ஆசிரியர் சேர்க்கையில் புதிய கட்டுப்பாடு - வெளியான அதிரடி அறிவிப்பு!

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி இளங்கலைப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்குத் தேசிய தரநிலைகளுக்கு இணங்கும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

Follow Us On WhatsApp👇🏻https://whatsapp.com/channel/0029VawdKy29MF8tZee5dw3b

Post a Comment

Previous Post Next Post