தேசிய கல்வியற் கல்லூரிக்கான ஒன்லைன் விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான தகவல்
தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் 2025.11.07 ஆம் வெளியாகும். வர்த்தமானி அறிவித்தல் வெளியானதற்கு பிறகு, அதனை முழுமையாக வாசித்து, பாடங்களை தெரிவு செய்து, 3 பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 2026 ஜனவரி மாதம் நேர்முகப்பரீட்சை நடைபெற்று, 2026 பெப்ரவரி மாதம் கல்லூரிக்கான பதிவு நடைபெறும்.
பாடநெறியின் பெயர் " Higher National Diploma in Teaching ". (NVQ level -06) "உயர் தேசிய கற்பித்தல் டிப்ளமோ" என மாற்றப்படும். (NVQ நிலை -06) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படும். புதிய பாடங்கள் மற்றும் பாடப் பெயர்களின் மாற்றங்கள் புதிய வர்த்தமானியில் இடம்பெறும்.
ஆசிரியக் கனவை நனவாக்கிக் கொள்வதற்கு, ஆசிரியத் தொழிலை பெற்றுக் கொள்ள ஆர்வமுள்ள அனைவரும் தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பியுங்கள். 2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, 3 பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேசிய கல்வியற் கல்லூரி வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் உடனே உங்களுக்கு அறியத் தருவோம்.
தேசிய கல்வியற் கல்லூரி விண்ணப்பம் தொடர்பாக வலையத்தளங்களில் பரவி வருகின்ற போலியான தகவல்களை கண்டு ஏமாற வேண்டாம். என்றுமே தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான நம்பகமான தகவல்களையும் வழிகாட்டல்கள் ஆலோசனைகளை உடனுக்குடன் வழங்கும் ஒரே இலவச கல்வி வலையத்தளம் 'Nasir Hasan Network' என்ற ஒன்று மட்டும் தான் என்பது 2019,2020,2021 & 2022 உயர்தரப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து, Nasir Hasan Network இனூடாக வழிகாட்டல் ஆலோசனைகளை பெற்று கல்வியற் கல்லூரிக்கு சென்ற அனைத்து மாணவர்களும் அறிந்தவொரு விடயம்.
விண்ணப்பம் கோரப்படவுள்ள, தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள 2023 (2024) & 2024(2025) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள் ஆலோசனைகளை நாம் முற்றிலும் இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளோம்.
கீழுள்ள Link ஐ Click செய்து, Collage Of Education வழிகாட்டல் Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள். 👇https://chat.whatsapp.com/IExoJsI63cv9uPkCDEr3D5?mode=wwt
2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் இத்தகவலை மறக்காமல் Share செய்யவும்.👍

.gif)