தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான அனைத்து வழிகாட்டல் ஆலோசனைகள் - தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் Video

நாடளாவிய ரீதியில் 2023/24 மற்றும் 2024/25 ஆம் ஆண்டு  உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்து, தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கான  தேசிய கல்வியற்  கல்லூரி தொடர்பான அனைத்து வழிகாட்டல் ஆலோசனைகள் -  தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் Nasir Hasan Network Youtube Channel இனூடாக வழங்க தீர்மானித்துள்ளோம்.

2022 ஆம் ஆண்டில் விண்ணப்பம் கோரப்பட்ட 2019 & 2020 இல் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அனைத்து தகவல்களையும் நாம் வழங்கினோம்.

பின்னர் 2023 ஆம் ஆண்டில் விண்ணப்பம் கோரப்பட்ட 2021 & 2022 உயர்தரப் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் தேசிய கல்லூரிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு, பாடங்களை எவ்வாறு தெரிவு செய்வது, நேர்முகப் பரீட்சை, தெரிவுப் பட்டியல், கல்லூரியின் பிணைமுறி ஒப்பந்தத்தை எவ்வாறு நிரப்புவது தொடர்பான  முறையான முழுமையான வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 1000 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு, எந்தவொரு கட்டணங்களையும் அறவிடாமல் பாடங்களை தெரிவு செய்து கொடுத்து, பலரை கல்லூரிக்கு பிரவேசிக்க வைத்தோம்.

அது போன்று 2025 இல் இம்முறை விண்ணப்பம் கோரப்பட்டுள்ள தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு, பாடங்களை தெரிவு செய்வது எவ்வாறு, நேர்முகப்பரீட்சை தொடர்பான தகவல், பிணைமுறிவு ஒப்பந்தத்தை நிரப்புவது எவ்வாறு? தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான அனைத்து வழிகாட்டல் ஆலோசனைகளையும் Nasir Hasan Network Youtube Channel இனூடாக நாம் முற்றிலும் இலவசமாக வழங்குவோம்.

தேசிய கல்வியற் கல்லூரிக்கான விண்ணப்ப முடிவு திகதி 2025.11.28. அதனால் இப்போதைக்கு அவசரப்பட்டு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் நீங்கள் வர்த்தமானி அறிவித்தலை Print செய்து அதனை முழுமையாக வாசியுங்கள். நன்றாக வாசித்து எந்த பாடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முழுமையான தகைமைகள் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேசிய கல்வியற் கல்லூரிக்கான பாடத்தெரிவு விண்ணப்பித்தல் தொடர்பாக உங்களுடைய சந்தேகங்களை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு நாம் அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.  அத்துடன் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் Communication ஒன்றிற்கு சென்று பணம் கொடுத்தோ அல்லது யாரிடமும் விண்ணப்பித்து தருமாறு கூறி பணம் கொடுத்தோ விண்ணப்பிக்க தேவையில்லை. உங்களுக்கு நீங்களே உங்களுடைய தொலைபேசியின் மூலம் மிகவும் இலகுவாக உங்களால் விண்ணப்பிக்க முடியும்.

கல்லூரிக்கான பாடத் தெரிவு | கல்லூரிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு ? என்ற முக்கிய 2 தலைப்புக்களில் வீடியோஸ்களை நாம் மிகவும் விரைவில்  எம்முடைய Nasir Hasan Network Youtube Channel இல் Upload செய்வோம். 2023/24 மற்றும் 2024/25 இல் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் Youtube வீடியோக்களை பார்த்து, எம்முடைய முறையான வழிகாட்டல்கள் ஆலோசனைகளை பெற்ற பின்னர் கல்லூரிக்கு விண்ணப்பியுங்கள்.

அனைவரும் இப்போதே கீழுள்ள Link ஐ Click செய்து Nasir Hasan Network Youtube Channel ஐ Subscribe செய்து வைத்து கொள்ளுங்கள். ⬇️ https://youtube.com/@nasirhasannetwork?si=w1AA3S_8mac8t_eO

Collage of Education தொடர்பான சந்தேகங்களுக்கும் உதவிகளுக்கும் கீழுள்ள Link ஐ செய்து எம்முடைய Whatsapp Group ல் இணைந்து கொள்ளுங்கள். ⬇️  https://chat.whatsapp.com/Hp3KQyA3k7DLKw3Nc0L2SW?mode=ems_copy_t

தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் விரைவாக பெற்றுக் கொள்ள, கீழுள்ள View Channel ஐ Click செய்து Follow Channel என்பதை Click செய்யவும். ⬇️ https://whatsapp.com/channel/0029VawdKy29MF8tZee5dw3b

2023/24 மற்றும் 2024/25 இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும், உங்களுடைய அனைத்து Whatsapp Groups களுக்கும் இத்தகவலை மறக்காமல் Share செய்யவும்.👍🏻

Post a Comment

Previous Post Next Post