸிர் ஹஸனை மேடைக்கு அழைத்துச் சென்று, அந்த வீடியோ பாடலை அந்நிகழ்வில் போட்டுக் காட்டி, அனைவருக்கும் முன்னிலையில் நாஸிர் ஹஸனை பாராட்டினார். இதுவே நாஸிர் ஹஸனுடைய வாழ்வில், அவன் பெற்ற முதல் பாராட்டாகவும், ஒரு சாதனையாகவும் திகழ்ந்தது. அப் பாடல் அனைவருக்கும் மத்தியில் பெரியதொரு வரவேற்பை பெற்றது.
"போலியான நட்பை காட்டி ஏமாற்றி விட்டுச் சென்ற வகுப்பு தோழிக்கு, தான் யார் என்று காட்ட வேண்டும்" என்றும், ‘இப்படிப்பட்ட ஒருவனின் நட்பை தான் இழந்து விட்டோம்" என்று, அவளை, நினைக்க வைக்கும் அளவுக்கு, முன்னேறிக் காட்ட வேண்டும்" என்று, நினைத்த நாஸிர் ஹஸன் கல்லூரியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபற்றி, தன்னிடமுள்ள அனைத்து திறமைகளையும் வெளிக்காட்டினான். தமிழ், சிங்கள மொழிகளில் பேச்சுக்களை பேசினான். கல்லூரியில் பசுமைத்திட்டத்தை தவிர வேறு எதற்கும் முன்செல்லாமல் இருந்த நாஸிர் ஹஸன், கல்லூரியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபற்றி, தன்னிடமுள்ள அனைத்து திறமைகளையும் வெளிக்காட்டி, கல்விச் செயற்பாடுகள் அனைத்திலும் முன்னேறிச் சென்றான். தன்னிடமுள்ள அனைத்து ஆளுமைகளையும் வெளிக்காட்டினான்.
கல்லூரியில் நிகழ்வுகளில், மூன்று மொழிகளிலும் பேச்சுக்களை பேசினான். ஜூனியர் ஆசிரியப்பயிலுனர்களை அழைத்து, நிகழ்ச்சிகளை நடாத்தி, வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கினான். மேலும், நாஸிர் ஹஸன், உலகத்திற்கு அவன் கூற முற்பட்ட ஒவ்வொரு ஒவ்வொரு கருத்துக்களையும், சமூகவலையத்தினூடாக முன்வைத்தான். மேலும் படிப்படியாக வளர்ச்சியடைந்து, கல்வி, வியாபாரம், உணவு, விவசாயம், சுற்றாடல், விளையாட்டு, தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் நாஸிர் ஹஸன், மேலும் மேலும் முன்னேற்றம் கண்டு, அனைத்திலும் தேர்ச்சி பெற்றான். அனைத்து துறையிலும் பெரியதொரு சாதனையொன்றை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்றும் நினைத்தான்.
'Nasirhasannetwork' என்ற பெயரில் வலையத்தளமொன்றை உருவாக்கி, கல்வி தகவல்களை வழங்கினான். தமிழ் உட்பட சிங்களம், ஆங்கிலம் மொழிகளிலும் கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கினான். அத்துடன், Nasirhasannetwork என்ற பெயரில் Whatsapp Group, Facebook Page, Youtube Chanel என்பவற்றை அவன் உருவாக்கினான். தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான அனைத்து வழிகாட்டல்களையும் தமிழில் மட்டுமல்லாமல் சிங்களத்திலும் வழங்கினான். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கூகுலிற்கு சென்று தேடிப்பார்த்தால், உடனே வருமளவுக்கு, அவனுடைய வலையத்தளமும் பிரசித்தி பெற்றன.
உளவியல் பாட விரிவுரையாளர், மற்றைய வகுப்புக்களில் பாடம் கற்றுக் கொடுக்கும் போது, ஒவ்வொரு பாடத்திலும் நாஸிர் ஹஸனை முன்னுதாரனமாக காட்டும் அளவுக்கு நாஸிர் ஹஸன் முன்னேறினான். கல்லூரியில் பசுமைத் திட்டத்திற்கு தலைவராக இருந்த நாஸிர் ஹஸன், கல்லூரி விடுதி மற்றும் சுற்றாடலுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு, அதற்கு பிறகு திண்ம கழிவு முகாமைத்துவத்திற்கும் அவனே தலைவராக செய்யப்பட்டான். அவனுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவப் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்றினான். சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில், 'சுற்றாடல் முன்னோடி' என்ற சின்னத்தை கல்லூரியின் கல்லூரியின் புதிய பீடாதிபதியிடமிருந்து நாஸிர் ஹஸன் பெற்றுக் கொண்டான்.
கல்வி மற்றும் தொழில் நுட்ப ரீதியான நாஸிர் ஹஸனுடைய உதவிகள் கூட, கல்லூரியிலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு தேவைப்பட்டன. அனைத்து துறைகளிலும் அவனுடைய திறமைகளை வெளிக்காட்ட, விரிவுரையாளர்கள் அனைவரினதும் ஆதரவுகள் அவனுக்கு கிடைக்கப்பெற்றன. இறுதியாக, கல்லூரியிலுள்ள அனைத்து விரிவுரையாளர்களுக்கும் மத்தியில் அவன் வரவேற்கத்தக்கவனாக மாறினான்.
அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரியின், 'பாடசாலையும் சமூகமும் நிகழ்ச்சித்திட்டம் மருதமுனை அல் மதீனா வித்தியாலத்திலும், அஷ்ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் நடைபெற்றது. ஆசிரியப்பயிலுனர்கள் இரு குழுக்களாக பிரிந்து, அவ்விரு பாடசாலைகளுக்கும் சென்றனர். 3 நாட்கள் பாடசாலையில் தங்கி, ஆசிரியப் பயிலுனர்களுடன் சேர்ந்து, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏற்ப பாடசாலை சூழலை தயார்ப்படுத்தும் செயற்பாடுகளில் நாஸிர் ஹஸன் ஈடுபட்டான். வகுப்பறை சுவரில் சுவரோவியங்கள் வரைந்து, வகுப்பறையை அழகுபடுத்தும் பணியில் அவன் மிகவும் ஈடுபட்டான். அத்துடன் அப்பாடசாலையில் மற்றைய ஆசிரியப்பயிலுனர் செய்த செயற்பாடுகளையும் ஹஸன், அழகாக வீடியோ எடுத்தான். எடுத்த வீடியோஸ்களையும் அழகாக எடிட் செய்து, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'அறிவை அள்ளித் தரும் பள்ளிகூடம்' என்ற பெயரில் பாடலொன்றை உருவாக்கி, அதனை வீடியோ பாடலாக்கி, யூடியுபில் வெளியிட்டான். அப்பாடலும் ஆசிரியப் பயிலுனர் மத்தியில் சிறந்தவொரு வரவேற்பைப் பெற்றது.
இலங்கையின் 20 தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கும் இடையிலான விளையாட்டுப் போட்டி தியகம மகிந்தராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அங்கு சென்று போட்டியில் பங்குபற்றுவதற்கான ஆர்வம் ஹஸனிடம் இருக்கவில்லை. நாஸிர் ஹஸன் அதில் பங்குபெறாததை நினைத்து, கல்லூரியில் ஒரு சில ஆசிரியப் பயிலுனர்கள் கவலைப்பட்டனர். "எமது கல்லூரியில் இறுதியாக நடந்து முடிந்த, இல்ல விளையாட்டுப் போட்டியில் கூட சீனியர்ஷூடன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி 400 m ஓட்டப்போட்டியில் சம்பியனான நீங்கள், ஏன் ஒன்றுக்குமே போகவில்லை" என்று அவர்கள் ஹஸனிடம் சென்று கேட்டனர். அதற்கு ஹஸன், "விளையாட்டு போட்டிகள் பலவற்றில் பங்குபற்றி, வென்று, பல சான்றிதழ்களை பெற்றிருக்கிறேன், தற்போது என்னுடைய மனநிலை, விளையாட்டுத்துறையில் இல்லை, கலைத்துறையில் பெரியதொரு சாதனையை படைக்க வேண்டும் வெறி கொண்டு இருக்கிறது" என்று ஹஸன் அவர்களிடம் கூறினான். சில நாட்களிற்கு பிறகு ஹஸன் சற்று சிந்தித்தான். "20 தேசிய கல்வியற் கல்லூரிகளும் பங்குபற்றும் ஒரு நிகழ்வு, இந்த போட்டியில் நான் பங்குபறாமல் இருந்தால், பிறகு ஒரு நாள், இதை நினைத்து நிச்சியமாக நான் கவலைப்படுவேன்" என்று. கடைசி கட்டத்தில் ஹஸன், நீளம் பாய்தல் போட்டியில் பங்குபற்ற தன்னுடைய பெயரை கொடுத்தான். பிறகு, கல்லூரியில் விளையாட்டு அணியுடன் இணைந்து, பயிற்சி எடுத்து விட்டு, மறுநாள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியிலிருந்து, தியகம மகிந்த ராஜபகஷ விளையாட்டு அரங்கிற்கு புறப்பட்டான்.
நாஸிர் ஹஸனை நேரில் காண்பதற்கே, மற்றைய தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியப்பயிலுனர்கள் பலர் ஆர்வமாக இருந்தனர். பலர் நாஸிர் ஹஸனை தேடி வந்து பேசினார்கள். அவனை அடையாளம் தெரியாத பலர், அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியப் பயிலுனர்களிடமும் பலர் அவனைப் பற்றி விசாரித்தனர். அங்கு, நாஸிர் ஹஸன் சந்தித்த சிங்கள மொழி மூலமான கல்வியற் கல்லூரி ஆசிரியப்பயிலுனர்கள் பலர் அவனுடைய Nasirhasannetork Whatsapp Group குழுவிலுள்ளவர்களாவே காணப்பட்டனர். அவர்களுடைய ஆதரவுகளும் ஹஸனுக்கு அங்கே கிடைக்கப்பெற்றன.
20 தேசிய கல்வியற் கல்லூரிகளுக்குமிடையிலான விளையாட்டுப் போட்டி தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் ஆரம்பமானது. அங்கு அழைத்து சென்ற அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டு அணியில் பலர், ஒரிரு போட்டியிலே பங்குபற்றிவுடனே ஒவ்வொரும் 'கால், கை வருத்தம்' என்று கூறி போட்டிகளில் பங்குபற்றவில்லை. அதில் 400m ஓட்டப்போட்டிக்கு அழைத்து சென்ற இருவருமே போட்டியில் பங்குபற்றாத போது, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியிலிருந்து போட்டிக்கு யாருமில்லையென்று வரும் போது, கடைசி நேரத்தில், யாருமே எதிர்பாராத நேரத்தில் நாஸிர் ஹஸன் கலமிறங்கினான்.
ஹஸனுடன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட பலர், அவர்களுடைய கல்லூரியிலே உடற்பயிற்சி பாடநெறிக்கு தெரிவாகி, முழுமையாக விளையாட்டிற்காகவே பயிற்சி எடுத்த ஓட்டப்போட்டியாளர்களாவர். ஆனால் அவர்களை கண்டு ஹஸன் பயப்படவில்லை. தன்னால் முடியும் என்றே அவனுடைய நம்பிக்கை கூறியது. போட்டியும் ஆரம்பமானது. ஆரம்பத்திலிருந்து மிகவும் வேகமாக ஓடிய நாஸிர் ஹஸன், இடையில் களைப்புற்றான். போட்டி நிறைவில் 5 ஆவது ஆளாக வந்தான். போட்டி நிறைந்தவுடன் "ஆரம்பத்தில் சற்று மெதுவாக ஓடி, கடைசியில் வேகத்தை கூட்டி ஓடியிருந்தால் வென்றிருப்பேன்" என்று நினைத்து ஹஸன் மிகவும் கவலைப்பட்டான். நாஸிர் ஹஸனுடைய வாழ்வில், விளையாட்டுப் போட்டியொன்றில் பங்குபற்றி முதல் மூன்று இடமுமில்லாமல் போனது இதுவே முதன்முறையாகும். என்றாலும், அவனே எதிர்ப்பாராத, அப் போட்டியில் அவன் பங்குபற்றியதை நினைத்தும், அவனுக்கு மற்றைய கல்லூரி ஆசிரியப் பயிலுனர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுகளை எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.
இரண்டாவது நாள், உயரம் பாய்தல் போட்டி நடைபெற்றது. அதில் ஹஸன் பங்குபற்றினான். ஆனால் அதில் அவனுக்கு எந்தவொரு இடமும் கிடைக்கவில்லை. கடைசி நாள் மெட்லி அஞ்சலோட்டப் போட்டி நடைபெற்றது. அதற்கும், அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரிகளிலிருந்து யாருமே பங்குபெறும் நோக்கில் இருக்கவில்லை. அனைவருமே மிகவும் வருத்தம்; முடியாது என்று கூறினர். "எப்படியாவது இதில் நான் பங்குபற்ற வேண்டும்; இந்தப் போட்டியில் நம் கல்லூரிக்கு ஒரு இடம் எடுத்துக் கொடுக்க வேண்டும் " என்று நினைத்த ஹஸன், தம் கல்லூரி அணியினர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடாத்தினான். 'முயற்சி செய்வோம், கடைசியாக வந்தாலும் கூட பரவாயில்லை; போட்டியில் பங்குபறாமல் விடக் கூடாது; கல்லூரியின் மானம் முக்கியம், வெற்றி பெற முயற்சிப்போம்" என்று கூறி, அனைவரையும் உட்சாகப்படுத்தி, கடைசி நேரத்தில் அணியை தயார் செய்து மெட்லி அஞ்சலோட்டப் போட்டியில் கலந்து கொண்டான்.
மெட்லி அஞ்சல் ஓட்டப்போட்டியில் முதலில், 100m ஐ பெண்ணும், அடுத்து 200m ஐ ஆணும், அதற்கு அடுத்து 300m ஐ பெண்ணும், இறுதியில் 400m ஐ நாஸிர் ஹஸன் ஓட முடிவெடுத்தான். விளையாட்டுப் போட்டியும் ஆரம்பமானது. 300 m ஓடிய பெண், கோலை எடுத்து வந்து, ஹஸனிடம் ஒப்படைக்கும் போது, மற்றைய போட்டியாளர்கள் மைதானத்தில் பாதியே ஓடி முடித்தனர். என்றாலும் ஹஸன் மிகவும் வேகமாக ஓடி முயற்சித்து ஆறாவது இடத்தை பிடித்தான். ஹஸன் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. தன் கல்லூரி அணியினர்கள் ஒத்துழைப்பு வழங்கி, மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் போட்டியில் பங்கு பற்றியதை எண்ணி நாஸிர் ஹஸன் சந்தோஷமடைந்தான். வாழ்வில் மறக்க முடியாத சிறந்த அனுபவத்தை 20 தேசிய கல்வியற் கல்வியற் கல்லூரிகளும் பங்குபற்றிய விளையாட்டுப் போட்டியிலிருந்து பெற்றுக் கொண்டான்.
கனவுகள், ஆசைகள், எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாத யாருமே இவ்வுலகில் இல்லை. "தனக்கு வரப்போகும் வாழ்க்கை துனை, அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்" என்று நிறைய எதிர்ப்பார்ப்புக்கள் நாஸிர் ஹஸனின் மனதிலும் இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு செல்லும் போதும், மீ்ண்டும் கல்லூரிக்கு வருகை தரும் போது தனியாகவே வருவான் தனியாகவே செல்வான். கல்லூரியிலும் கூட எப்போதும் தனிமையில் தான். தனிமையை விரும்பிய அவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அத் தனிமையே அவனுக்கு வெறுத்து போனது. அவன் வழமையாக கல்லூரிக்கு செல்கின்ற கண்டி - அக்கரைப்பற்று பஸ்ஸில், பயணிப்பவர்களில் நான்கில் மூன்றே தென்கிழக்கு பல்கழைக்கழக மாணவிகள். "அதிலே யாரையாவது நல்லொரு பெண்ணை பார்த்து, பேசி, அவளுடைய விருப்பத்தை பெற்றால், இருவரும் சேர்ந்து ஒன்றாக பயணிக்கலாம்; எனக்குள் இருக்கும் தனிமையும் காணாமல் போகிடும்" என்ற ஓர் ஆசை அவன் மனதில் தோன்றின. என்றாலும் அவனுடைய மனம், அவனுடைய ஆசைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. "வேறு எந்த விடயத்தில் அவமானப்பட்டாலும் பரவாயில்லை, பெண்கள் விடயத்தில் மட்டும் இனி அவமானப்படவே கூடாது" என்று அவனுடைய மனம் கூறியது. கல்லூரியிலும் கூட அவன் யாரையுமே விரும்பவில்லை. "சரியான நேரத்தில், தான் எதிர்ப்பார்ப்பதை விடவும் சிறந்த ஒருத்தி தனக்கு வந்து சேருவாள்" என்ற நம்பிக்கையில் அவன் மனதில் தோன்றிய ஆசையும் தூக்கி எறிந்தான்.
ஒரு முறை நாஸிர் ஹஸன், விடுமுறையை கழித்து விட்டு கல்லூரிக்கு செல்வதற்கு, வழமையாக செல்லும் கண்டி- அக்கரைப்பற்று பஸ்ஸில் ஏறாமல், கட்டுநாயக்க - அக்கரைப்பற்று பஸ்ஸில் ஏறினான். ஏறினதும் அங்கே ஓர் அழகான பெண்ணை பார்த்தான். "அவள் தென்கிழக்கு பல்கழைக்கழகத்திற்கு செல்ல பஸ்ஸில் ஏறியவள்" என்பது ஹஸனுக்கு விளங்கியது. வழமையாக அவள் செல்லும் அந்த பஸ்ஸில், முழுமையாக சீட் பு(B)க்காகி இருந்த நிலையில் அவளும், அவளுடைய நண்பிகள் இருவரும் "சீட் இல்லையே" என்று கவலைப்பட்டு, என்ன செய்வதென்று யோசித்தாள். அந்த சமயம் ஹஸன், "நானும் அட்டாளைச்சேனை கல்லூரிக்கு தான் போகிறேன்; பிரதான பஸ் நிலையத்திற்கு சென்று, கல்முனை பஸ்ஸில் ஏறினால்; காரைதீவில் இறங்கி, அங்கிருந்து அக்கரைப்பற்று பஸ்ஸில் ஏறி, பல்கழைக்கழத்தில் நீங்கள் இறங்கலாம், நானும் அப்படியே கல்லூரியில் இறங்குவேன்: வாங்க போகலாம்" என்று ஹஸன் அந்த பெண்ணிடமும் அவளுடைய நண்பிகள் இருவரிடத்திலும் கூறினான். "அப்படி போக முடியுமா? என்று அவள் கேட்க, "வாங்க போகலாம்" என்று கூறி பிரதான பஸ் நிலையத்திற்கு ஹஸன், அவர்களை அழைத்துச் சென்றான்.
கல்முனை பஸ்ஸில் ஏறி மிக நீண்ட நேரம் பயணிக்கும் போது ஹஸன், அந்த பெண்ணிடம், அவளுடைய ஊரையும், பெயரையும், கற்கும் பாடநெறியையும் கேட்டான். அதற்கு அவள் பெயரையும், ஊர் மாத்தளை, இஸ்லாமிய கற்கை நெறி என்பதையும் ஹஸனிடம் கூறினாள். வேறு எதையும் ஹஸன் அவளிடம் கேட்கவில்லை. மற்றைய ஆண்களை போல தொலைபேசி இலக்கத்தை கேட்கும் பழக்கம் அவனிடம் சுத்தமாக இல்லை. தென்கிழக்கு பல்கழைக்கழகமும் வந்தது, அவள் ஹஸனிடம் "போய் வருகிறேன்" என்று கூறி இறங்கினாள். ஹஸனுக்கு அந்த பெண்ணை பிடித்திருந்தது. "அதற்கு பெயர் காதல் அல்ல ஆசை" என்று ஹஸனின் மனம் கூறியது. அவன் பார்த்த, அந்த பெண், இதுவரையும் யாரையும் விரும்பாத பெண்ணாக இருந்தால், முயற்சி செய்து அவளின் விருப்பத்தை பெற்று, அவளை தன்னுடைய வாழ்க்கை துனையாக, தெரிவு செய்ய" ஹஸன் நினைத்தான். "ஆனால் அவளை மறுபடி எப்போது பார்ப்பேன்" என்று அவனுக்கு தெரியவில்லை.
ஒரு சில மாதங்களிற்கு பிறகு, ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையை கழித்து விட்டு, நாஸிர் ஹஸன், கல்லூரிக்கு வருகை தர, வழமையாக செல்லும் கண்டி - அக்கரைப்பற்று பஸ்ஸில், சீட்டை பு(B)க் பண்ணியிருந்தான். "கட்டுநாயக்க - அக்கரைப்பற்று பஸ்ஸில் ஏறினால், கொஞ்சம் அவசரமாக கல்லூரிக்கு செல்லலாம், அதில் செல்ல வாங்க" என்று கல்லூரியில் மௌலவி ஆசிரியப்பயிலுனர் ஒருவர் ஹஸனை எப்போதும் அழைப்பார். "அதில் ஜன்னல் சீட் கிடைப்பது இல்லை" என்ற காரணத்தினால் அதில் பயணிக்க ஹஸன் விரும்புவதில்லை. அன்று, அவருடைய தொந்தரவுக்கு, அந்த பஸ்ஸில் ஏறினான். ஏறியதும், அங்கே ஜன்னல் சீட்டும் இல்லை, அவனுக்கு அதில் செல்வதற்கு பிடிக்கவுமில்லை. "நீங்கள் போங்க, நான் வழக்கம் போல வருகின்ற பஸ்ஸிலே வருகிறேன்" என்று ஹஸன் அவர்களிடம் கூறி, பஸ்ஸிலிருந்து இறங்க நினைத்த போது, அன்று பார்த்த அந்த பெண், அந்த பஸ்ஸில் இருந்தது போல ஹஸனுக்கு விளங்கியது. அவன் உடனே பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி, ஜன்னல் வாயிலாக எட்டிப் பார்த்தான். "அவளே தான்" என்று ஹஸனுக்கு தெரியவந்ததுடன், அவளை இரண்டாவது தடவையாக பார்த்த ஹஸனிற்கு அப்படி ஒரு சந்தோஷம். அந்த பஸ்ஸிலே பயணிக்க ஹஸன் முடிவெடுத்து பஸ் ஏறினான்.
பஸ்ஸில் பயணிக்கும் போது, அவளுடன் பேச நினைத்தான். "சில வேலையில் அவள் என்னுடன் பேசுவதற்கு மறுத்தால், எல்லோர் முன்னிலையிலும் தான், அவமானப்பட்டது போல் ஆகிவிடும்" என்று ஹஸனுடைய மனம் கூற அவன் பேசவில்லை. அவளைப் பற்றி, அந்த பஸ்ஸில் பயணித்த, கல்லூரியில் பெண் ஆசிரியப்பயிலுனர் ஒருத்தியிடம் ஹஸன் விசாரித்தான். "அவள் மிகவும் நல்லொரு பெண்" என்று அந்த பெண் ஆசிரியப்பயிலுனர் ஹஸனிடம் கூறினாள். நாஸிர் ஹஸனுக்கு வரப்போகும் வாழ்க்கை துணையிடம், அவன் எதிர்ப்பார்த்த அழகு, குணம், படிப்பு, நல்ல குடும்பம், இதுவரை யாரையுமே விரும்பாத பெண்ணாக இருத்தல் போன்ற அனைத்துமே அவளிடம் காணப்பட, அவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவ்விடயத்தை ஹஸன் முதலில், அந்த பெண் ஆசிரியப்பயிலுனரிடமே கூறினான். அந்த நாள், ஹஸனுக்கு பஸ்ஸில் தூக்கமே வரவில்லை. அவளை சற்று தூரமாக இருந்து பார்த்து ரசித்தான். தென்கிழக்கு பல்கழைக்கழகம் வந்தவுடன் அவள் அங்கே இறங்கினாள். ஹஸனும் அப்படியே அட்டாளைச்சேனை கல்லூரியில் இறங்கினான். கல்லூரியிற்கு சென்றதிலிருந்து ஹஸனுடைய மனதில் அவளுடைய நினைவுகள். "எப்படி நான், என் மனதில் தோன்றிய ஆசையை, அவளிடம் கூறுவது" என்று ஹஸன் யோசித்தான்.
அவளைப் பற்றி விசாரித்த, அந்த கல்லூரி பெண் ஆசிரியப்பயிலுனரிடமிருந்து ஹஸனுக்கு தொலைப்பேசி அழைப்பொன்று வந்தது. "நீங்கள் ஆசைப்பட்ட பெண், அவளுடைய தாய், உங்களுக்கு Bio Data வை செய்து அனுப்புமாறு கூறினார்கள்" என்று. அதை கேட்ட ஹஸன் ஆச்சரியமடைந்து. "என்ன நடந்தது" என்று அவளிடம் கேட்டான். "கல்லூரியில் ஒருத்தருக்கு உங்களுடைய மகளை பிடிச்சிருக்கிறது, என்பதை நான் அவர்களுக்கு தெரியப்படுத்தியது மட்டும் தான்" என்று கூறினாள். "ஏன் விருப்பமில்லையா" என்று அவள் ஹஸனிடம் கேட்க, "விருப்பமல்லாமல் அல்ல" என்று கூறி, Bio Data வையும் அழகாக செய்து, கல்லூரி பெண் ஆசிரியப்பயிலுனருக்கு ஹஸன் அனுப்ப, Biodata பெண்ணினுடைய தாயை சென்றடைந்தது.
ஹஸனைப் பற்றி விசாரித்துப் பார்த்து முடிவை கூறுவதாக பெண்ணின் தாய் கூறினார். மறுநாள் ஹஸனிற்கு, கல்லூரி பெண் ஆசிரியப்பயிலுனரிடமிருந்து தொலைப் பேசி அழைப்பு வந்தது. "அவர்கள் அனைவருக்குமே விருப்பம், அம்மாவிற்கும் அப்பாவிற்கும் விருப்பம் என்றால் பெண்ணிற்கும் விருப்பம், கல்யாணத்தை பேசி வைப்போமா?" என்று பெண்ணிணுடைய தாய் கேட்கிறார்கள்" என்று அவர்கள் கூறியதாக, கல்லூரி பெண் ஆசிரியப்பயிலுனர் ஹஸனிடம் கூறினாள். "இப்படி சீக்கிரம் இது சரிவரும் என்று நானும் நினைக்கவில்லை" என்று மேலும் அவள் ஹஸனிடம் கூறினாள். அந்த விடயத்தை கேட்டவுடன், ஹஸனிற்கு, அந்த சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே வார்த்தை வரவில்லை. ஆசைப்பட்ட பெண்ணை பேசித்தந்த, கல்லூரி பெண் ஆசிரியப்பயிலுனரிற்கு "ஜஸாகுமுல்லாஹுஹைர்" என்று கூறுனான்.
அதற்கு பிறகு, பெண் ஆசிரியப்பயிலுனர் நாஸிர் ஹஸனிடம் "ஏமாற்றிவிட மாட்டீர்களே" என்று கேட்டாள். "நான் வாழ்க்கையிலே இதுவரைக்குமே யாரையுமே ஏமாற்றியது இல்லை, அந்த பழக்கமே என்னிடம் இல்லை, அப்படி பட்ட என்னிடம் நீங்கள் இப்படி கேட்டீர்களே" என்று அவளிடம் கூறி, அந்த நிமிடமே அவன் முடிவு செய்கிறான் "நான் ஆசைப்பட்ட அந்த பெண் தான் என்னுடைய "Life Partner" என்று. அதற்கு பிறகு அந்த ஆசிரியப்பயிலுனர், ஹஸனிடம் "அந்த பெண்ணினுடைய தொலைபேசி இலக்கத்தை வாங்கி தரவா ? பேசுவதற்கு" என்று கேட்டாள். அதற்கு ஹஸன் "வேண்டாம், நான் கல்லூரியில் இருந்து கொண்டு, படிப்பை தவிற, ஓய்வே இல்லாமல் நிறைய வேலை செய்கிறேன்; படிக்க வேண்டும்; Final Exam கும் இன்னும் இரண்டு மாதம் தான் இருக்கிறது; அதற்கு பிறகு பார்ப்போம்" என்று அவளிடம் கூறினான்.
"பெண்ணினுடைய தாய் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி, அவர்களுடன் உங்களுடைய தாயிற்கு பேசுமாறு கூறியிருக்கிறார்;உங்களுடைய தாய் கல்யாணம் குறித்து அவர்களுடன் பேசுவார்களா?" என்று பெண் ஆசிரியப் பயிலுனர் ஹஸனிடம் கேட்டாள். அதற்கு ஹஸன், "பேசுவார்கள்" என்று கூற, பெண்ணின் தாயினுடைய தொலைபேசி இலக்கத்தையும் அவள் ஹஸனிற்கு அனுப்பினாள்.
அவ்விடயத்தை ஹஸன், தன் தாயிடம் கூறினான். ஹஸனுடைய தாயும் அதற்கு சம்மதித்து, பெண்ணின் தாயுடன் தொலைபேசியில் பேசினாள். "தன்னுடைய குடும்ப சூழ்நிலையையும், சொந்தமாக வீடு வாசல், வசதிகள் எதுவுமில்லை" என்ற முக்கியமான விடயத்தையும் ஹஸனுடைய தாய், பெண்ணின் தாயிடம் கூறினாள். அதற்கு அவர்கள், "எங்களுக்கும் அப்படி பெரிதாக வசதியொன்றுமில்லை; மகள்மார் 2 பேர் உள்ளனர்; இருவரையும் மிகவும் நன்றாக வளர்த்திருக்கிறேன், வசதி வாய்ப்பு அது எதுவுமே முக்கியமில்லை, உங்களுடைய மகனை பற்றி விசாரித்ததில் மிகவும் நல்லம் என்றார்கள்" என்று ஹஸனுடைய தாயிடம் கூறினார்கள்.
"மகளுக்கு பேசி வருகின்ற கல்யாண சம்பதங்கள் தூரத்திலிருந்தே வருகின்றது; என் மகளை தூரத்தில் கட்டிக் கொடுப்பதற்கு என்னுடைய தந்தைக்கு விருப்பமில்லை, என் தந்தையின் முடிவின் படி தான் அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்; அவரிடம் இதைப் பற்றி பேச வேண்டும்" என்றெல்லாம் அவர்கள் கூறி விட்டு, "தெல்தோட்டை தூரமா?" என்று ஹஸனுடைய தாயிடம் கேட்டாள். அதற்கு அவள், "கண்டியிலிருந்து தெல்தோட்டைக்கு செல்வதற்கு ஒன்றரை மணித்தியாளங்கள்" என்று அவர்களிடம் கூறினாள். அதற்கு பிறகு பெண்ணுடைய தாய் "மகள் சனிக்கிழமை பல்கழைக்கழத்திலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் அவளிடமும் விடயத்தையும் கூறி, என் தந்தை வந்ததவுடன் அவரிடமும் முடிவை கேட்டு சொல்கிறேன்; கல்லூரியிருந்து மகனை வரவழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், வரவழைக்க முடியுமா? பேசி வைப்பதற்கு" என்றெல்லாம் ஹஸனுடைய தாயிடம் கூறினார்கள். ஹஸனுடைய தாயும் "முடியும் என்று கூறினாள்.
ஹஸனுடைய தாய், பெண்ணின் தாயுடன் தொலைபேசியில் பேசியதற்கு பிறகு, மறுநாள் ஹஸனும் அவர்களுடன் பேச நினைத்தான். மரியாதைக்காக 'மாமி' என்றே பேசினான். "என்னுடைய தாய், எங்களைப் பற்றி அனைத்தையும் கூறியிருக்க மாட்டாள்" என்று அவர்களிடம் கூறி, ஆரம்பம் முதல் இன்று வரையுள்ள தன்னுடைய உண்மையான வாழ்க்கை கதையை முழுமையாக ஹஸன், அவர்களிடம் கூறினாள். அதற்கு அவர்கள், "வீடு வாசல், வசதி வாய்ப்பு, சொத்து எதுவுமே முக்கியமில்லை; உங்களைப் பற்றி விசாரித்ததில் பெண் ஆசிரியப்பயிலுனரும் கூட மிகவும் நல்லம் என்றே சொன்னாள்; மகளும், தந்தையும் வீட்டுக்கு வந்ததவுடன் அனைவரிடமும் கேட்டு முடிவை சொல்கிறேன்" என்றெல்லாம் அவர்கள் ஹஸனிடம் கூறினார்கள். "தான் ஆசைப்பட்ட விடயம் நடக்கும்" என்று ஹஸன் மிகவும் நம்பிக்கை கொண்டான். "அழகான Story Line ஒன்று போய்க்கொண்டிருக்கிறது, அது Success இல் முடிய வேண்டும்" என்று ஹஸன் நினைத்தான்.
அன்று சனிக்கிழமை, பெரும் எதிர்ப்பார்ப்புடன் விடுமுறையில் ஹஸன் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு புறப்பட்டான். பெண்ணின் தாயினுடைய தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தான். திங்கட் கிழமை இரவு அவர்களிடமிருந்து, ஹஸனின் தாயிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. "ஒன்றும் நினைக்க வேண்டாம்; இருமகள்களையும் மிக அருகில் எங்கயாவது கட்டி கொடுக்குமாறே என் தந்தை கூறுகிறார்; தெல்தோட்டை தூரம்; மிக தூரம் என்பதினால் இந்த விடயம் நடக்காது" என்று அந்த பெண்ணின் தாய் ஹஸனின் தாயிடம் கூறினாள். அதைக் கேட்ட ஹஸனிற்கு மிகவும் கஷ்டமாகியது. "ஆசைப்பட்டது நடக்கவில்லை" என்று நினைத்து ஹஸன் மிகவும் கவலைப்பட்டான். பெரியதொரு எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்து, கடைசியில் ஹஸன் ஏமாற்றமடைந்தான். ஹஸனின் தாய் ஹஸனிடம் வந்து, "கவலையா, இதை விட நல்லொரு பெண் உங்களுக்கு கிடைக்கும்" என்று ஹஸனுக்கு தலையை தடவி ஆறுதல் கூற, அவன் அழுதுவிட்டான்.
"மிக தூரம்" என்பதனை ஹஸனால் ஏற்றுக் காெள்ள முடியவில்லை. பிறகு ஹஸன் அடுத்த நாள், பெண்ணின் தாயிற்கு, தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டு, பேசிப் பார்த்தான். "தந்தையின் முடிவை மீறி எதையுமே செய்ய முடியாது" என்றே அவர்கள் கூறினார்கள். அந்த பெண்ணை, பேசித்தந்த பெண் ஆசிரியப் பயிலுனரிடம் ஹஸன், நடந்த விடயத்தை கூறினான். அதற்கு அவள், "தூரம் கூட மட்டுமல்ல; உங்களுக்கு பொறுப்புணர்வு கூட, சகோதரி ஒருத்தி இருக்கிறாள்; தந்தைக்கும் சுகமில்லை; நீங்கள் தான் குடும்பத்தில் மூத்தவன்; உங்களுக்கு ஆசிரியத் தொழில் கிடைக்க இன்னும் ஒரு வருடம் செல்லும்; சம்பாரித்தாலும் வீட்டை தான் முதலில் பார்க்க வேண்டும்; மகளை கொடுத்தாலும் எந்த முன்னேற்றமும் இருக்காது; என்றெல்லாம் அவர்கள் நினைத்து இருக்கிறார்கள்" என்று ஹஸனிடம் கூறினாள். அதைக் கேட்ட ஹஸனிற்கு மிகவும் கஷ்டமாகியது. "ஏதாவது உதவி செய்யுங்கள்" என்று ஹஸன் அவளிடம் கேட்டதற்கு, ஹஸனை தொந்தரவாக நினைத்து, அவனுடைய தொலைபேசி இலக்கத்தை கூட அவள் Block செய்து விட்டாள். "தன் கவலைகளை கூறுவதற்கு கூட அவனுக்கென்றே நண்பர்கள் யாருமில்லை, யாரிடமும் கூறி எந்தவொரு பலனுமில்லை" என்று நினைத்த ஹஸன், நடந்த அனைத்தையும் அவனுடைய வாழ்க்கை கதையில் எழுதினான். பிறகு, உள்ளத்தில் தோன்றிய ஆசை, ஏக்கம், எதிர்ப்பார்ப்பு அனைத்தையும் வைத்து, கவலைகளையும், உணர்வையும் வெளிக்காட்டும் விதமாக நாஸிர் ஹஸன், 'ஏமாற்றம்' என்ற பெயரில் யதார்த்தமாக கவிதையொன்றினையும் எழுதினான்.
கண்ணில் காண்பவைகள் அனைத்திற்கும் நான் ஆசைப்படவில்லை பெண்ணே!ஆசைப்பட்ட உன்னையே காண நினைத்தேன் என் கண்ணே!
உன்னை பார்த்த முதல் நாளே 'இனி தனிமை வேண்டாம், நீ தான் வேண்டும்' என்று ஏங்கியது என் மனமே!
அழகு, குணம், படிப்பு, நல்ல குடும்பம் என்று அனைத்துமே உன்னிடம் காணப்பட, நீயே வேண்டும் என்று உன்னையே எதிர்ப்பார்த்தேன் என் உயிரே!
அனைவரும் விருப்பம் தெரிவித்து, உன்னை எனக்கு பேசி வைத்தால், நாமிருவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் நாளை எண்ணி, கனவு காண்பேன் நானே!
பொறுப்புணர்வு கூட என்றாலும், பொறுப்பாக நீ எனக்கு ஒப்படைக்கப்பட்டால், கண்ணை இமைகாப்பது போல காப்பேன் என் கண்ணே!
அழகு, பணம், சொத்து எதுவுமே இல்லையெனினும் என்னிடமுள்ள திறமை, தன்னம்பிக்கை, முயற்சியே போதும் உன்னை வாழ வைப்பதற்கு பெண்ணே!
"ஏமாற்றி விட மாட்டீர்களே" என்று உன்னை எனக்கு பேசித்தந்தவள், என்னிடம் கேட்ட போதே, "நீ தான் என் வாழ்க்கை துனை" என்று முடிவு செய்தது என் மனமே!
உன் கண்களே உன்னை ஏமாற்ற நினைத்தாலும், என் கண்கள் உன்னை என்றுமே ஏமாற்ற நினைத்ததில்லை என் கண்ணே!
அடி பெண்ணே! நீ யாரையுமே ஏமாற்றியதில்லை, நம்பிக்கையில், "எனக்கானவள் நீ தான்" என்று மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருந்து, கடைசியில் ஏமார்ந்தது நானே!
"நீ எனக்கில்லை" என்று என் நெஞ்சம் அறிய, என் கண்ணீர் மட்டும் அதை இன்னும் ஏற்க மறுக்க, என் ஏக்கத்தை நீ அறியவே கவிதையாக எழுதினேன் பெண்ணே!
இவ்வாறு ஹஸன், அனைத்தையும் வைத்து, தன் கவலைகளையும், உணர்வையும் வெளிப்படுத்தும் விதத்தில் கவிதையை எழுதினான். பிறகு, கல்லூரியில் ஆசிரியப் பயிலுனர்களின் உபதலைவரிடம், நாஸிர் ஹஸன் நடந்த விடயத்தையும், மனதிலுள்ள கஷ்டங்கள் அனைத்தையும் கூறி, அதனை ஒருவருக்கு வீடியோ எடுக்குமாறு கூறி, அந்த வீடியோவினை, அவனுடைய படத்தில் ஒரு காட்சியாக, 'ஏமாற்றம்' என்ற பெயரில் Youtube இல் போட்டான்.
பிறகு அந்த வீடியோவினை ஹஸன், பெண்ணின் தாய் பார்க்கும் படி செய்தான். அத்துடன் தன் மனதிலிருந்த கவலைகள் அனைத்தையும், வொய்ஸ் நோட் ஒன்றில் கூறி, அதனை தன் தந்தையுடைய வட்சப் இலக்கத்திலிருந்து, பெண்ணின் தாயிற்கு அனுப்பினான். அனைத்தையும் பார்த்து விட்ட அவர்கள், ஹஸனுடைய தாயிற்கு அழைப்பை மேற்கொண்டு "ஒன்றும் நினைக்க வேண்டாம்" என்று கூறி, ஹஸன் செய்த அனைத்து செயல்களையும், அவனுடைய தாயிடம் கூறினார்கள்.
" நாங்கள் ஏமாற்றிவிட்டோம்" என்று உங்களுடைய மகன் கூறி, 'ஏமாற்றம்' என்ற பெயரிலே கல்லூரியில் படக்காட்சியொன்றினை நடித்து போட்டிருக்கின்றார்; அதைப் பார்த்ததும் தான் மிகவும் கவலையாக இருந்தது" என்பதையும் அவர்கள், ஹஸனுடைய தாயிடம் கூறி மிகவும் கவலைப்பட்டார்கள். "அது மட்டுமட்டாமல், உங்களுடைய ஏழ்மையை காரணமாக வைத்து தான், நாங்கள் வேண்டாம் என்று கூறினோம்" என்று மகன் கூறியிருக்கிறார்; ஏழ்மை அதையெதையுமே நாங்கள் பார்க்கவில்லை; மாத்தளையில் இருந்து தெல்தோட்டைக்கு எவ்வளவு தூரம் என்று என் தந்தைக்கு தெரியாமல் அல்ல, "மிக தூரம் " என்ற ஒரே காரணத்தினாலே தான் நடக்காது என்று கூறினேன்" என்று அவர்கள் ஹஸனுடைய தாயிடம் கூறினாள். "இனிமேல் என்னுடைய மகனால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது" என்று ஹஸனுடைய தாய், அவர்களிடம் கூறினாள். பிறகு ஹஸனுடைய தாய், ஹஸனுக்கு தொலைப்பேசி அழைப்பை எடுத்து, அவர்கள் கூறிய அனைத்தையும் கூறி, ஹஸனுக்கு நன்றாக ஏசினாள்.
"அப்படியென்றால், நான் எதிர்ப்பார்த்தது நடக்காமல் போனதற்கு,' இது தான் காரணம்' என்று அந்த பெண் ஆசிரியப்பயிலுனர், என்னிடம் கூறிய அனைத்துமே பொய் தானா? அவள் கூறிய காரணங்களை கேட்டதிலிருந்து, எனக்கு வந்த கவலையினால் தானே இப்படியெல்லாம் நான் செய்தேன்" என்று ஹஸன் நினைத்து கவலைப்பட்டான். "இதில் யாருடைய தவறு" என்று ஹஸன், தன்னைத் தானே கேள்வி கேட்க, அவனுடைய மனம் கூறியது, "முழுவதுமே என்னுடைய தவறு தான்" என்று. "மிக தூரம், நடக்காது" என்று கூறியவுடனே , நான் அதை விட்டிருக்க வேண்டும்; அவர்கள் யாருடைய தவறும் இல்லை, எல்லாமே என்னுடைய தவறு தான்" என்பதை ஹஸன் கடைசியில் தான் புரிந்து கொண்டான்.
4th Block Teaching உம் வந்தது. இதுவே நாஸிர் ஹஸனுடைய கல்லூரி வாழ்க்கையில் கடைசியாவது Block Teaching ஆகும். அட்டாளைச் சேனை அல் முனீரா பெண்கள் பாடசாலைக்கு நாஸிர் ஹஸன் Unit Collection இற்கு சென்றான். பாடத்தை கற்பித்து கொடுப்பதற்காக வழக்கம் போல தரம் 7,8,9,10 ஆம் வகுப்புக்களை கேட்டு, பாடநேர அட்டவனையையும் ஹஸன் பெற்றுக் கொண்டான். அதற்கு பிறகு கற்பித்து கொடுப்பதற்கு ஏற்ற வகையில் Lesson மற்றும் Scheme ஐ எழுதினான். டாக்டர் பட்டம் பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரே இம்முறை மேற்பார்வை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இரண்டு வார Block Teaching க்கான முதல் நாள் வந்தது. பாடத்தை கற்பித்து கொடுக்க, அல் முனீரா பெண்கள் பாடசாலைக்கு சென்றான். அப் பாடசாலை ஆயிரத்திற்குமேற்ப மாணவர்கள் தொகையை கொண்ட ஒரு பாடசாலையாக காணப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் காணப்பட்டனர். 3 Block teaching ஐயும் முடித்த, அனுபவத்துடன், கடைசியாவது Block teaching ஐ ஹஸன் மேலும் சிறப்பாக மேற்கொண்டான். அனைத்து மாணவர்களுக்கும் விளங்கிக் கொள்ளும் வகையில் அவனால் கற்பித்துக் கொடுக்க முடிந்தது.
அப்பாடசாலையில் நூலகத்திற்கு பொறுப்பான ஆசிரியை ஒருவர், நாஸிர் ஹஸனுக்கு அறிமுகமானார். அவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் மற்றும் உளவியல் உளவளத்துணை கலைமாணிப் பட்டதாரி ஆவார். துணை விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். இவர் நிறைய கவிதை புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவர்களிடம் ஹஸன், தன்னைப் பற்றி, தன்னுடைய கனவுகளைப் பற்றியெல்லாம் கூறினான். ஹஸனை நன்றாக புரிந்து கொண்ட அவர்கள், ஹஸனை மேலும் ஊக்கப்படுத்தினார். அந்த ஆசிரியருடைய, முதலாவது கவிதைத் தொகுப்பு 'கவிதை என்றான கிறுக்கல்கள் 2013 இல் வெளிவந்தது. அவரது இரண்டாவது தொகுப்பு 'வரிகளில் நழுவும் கடல்' எனும் கவிதை புத்தகத்தில் ஒன்றினை, அதன் முன் பக்கத்தில், "சாதிக்கத் துடிக்கும் இளைஞன் நாஸிர் ஹஸன் அவர்களுக்கு அன்புடன்" என்று எழுதி, கையொப்பமிட்டு, மேலும் "சாதனை புரிய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்" என்று எழுதி நாஸிர் ஹஸனுக்கு பரிசாக வழங்கினார்.
Block teaching 10 நாட்களில் 9 ஆவது நாள், டாக்டர் பட்டம் பெற்ற மேற்பார்வை விரிவுரையாளர் ஹஸனை மேற்பார்வை செய்ய வந்தனர். அப்போது ஹஸன் தரம் 10 மாணவர்களுக்கு, இற்கு இஸ்லாம் பாடத்தை கற்பிக்க சென்றான். பாடம் முடிவடைந்ததற்கு பிறகு, விரிவுரையாளர், ஹஸனின் கற்பித்தல் செயற்பாடுகளிலுள்ள சில பலவீனங்களையும் எடுத்துக் கூறினார். அவ்வனைத்தையும் ஏற்றுக் கொண்டு, சரி செய்து, கற்பித்தல் செயற்பாடுகளை ஹஸன் மேற்கொண்டான்.
அடுத்த நாள், Block teaching உடைய கடைசி நாள். அப்பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள் சிலர் 'இந்த பாடசாலையையே Intenship இற்கு கேட்டு, இங்கு வாருங்கள்' என்று ஹஸனிடம் கேட்டுக் கொண்டனர். தரம் 7 மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஹஸனுக்கு சிறந்த பரிசு ஒன்றினை வழங்கினார்கள். அனைத்து மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்து, பாடசாலையிலிருந்து விடை நாஸிர் ஹஸன் பெற்றான். அத்துடன் 4th Block teaching உம் முடிவடைந்தது. கல்லூரி வாழ்க்கையிலே 4 Block Teaching ஐயும் முழுமையாக முடித்து, ஆசிரியத் தொழிலுக்கான, சிறந்தவொரு அனுபவத்தை நாஸிர் ஹஸன் பெற்றுக் கொண்டான்.
கல்லூரி வாழ்க்கையிலே நாஸிர் ஹஸன், கவலைகளினாலும் கஷ்டங்களினாலும் துவண்டு போன ஒவ்வொரு தடவையும் அவனுக்கு மிகவும் ஆறுதலாக பக்கபலமாக இருந்து, "நாஸிர் ஹஸன் பெரியதொரு சாதனை படைப்பதை நான் பார்க்க வேண்டும்" என்று அவனை ஊக்கப்படுத்திய இஸ்லாம் பாட பெண் விரிவுரையாளர், "அவர்களே தன்னை, Intenship இல் மேற்பார்வை செய்ய வர வேண்டும்" என்று நாஸிர் ஹஸன் மிகவும் எதிர்ப்பார்த்தான். ஆனால் அவர்கள் Tranfer ஆகி கல்லூரிக்கு வெளியிலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு சென்றிருந்தார். அதனால் தான் எதிர்ப்பார்த்தது நடக்கவில்லை என்று நினைத்து கவலைப்பட்டான். என்றாலும் நாஸிர் ஹஸனுடைய மனம் கூறிக்கொண்டே இருந்தது, "மீ்ண்டும் அவர்கள் தன் கல்லூரிக்கு வருவார்கள்" அத்துடன் Intenship இற்கு அவர்கள் தான், தன்னை மேற்பார்வை செய்ய வருவார்கள்." என்று. அப்படியெல்லாம் நினைத்த ஹஸனின் மனதிற்கே ஒரு கேள்வி, எப்படி இது சாத்தியமாகும்" என்று. ஒரு கேள்வி. அவனுடைய மனம் கூறியது "எப்படியாவது நடக்கும்" என்று.
தான் எதிர்ப்பார்த்துள்ள, தன்னுடைய மனம் கூறிய அனைத்தையுமே, நாஸிர் ஹஸன், இஸ்லாம் பாட பெண் விரிவுரையாளரிடம் அடிக்கடி கூறினான். "வகுப்பு தோழிக்கு மட்டும் எம்பது புள்ளிகளை போட்டு விட்டு சென்றீர்கள், எனக்கு இதுவரை Block Teaching இல் கிடைத்த புள்ளிகள் ஒன்றிலுமே மிகச் சிறந்த புள்ளி இல்லை; Intenship நேரத்திலாவது நீங்கள் தான், என்னை மேற்பார்வை செய்து எம்பதிற்கும் மேல் புள்ளிகளை போட வேண்டும்" என்று ஹஸன் இஸ்லாம் பாட பெண் விரிவுரையாளரிடம் கூறினான். அதற்கு அவர்கள், "இன்ஷா அல்லாஹ் நீங்கள் துஆ செய்யுங்கள் என்று ஹஸனிடம் கூறினார்கள்.
இஸ்லாம் பாட பெண் விரிவுரையாளர் நாஸிர் ஹஸனின் மீது வைத்திருந்த மிகுந்த நம்பிக்கையும், உண்மையான பாசமும் தான் ஹஸனை அவ்வாறு எதிர்ப்பார்க்க வைத்தது. திடிர் என்று ஒரு நாள் இஸ்லாம் பாட பெண் விரிவுரையாளருக்கு மீண்டும் அட்டாளைச் சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு Tranfer கிடைத்தது. அவர்கள், நாஸிர் ஹஸனை கல்லூரியில் வைத்து கண்ட போது, மிகவும் மகிழ்ச்சியுடன் அதனை நாஸிர் ஹஸனிடம் கூறி, "எல்லாமே உங்களுடைய துஆ தான் ஹஸன்!" என்றார்கள். ஹஸனும் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். "என்னுடைய வாழ்க்கையிலே நிறைய விடயம் இப்படி தான், எதை நினைக்கிறேனோ, அதெல்லாம், நானே எதிர்ப்பாராத நேரத்தில் அப்படியே நடக்குது" என்று ஹஸன் அவர்களிடம் கூறினான். "உங்களுடைய கடைசி Block Teaching நேரத்தில் தான் இந்த விடயம் நடந்தது" என்று ஹஸனிடம் கூறினார்கள். பிறகு ஹஸன், Intenship இற்கு தன்னை கேட்டு எடுக்குமாறு அவர்களிடம் கூற, அதற்கு அவர்களும் சரி என்றார்கள். எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கை அப்படி ஒரு ஆச்சரியத்தை தந்த போது, அவனுடைய மனதிலிருந்த கவலைகள் அனைத்துமே பறந்து போய், அவன் மனதில் சந்தோஷம் நிலைப்பெற்றது.
2025 ஜூன் 26 ஆம் திகதி, நாஸிர் ஹஸனுடைய 26 ஆவது பிறந்த தினத்திற்கு வெளியிட திட்டமிருந்த Turning Point திரைப்படம், குறித்த தினத்தில் வெளியாகவில்லை. அதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் செல்வாக்கு செலுத்தின. முக்கியமாக பதுளை மாவட்டத்தில் வெலிமட நகரிற்கு சென்று எடுக்கப்படவிருந்த காட்சிகள் இன்னும் எடுக்கப்படாமையினாலும், படத்தில் வருகின்ற 8 பாடல்களில் 5 பாடல்களுக்கான விடியோ இன்னும் தயாரிக்கப்படாததனாலும் படம் வெளிவர தாமதமாகியது. அத்துடன் Real Life இல் தன்னைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் நாஸிர் ஹஸன், படத்திற்கு அழகாக வீடியோ எடுக்க, அவனுடைய Performance ஐ வீடியோ எடுக்க நல்ல Video Photograper ஒருவர் காணப்படவில்லை. நல்லொரு Camera ஒன்றும், சரியாக அமையவில்லை. படத்தில் Sound System ஒழுங்காக அமையவில்லை. இறுதிப்பரீட்சைக்கு காலம் நெருங்கியமை போன்ற பல்வேறுபட்ட காரணங்களும் படம் வெளியாகாமைக்கு செல்வாக்கு செலுத்தின. அப் படத்திற்காக முக்கியமாக கல்வியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கழைக்கழக மாணவர்கள் பலர் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாஸிர் ஹஸனுடைய வாழ்க்கை கதையினை முழுமையாக வாசித்த விரிவுரையாளர் ஒருவர், ஹஸனுடைய கதையினால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அன்று இரவிலிருந்து நல்லிரவு வரை, கதையை முழுமையாக வாசித்த அவர், அவனுடைய கதைக்கு Heart React Message ஒன்றை அனுப்பியிருந்தார். அதை பார்த்ததும் ஹஸனுக்கு விளங்கியது. 'அவர் கதையை முழுமையாக வாசித்து இருக்கிறார்' என்று. அடுத்த நாள் விரிவுரையாளர், ஹஸனை சந்தித்த போது, "கதை மிகவும் நன்றாக இருந்தது; கதையில் ஒவ்வொரு பந்தியும், அடுத்த பந்தியை வாசிப்பதற்கான ஆர்வத்தை தூண்டும் விதமாக காணப்பட்டது; நான் சென்ற இடமெல்லாம் அதை தொடர்ச்சியாக வாசித்தேன்; கதையை இடையில் நிறுத்தவே என்னால் முடியவில்லை; முழுமையாக கதையை வாசித்து முடிய அன்று நல்லிரவாகியது; ஒரு பெண் வாசிப்பதற்காக எழுதிய கதையை, இன்று அனைவருமே வாசிப்பதும் கதையை முற்றிலும் Real ஆக எழுதியதும் தான் கதையினுடைய சிறப்பு; கதை மிகவும் நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள்" என்று அவர் ஹஸனிடம் கூறினார். அதற்கு ஹஸன், "ஜஸாமுல்லாஹுஹைர்" என்று கூறினார்.
அவர் அக் கதையைப் பற்றியும், நாஸிர் ஹஸனுடைய எழுத்தாற்றலை பற்றியும் அங்கிருந்த மற்றைய விரிவுரையாளர்களிடம் கூறி ஹஸனை பாராட்டினார். 'அக்கதையை கல்லூரியினாலே ஒரு புத்தகமாக வெளியிடவும் அதற்கு அவர் அணிந்துரையை எழுதித் தருவதாகவும் ஹஸனிடம் கூறினார். கதையை புத்தமாக வெளியிடுவதற்கான முழு உதவிகளையும் விரிவுரையாளர்கள் அனைவரும் ஒன்றினைந்து செய்து தருவதாகவும் விரிவுரையாளர்கள் ஹஸனிடம் கூறினார்கள். இறுதிப் பரீட்சை முடிவடைந்ததற்கு பிறகு, அடுத்த கட்டமாக இதற்கு முயற்சிகளை செய்வோம்" என்று விரிவுரையாளர்கள் ஹஸனிடம் கூறினார்கள்.
இதைக் கேட்ட ஹஸனால் பெரிதாக சந்தாேஷப்பட முடியவில்லை. காரணம், நாஸிர் ஹஸனுடைய வாழ்க்கை கதையின் ஆரம்பம் ஒரு வரலாறாக காணப்படுவதினால், கதையினுடைய முடிவு நிச்சியமாக ஒரு சரித்திரமாகவே அமைய வேண்டும்" என்று அவன் நினைத்தனால் தான். தன்னுடைய நிஜ வாழ்க்கை கதையை, தொடர்க் கதையாக நாஸிர் ஹஸன் எழுதியது, அக்கதை அனைவருக்கும் Motivate ஆன Real Movie ஆக வெளிவர வேண்டும் என்பதினாலாகும். தன்னுடைய நிஜ வாழ்க்கை கதை, சிறந்தவொரு திரைப்படமாக வெளிவந்து, அது பெரிதொரு சாதனை படைக்க, அவ்வனைத்துமே NASIR HASAN 100% REAL LIFE STORY என்ற கதையில் எழுதப்பட்ட பிறகு தான், கதை ஒரு புத்தமாக வெளிவர வேண்டும்" என்று நாஸிர் ஹஸன் நினைத்து, சரித்திரத்திற்காக தயாராகினான்.
திடீரென்று நாஸிர் ஹஸனுடைய தந்தை நோய் வாய்ப்பட்டார். அவர் பேசும் போது, பேச்சு சரியாக வரவில்லை. அவரை வைத்தியசாலையில் அனுமதித்து, Scan செய்து பார்க்க, மூளையில் கட்டியொன்று இருப்பதாக தெரியவந்தது. "அதனால் தான், தந்தைக்கு அப்படி" என்று தெரிய வந்தது. அவரால் எந்த வேலையுமே செய்ய முடியாமல், தொழிலுக்கும் செல்ல முடியாமல் போனது. அதனால் வீட்டு செலவுகளுக்கும், வீட்டு வாடகைக்கும் கூட பணமில்லாமல் குடும்பம் மிகவும் கஷ்டத்துக்குள்ளாகியது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, ஹஸனுடைய தந்தையின் சகோதரியுடைய மகளின் கணவர் தான் ஹஸனுடைய தந்தையினுடைய வைத்திய செலவுக்கும், குடும்பத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, தன் குடும்பத்தை போலவே அவர், ஹஸனின் குடும்பத்தை நன்றாக கவனித்தார். சொந்தத்திலும் கூட வசதி படைத்தவர்கள் இருக்க, அவர்கள் யாருமே செய்யாத உதவியை, ஹஸனுடைய மாமியினுடைய மகளை திருமண முடித்ததனால் சொந்தமாகிய, அந்த சகோதரர் ஹஸனுடைய குடும்பத்திற்காக அவ்வளவோ உதவிகளை செய்தார்.
நாஸிர் ஹஸனுடைய தந்தையின் நிலமையை தெரிந்து கொண்ட கல்லூரியில் வகுப்புக்கு பொறுப்பான விரிவுரையாளரும், ஹஸனுடைய செலவுகளுக்கு உதவ முன்வந்தார். ஆனால் ஹஸன் அவரிடம் "வேண்டாம் சேர், எனக்கு அப்படி விருப்பமில்லை" என்றான். ஹஸன் அவ்வாறு கூற காரணம் "தனக்கு உதவ முன்வருபவர்களுடைய கஷ்டத்தையும் ஹஸன் சற்று சிந்திப்பதனால்" தான். யாரிடமுமே ஹஸன் எந்த உதவியையுமே கேட்பதுமில்லை. தந்தாலும் வேண்டாமென்பான். அப்படி இருக்க, கல்லூரியில் வணிகக் கல்விக்கு பொறுப்பான விரிவுரையாளர், ஹஸனுடைய தந்தைக்காக ஏதாவது நிதி உதவியை செய்து கொடுக்க வேண்டும் முடிவெடுத்தார். அவ் விரிவுரையாளரிடம் ஹஸன், எவ்வளவு கூறியும் அவர் புரிந்து கொள்ளவில்லை. "மனிதருக்கு மனிதர் உதவி செய்ய தான் அல்லாஹ் மனிதனை படைத்தான்" என்று ஹஸனிடம் கூறி, அவர் கல்லூரியிலுள்ள அனைத்து விரிவுரையாளர்களிடமிருந்தும் பணம் சேகரித்து, மொத்தமாக ஐம்பதாயிரம் ரூபாவை ஹஸனுடைய தந்தைக்கு நிதி உதவியாக வழங்கினார். மேலும் கல்லூரியில் ஆண் ஆசிரியப்பயிலுனர்களிடமிருந்தும் பதினாராயிரம் நிதி உதவி கிடைக்கப் பெற்றது.
கண்டி அரச வைத்தியசாலையில் ஹஸனுடைய தந்தைக்கு Operation செய்து, மூளையிலிருந்த கட்டியின் சிறுதுண்டை எடுத்து அதனை ஆய்வு செய்தனர். அது கென்சர் என்று Report வந்தது. மேலும் அந்த கென்சர் எந்தவொரு காரணமுமே இல்லாமல் இயல்பாகவே வந்திருப்பதாகவும் Report ல் வந்திருந்தது. நன்றாக எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்தவர், அனைவருக்குமே தேவையுடைய மனிதராக காணப்பட்ட அவருக்கு போய் இப்படியானதை நினைத்து அனைவரும் கவலைப்பட்டனர். அவரிற்கு ஏற்பட்ட நோயினை கேள்விப்பட்டவுடன், பல இடங்களிலிருந்து மக்கள் அவரைப் பார்க்க வருகை தந்தனர். "மூளையிலுள்ள கட்டியை Operation செய்து முழுமையாக எடுத்தால் மாத்திரமே அவரை குணமாக்க முடியும், இல்லையென்றால் மூளையில் கட்டியினால் ஒவ்வொரு அங்கமும் செயழிப்பதாக வைத்தியர் கூறினார். கட்டி நன்றாக பெரிதாக இருப்பதனால் Opration பண்ணி எடுப்பதற்கு கஷ்டம், ஆபத்து என்ற படியால், கட்டியை வளரவிடாமல் தடுப்பதற்காக வேண்டி மருந்துகள் கொடுக்கப்பட்டன. மருந்துகளை குடித்து கொண்டு, மிகவும் கஷ்டமான நிலையில் தந்தை கஷ்டப்பட்டார். "இனிமேல் தந்தையால் எந்த தொழிலையும் செய்ய முடியாது, நான் தான் Intenship காலப்பகுதியில் ஏதாவது வருமானம் வருகின்ற வேலையொன்றை செய்து என்னையும் என் குடும்பத்தை பொறுப்பாக பார்க்க வேண்டும்" என்று ஹஸன் நினைத்தான்.
கற்பித்தலில் தேசிய டிப்ளோமா இறுதிப் பரீட்சைக்கான நாளும் நெருங்கியது. "பரீட்சையில் சாதாரண சித்தியைப் பெற்றாலே போதும்" என்றே ஹஸன் நினைத்திருந்தான். இறுதி Block teaching புள்ளிகள் காட்சிப்படுத்தப்பட்ட போது, கல்லூரியில் 60 இற்கு கீழே புள்ளிகளை பெற்றது நாஸிர் ஹஸன் ஒருவன் மாத்திரமே. முதல் மூன்று Black Teaching இலும் 64,73,69 என்று புள்ளிகளை பெற்றவன் நான்காவது கடைசி Block teaching பெற்ற புள்ளி வெறும் 54 புள்ளி தான். இதைப் பார்த்தவுடன் ஹஸன் கவலைப்படவில்லை. "Block teaching புள்ளிகள் அனைத்தும் நம்முடைய திறமைக்கும், முயற்சிக்கும் ஏற்ப கிடைக்கும் புள்ளிகள் அல்ல; அது நம்மை மேற்பார்வை செய்வதற்காக அமைகின்ற விரிவுரையாளர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப கிடைக்கும் புள்ளி தான்" என்று ஹஸனின் மனம் கூறியது.
"டாக்டர் பட்டம் பெற்ற விரிவுரையாளரினால் கிடைக்கப்பெறும் புள்ளி குறைவாகத் தான் இருக்கும், என்பது அனைத்து ஆசிரியப் பயிலுனர்களும் அறிந்தவொரு விடயம். அவர் மேற்பார்வை செய்த மற்றைய ஆசிரியப்பயிலுனருக்கும் குறைவாகவே புள்ளியை வழங்கியிருந்தார். அவர் 54 புள்ளி வழங்கியதை ஹஸன், வைராக்கியமாக மனதில் எடுத்தான். "இறுதிப் பரீட்சையில் சிறந்த சித்தியொன்றை எடுத்துக் காட்ட வேண்டும்" என்ற வெறி ஹஸன் மனதில் வந்தது. "சிறந்த சித்தியைப் பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல, அனைத்து பாடங்களிலும் 75 இற்கும் மேலே புள்ளிகளை பெற வேண்டும்; அதற்கென்று முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது," என்றெல்லாம் நினைத்த ஹஸன், இறுதி நேரத்தில், அவனுடைய அனைத்து கூத்துக்களையும் விட்டு விட்டு படிப்பில் கூடுதலான கவனத்தை செலுத்தினான்.
கற்பித்தலில் தேசிய டிப்ளோமா இறுதிப் பரீட்சைக்கான நாள் வந்தது. பெரும் எதிர்ப்பார்ப்புடன் ஹஸன் பரீட்சை எழுதச் சென்றான். ஆரம்பத்தில் நடைபெற்ற பாடங்களினுடைய பரீட்சை வினாத்தாள் மிக இலகுவாக அமைந்தது. மிகவும் நன்றாக பரீட்சைமை எழுதினான். இடையில் சில பாடங்கள் சற்று கஷ்டமாக அமைந்தாலும், அவனால் முடியுமானளவு முயற்சி செய்து, பரீட்சையை எழுதினான். ஒவ்வொரு நாளும் இரண்டு இரண்டு பாடங்களுக்கான பரீட்சை நடைபெற 5 நாட்களில் முக்கியமான பாடங்களினுடைய பரீட்சை நிறைவு பெற்றது. பரீட்சை முடிந்தவுடன் ஹஸனின் மனதில் பெரும் சந்தோஷமும், நிம்மதியும் குடிகொண்டது. அதற்கு பிறகு விடுமுறையில் ஹஸன் வீட்டிற்கு சென்றான். அங்கு சென்று, அடுத்து நடைபெறவிருக்கும் General Subject இனுடைய பரீட்சைக்காக படித்தான். ஒரு வார விடுமுறையையும் சிறப்பாக கழித்து விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்றதற்கு பிறகு, General Subject இனுடைய பரீட்சையும் நடைபெற்றது. அதனையும் ஹஸன், முடியுமானளவு நன்றாக எழுதி முடிக்க, கற்பித்தலில் தேசிய டிப்ளோமா இறுதிப் பரீட்சை முழுமையாக நிறைவுற்றது.
2 வருட கல்லூரி வாழ்க்கை முடிவடைந்த பிறகு, 1 வருட Intenship இற்காக கிடைக்கப் பெறும் பாடசாலைப் பற்றி பல கனவுகள் நாஸிர் ஹஸனுடைய மனதில் காணப்பட்டது. அத்துடன் அவனுடைய குடும்ப கஷ்ட நிலை, பொருளாதார பிரச்சினையை கருத்தில் கொண்டு முக்கியமாக பல விடயங்களை ஹஸன் எதிர்ப்பார்த்தான். "கிடைக்கும் பாடசாலை, Boding வசதியுள்ள பாடசாலையாக காணப்பட்டால், வாடகை செலவு எதுவுமில்லை; அத்துடன் அப் பாடசாலை, Exam Central ஆகவுள்ள பாடசாலையாக இருந்தால் விடுமுறைகளும் அதிகமாக கிடைக்கும்; விடுமுறை காலங்களில் வீட்டிற்கு சென்று, ஏதாவது வருமானம் பெறுகின்ற வேலையொன்றை செய்ய முடியும்; அப் பாடசாலையில் வகுப்புக்கள் A B என்று Parallel ஆக காணப்பட்டால், Lesson களை எழுதுவதில் சிரமமுமிருக்காது; அக்கரைப்பற்று - கண்டி பேரூந்து, அக்கரைப்பற்றிலிருந்து ஒலுவில் வாயிலாக குறுக்கு பாதையில் தீகவாபியிற்கு சென்று கண்டிக்கு செல்வதனால், கிடைக்கும் பாடசாலை, அக்கரைப்பற்றிலிருந்து ஒலுவிலிற்குள் அமைந்த பாடசாலையாக அது காணப்பட வேண்டும்" என்றெல்லாம் ஹஸன் பல எதிர்ப்பார்ப்புக்களை மனதில் வைத்திருந்தான். அவன் எவ்வளவு தேடிப் பார்த்தும் அனைத்துமே சரியாக அமைகின்ற பாடசாலையொன்று அவனுக்கு கிடைக்கவில்லை.
ஒருமுறை ஹஸன், கல்லூரியில் வகுப்பில் இருக்கின்ற சமயம், ஆண் ஆசிரியப் பயிலுனர் ஒருவர், திடிரென்று ஹஸனிடம், "Intenship இற்கு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பாடசாலையை தெரிவு செய்யுங்கள்; அப்பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்களையும் வைக்க முடியும்; அங்கு Boding வசதிகளும் உண்டு; அப்பாடசாலையில் விசேடமாக நீச்சல் தடாகமொன்றும் உள்ளது, Video Shooting எல்லாம் மேற்கொள்வதற்கு சிறப்பான இடம்; நீச்சல் தடாகத்தையும் சிறப்பாக உபயோகிக்கலாம்" என்றெல்லாம் ஹஸனிடம் கூறினார். அப்பாடசாலைப் பற்றி விசாரித்துப் பார்ப்பதற்கான ஆர்வம் ஹஸனுக்கு ஏற்பட்டது. அப் பாடசாலையைப் பற்றி விசாரித்து பார்க்கையில், அவன் எதிர்ப்பார்த்த Free Boding, Easy Travel, Parallel classes, Exam Central அனைத்துமே சரியாக அமையப் பெற்றுள்ள பாடசாலையாக அது காணப்பட, ஹஸன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பிறகு ஹஸன், Intenship இற்காக அப்பாடசாலையை தெரிவு செய்தான்.
ஆண் ஆசிரியப் பயிலுனர்களில், நாஸிர் ஹஸனை தவிர வேறு யாருமே அப்பாடசாலையை தெரிவு செய்யவில்லை. அப்பாடசாலையின் சிறப்பம்சங்களை பற்றி ஆண் ஆசிரியப்பயிலுனர்கள் சிலரிடம் ஹஸன் எடுத்துக் கூறி,அப்பாடசாலையை தெரிவு செய்யுமாறு அவர்களிடம் கூறினான். ஹஸன் கூறியவற்றையெல்லாம் புரிந்து கொண்ட ஆண் ஆசிரியப்பயிலுனர் இருவர் அப்பாடசாலையை Intenship இற்கு தெரிவு செய்தனர். அதில் ஒருவர் யாரென்றால், கல்லூரியில் ஹஸன் நடித்த படத்தில், காட்சியொன்றினை சிறப்பாக வீடியோ எடுத்த வணிகப் பாட ஆசிரியப் பயிலுனர். மற்றையவர் யாரன்றால், நாஸிர் ஹஸனுடன் இணைந்து, அவனுடைய படத்தில் சிறப்பான நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய கணிதப் பாட ஆசிரியப்பயிலுனர். ஒரு சில வாரங்களில் Intenship இற்கான பாடசாலைப் பெயர்பட்டியலும் வெளியானது. நாஸிர் ஹஸன் ஆசைப்பட்டது போலவே, அவனுக்கு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி கிடைக்கப் பெற்றது. அத்துடன் அந்த இரு ஆண் ஆசிரியப்பயிலுனர்களுக்கும் அதே பாடசாலை கிடைக்கப்பெற, ஹஸனும் மகிழ்ச்சியடைந்தான். "வாழ்வில் நடக்க விருப்பது சரியான நேரத்தில் நடைபெறும்" என்ற விடயத்தை ஹஸன், இந்த சம்பவத்தின் மூலம் புரிந்து கொண்டான்.
இஸ்லாம் மற்றும் தமிழ் பாட ஆசிரியராக நாஸிர் ஹஸன், 1 வருட காலத்திற்கு சேவையாற்றப் போகின்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பாடசாலையைப் பற்றிய தேடல்களை சமூகவலையத்தளங்களினூடாக மேற்கொண்டான். கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேசிய பாடசாலையாகவும் அகில இலங்கையில் இரண்டாவது முஸ்லிம் தேசிய பாடசாலையாகவும் மிளிர்ந்து கொண்டிருக்கும் பாடசாலையாக அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சிறப்புப் பெற்றுள்ளது" என்பது அவனுக்கு தெரிய வந்தது. இப்பேற்பட்ட சிறப்புமிக்க பாடசாலையில், தான் சேவையாற்றப்போவதை நினைத்து, ஹஸன் பெருமளவு மகிழ்ச்சியடைந்தான்.
அன்று கல்லூரி வாழ்க்கையின் இறுதி நாள். ஒரு வருட Intenship ஐ மேற்கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நியமனக் கடிதத்தையும் ஹஸன் பெற்றுக் கொண்டான். "கல்லூரி வாழ்க்கை முடிவடைந்து விட்டதே" என்ற கவலை ஹஸனின் மனதில் எழத்தொடங்கின. "எதையும் நினைத்து கவலைப்படக்கூடாது; இனி எந்தவொரு விடயத்திலும் உடைந்து போகக் கூடாது, இனிவரும் சந்தோஷத்தை மாத்திரமே நினைவு கூற வேண்டும்" என்றெல்லாம் நினைத்து மனதை பலப்படுத்தினான். நிகழ்வு முடிந்தவுடன் நாஸிர் ஹஸன் முதலில், வகுப்பில் உளவியல் பாட விரிவுரையாளர்களை சந்தித்தான். கிடைத்திருக்கும் பாடசாலையை பற்றி கூறி, துஆக்களில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினான். "கல்லூரி வாழ்க்கையிலே இதுவரை நான் சந்தித்த எத்தனையோ ஆசிரிய மாணவர்களில், எனக்கு மிகவும் பிடித்த நான் விரும்புகின்ற, என்னுடைய சிறந்த மாணவன் என்றால் நீங்கள் தான்; வாழ்க்கையில் நீங்கள் பெரியொரு ஆளாக வருவதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன்." என்று அவர் நாஸிர் ஹஸனிடம் கூற, அவன் கண்கள் கலங்கின. அதற்கு பிறகு மற்ற அனைத்து விரிவுரையாளர்களையும் நாஸிர் ஹஸன் சந்திக்கச் சென்றான்.
தமிழ் பாட சிரேஷ்ட விரிவுரையாளரை சந்தி்த்த போது, "நீங்கள் எதிர்ப்பார்க்கிற எல்லாமே உங்களுக்கு சரியாக அமைகின்றது" என்று அவர் ஹஸனிடம் கூறினார். அதற்கு ஹஸன் "ஓஹ் சேர்" என்றான். "Intenship இற்கு யார் உங்களை மேற்பார்வை செய்ய வர வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகின்றீர்கள்?" என்று அவர் ஹஸனிடம் வினவினார். அதற்கு ஹஸன், "இஸ்லாம் பாட பெண் விரிவுரையாளர்" என்று பதிலளித்தான். அதற்கு அவர் "நாஸிர் ஹஸனிடமிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு நல்ல பண்பு என்னவென்றால் எதை கேட்டாலும் எப்போதும் உண்மையாக பதிலளிப்பதும், வெளிப்படையாக பேசுவதும் தான்" என்று அவர் ஏனைய விரிவுரையாளர்களிடம் கூறினார். " நீங்கள் விரிவுரையாளர் மட்டும் சேர், என்னுடைய திறனாய்வாளர்" என்று நாஸிர் ஹஸன், தமிழ் பாட சிரேஷ்ட விரிவுரையாளரிடம் கூறினான்.
ஒருவருடைய ஆக்கங்களிலுள்ள குறைகளை பார்க்காமல் நிறைகளை மாத்திரமே கூறி, அவரை மேலும் பல ஆக்கங்களை படைக்க ஊக்கப்படுத்தும் பணியையை தான் திறனாய்வு செய்கின்றது. நாஸிர் ஹஸன் எழுதிய நிஜவாழ்க்கை கதை, கவிதை, பாடல் வரிகள் மற்றும் AI ஐ வைத்து உருவாக்கிய பாடல்கள் அனைத்தும் தமிழ் பாட சிரேஷ்ட விரிவுரையாளரினால் திறனாய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில் முக்கியமாக நாஸிர் ஹஸன் எழுதிய அவனுடைய நிஜவாழ்க்கை கதையில் எத்தனையோ குறைகள் பல காணப்பட்டாலும் அதையெதுவுமே அவர் விமர்சிக்காமல், அதன் நிறைகளை மாத்திரமே அவர் சுட்டிக் காட்டினார். அதுவே நாஸிர் ஹஸனுக்கு மேலும் பல படைப்புக்களை படைப்பதற்கு உந்து சக்தியாக அமைந்தன.
கல்லூரியிலிருந்து நாஸிர் ஹஸன் செய்த அனைத்து செயற்பாடுகளையும் வைத்து "ஆளுமை வெளிப்படுத்துகை" என்று Form ஐ அவனுக்கென்றே தனியாக தயாரித்து வைத்திருந்தான். அதனை தமிழ் பாட சிரேஷ்ட விரிவுரையாளரிடம் ஒப்படைக்க, அவர் அதில் நாஸிர் ஹஸனுடைய நிஜவாழ்க்கை கதைக்கான குறிப்பை எழுதி கையொப்பமிட்டுத் தந்தார். "இவ்வளவு காலம் இலகுவான மொழிநடையில் எழுதப்பட்ட நிஜவாழ்க்கை கதையை, இதற்கு பிறகு இலக்கிய நயத்துடனும் அனைத்து அணிகளின் பொருத்தப்பாடுடன் ரசனைகளை கையாண்டும் கதையை எழுத வேண்டும்" என்று நாஸிர் ஹஸன் மனதில் நினைத்தான். "கதையினை வாசிக்கும் மாணவர்கள், கதையில் ஆசிரியரினால் எழுதப்பட்ட வரிகளை ஆராய்ந்து, அதன் மூலம் தமிழ் இலக்கணத்தையும் தமிழையும் தேடி கற்க வைக்க வேண்டும்" என்று நாஸிர் ஹஸன் நினைத்தான். நாஸிர் ஹஸனுடைய நிஜ வாழ்க்கை கதையினை திறனாய்வு செய்த தமிழ் பாட சிரேஷ்ட விரிவுரையாளர் நாஸிர் ஹஸனுடைய வாழ்க்கை கதையின் வெற்றிக்கு முக்கிய காரணமானது மட்டுமல்லாமல், அவனுடைய வாழ்க்கை கதையிலும் முக்கிய கதாபாத்திரமானர்.
தமிழ் பாட சிரேஷ்ட விரிவுரையாளரின் சிறந்த தோழராக காணப்பட்ட, வழிகாட்டல் ஆலோசனை பாடத்திற்கு பொறுப்பான விரிவுரையாளரும் கூட நாஸிர் ஹஸனுக்கு நிறைய அறிவுறைகளை வழங்கினார். அவர் கற்றுக் கொடுத்த "வழிகாட்டல் ஆலோசனை" என்ற பாடமே நாஸிர் ஹஸனுக்கு மிகவும் பிடித்த பாடமாக காணப்பட, அந்த பாடத்தை சிறப்பாக கற்றுத் தந்த அவரும், நாஸிர் ஹஸனுக்கு மிகவும் பிடித்த விரிவுரையாளராக, அவனுடைய மனதில் இடம் பிடித்தார். "குடும்ப பொறுப்புக்கள் அனைத்தயுமே இனி நீங்கள் தான் செய்ய வேண்டும்; பெற்றோரையும் நன்றாக கவனிக்க வேண்டும்" என்றெல்லாம் அவர் நாஸிர் ஹஸனுக்கு அறிவுறை வழங்கினார்.
அத்துடன் Nasir Hasan Network ஐ முழுமையாக மேற்பார்வை செய்து, நாஸிர் ஹஸனுடைய சமூக சேவையை வரவேற்று அது தொடர்பாக வாழ்த்துக்களை தெரிவித்து, குறிப்பை எழுதித் தந்த வணிகக் கல்விக்கு பொறுப்பான விரிவுரையாளர், நாஸிர் ஹஸனுடைய குடும்ப சூழ்நிலையை நினைத்து, மிகவும் கவலைப்பட்ட நாஸிர் ஹஸன் மீது மிகுந்த பரிவுணர்வு கொண்ட விரிவுரையாளராக காணப்பட்டார். அவரும் சில அறிவுறைகளை நாஸிர் ஹஸனுக்கு வழங்கினார். "சமூக சேவைகள் அனைத்தையும் சற்று நிறுத்தி விட்டு, இதற்கு பிறகு உங்களைப் பற்றி நினையுங்கள்" என்ற விடயத்தையும் அவர் ஹஸனுக்கு கூறினார். அதற்கு பிறகு நாஸிர் ஹஸன், தலைமைத்துவத்திற்கு பயிற்று வித்த Green Project இற்கு பொறுப்பான விரிவுரையாளரை சந்தித்து, அவருடைய வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டான்.
"ஓர் எழுத்து கூட கற்றுத் தராவிட்டாலும் ஆசிரியர் என்றால் அனைவரையும் மதிக்க வேண்டும்" என்ற விடயத்தை ஹஸன் பாடசாலை வாழ்க்கையில் கற்றுக் கொண்டான். கல்லூரியிற்கு சென்றதற்கு பிறகு அனைத்து விரிவுரையாளர்களையும் மதித்து, அனைவருடனும் நல்ல முறையில் உண்மையாக நடந்து கொள்ள, அனைத்து விரிவுரையாளர்களுக்கும் நாஸிர் ஹஸனை மிகவும் பிடித்து போனது. கல்லூரியிலிருந்து நாஸிர் ஹஸன் செய்த அனைத்து செயற்பாடுகளும் ஒவ்வொரு ஒவ்வொரு விரிவுரையாளர்களினாலும் மேற்பார்வை செய்யப்பட்டு, அதற்கு அவர்களினால் குறிப்பு எழுதப்பட்டு அவர்களினால் ஒப்பமிடப்பட்டு சான்றுப்படுத்தப்பட்டன.
கல்லூரியில் நாஸிர் ஹஸனை கண்டவுடன் " "கல்லூரி வர்த்தமானி இன்னும் வெளியாகவில்லையே! எப்போது வெளியாகும்?" என்று ஒவ்வொரு முறையும் அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கும், மற்றைய வகுப்புகளுக்கு உளவியல் பாடத்தை கற்றுக் கொடுத்த விரிவுரையாளரை நாஸிர் ஹஸன் இறுதியாக சந்திக்கச் சென்றான். கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முழுமையான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கியமை தொடர்பாக அவர் குறிப்பு எழுதி கையொப்பமிட்டு தந்தது மட்டுமல்லாமல், நாஸிர் ஹஸனுடைய அந்த சேவைக்காக, என்றுமே அவருடைய துஆவும் கட்டாயம் இருப்பதாகவும் அவர் நாஸிர் ஹஸனிடம் கூறினார். அவனுடைய அனைத்து ஆளுமைகளையும் திறமைகளையும் கல்லூரியில் வெளிப்படுத்த தான் யாரென்பதை, அனைவருக்கும் நிரூபித்தான்.
பிறகு, கல்லூரியில் வகுப்பில் அனைத்து ஆசிரியப்பயிலுனர்களையும் சந்தித்து, அனைவருக்கும் தன்னால் ஏதாவது கஷ்டங்கள், தவறுகள், மனக்கசப்புகள் நடந்திருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டு, "அனைவரும் எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியராக வர வேண்டும்" என்று நாஸிர் ஹஸன் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தான். இறுதியாக வகுப்புக்கு பொறுப்பான விரிவுரையாளர்களை வரவழைத்து, வகுப்பிலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து பரிசொன்றையும் வழங்கினர். இறுதியாக அவர்களுடன் இணைந்து குழு புகைப்படங்களும் எடுத்தனர். பிறகு கல்லூரியிலுள்ள ஆண் ஆசிரியப்பயிலுனர்களை சந்தித்து, அனைவருக்கும் "போய் வருகின்றேன்" என்று கூறி, அனைவருக்கும் நாஸிர் ஹஸன், அவனுடைய வாழ்த்துக்களை தெரிவித்தான்.
கல்லூரியில், பெருமளவு ஆதரவுகள் ஆசிரியப்பயிலுனர்களினால் நாஸிர் ஹஸனுக்கு கிடைக்கப் பெற்றன. "நிச்சியமாக வாழ்க்கையில் பெரியதொரு வெற்றியை நான் அடைவேன். அந்த வெற்றி, ஒரு தனிநபர் கொண்டாடும் வெற்றி அல்ல, அது கூட்டம் கொண்டாடுகின்ற வெற்றி, அந்த கூட்டத்தை தான் நான் உருவாக்கி வருகிறேன்" என்ற விடயத்தை நாஸிர் ஹஸன் அனைவரிடத்திலும் கூறினான். "பெற்றோர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியப்பயிலுனர்கள், பல்கழைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என்று அனைவருடைய ஆதரவும் நாஸிர் ஹஸனுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும்" என்றும் நாஸிர் ஹஸன் அனைவரிடத்திலும் கூறினான்.
"தன்னுடைய பிழைகளை தானே இனங்கண்டு யாவற்றையும் திருத்தி வாழ்க்கையை சீர்செய்ய வேண்டும்; எதிர்காலத்தில் சிறந்தவொரு ஆசிரியராக வருவது மட்டுமல்லாமல் அனைவருக்கும் மத்தியில் நல்லொரு மனிதராக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்" என்ற பாடத்தை கல்லூரி வாழ்க்கை நாஸிர் ஹஸனிற்கு கற்றுக் கொடுத்தது. நாஸிர் ஹஸன் எதையெதையெல்லாம், ஆசைப்படுகிறானோ எதிர்ப்பார்க்கிறானோ அவ்வனைத்தையுமே அல்லாஹ் அவனுக்கு நிறைவேற்றிக் கொடுத்தான். "அல்லாஹ்வுக்காக நான் என்ன செய்திருக்கின்றேன்" என்று நாஸிர் ஹஸன் தன்னைத் தானே கேட்க, அவன் மனம் கூறியது "இனிமேல் என்னுடைய அனைத்து செயற்பாடுகளும் அல்லாஹ்வுக்காக தான்" என்று. இறுதியாக நாஸிர் ஹஸன், கல்லூரியில் அனைத்து விரிவுரையாளர்களினதும் நன்மதிப்பை பெற்றுக் கொண்டு, கல்லூரியிருந்து விடைபெற்று, ஒரு வருட Intenship இனை மேற்கொள்வதற்காக 2025.10.13 ஆம் திகதி அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பாடசாலையில் இஸ்லாம் - தமிழ் பாட ஆசிரியராக பாடசாலையில் இணைந்தான்.
The continuation of the story will be updated soon.

